குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௫௭
Qur'an Surah Al-A'raf Verse 57
ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௫௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَهُوَ الَّذِيْ يُرْسِلُ الرِّيٰحَ بُشْرًاۢ بَيْنَ يَدَيْ رَحْمَتِهٖۗ حَتّٰٓى اِذَآ اَقَلَّتْ سَحَابًا ثِقَالًا سُقْنٰهُ لِبَلَدٍ مَّيِّتٍ فَاَنْزَلْنَا بِهِ الْمَاۤءَ فَاَخْرَجْنَا بِهٖ مِنْ كُلِّ الثَّمَرٰتِۗ كَذٰلِكَ نُخْرِجُ الْمَوْتٰى لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ (الأعراف : ٧)
- wahuwa
- وَهُوَ
- And He
- அவன்
- alladhī
- ٱلَّذِى
- (is) the One Who
- எவன்
- yur'silu
- يُرْسِلُ
- sends
- அனுப்புகிறான்
- l-riyāḥa
- ٱلرِّيَٰحَ
- the winds
- காற்றுகளை
- bush'ran
- بُشْرًۢا
- (as) glad tidings
- நற்செய்தியாக
- bayna yaday
- بَيْنَ يَدَىْ
- from before
- முன்னர்
- raḥmatihi
- رَحْمَتِهِۦۖ
- His Mercy
- தனது கருணைக்கு
- ḥattā
- حَتَّىٰٓ
- until
- இறுதியாக
- idhā aqallat
- إِذَآ أَقَلَّتْ
- when they have carried
- அது சுமந்தால்
- saḥāban
- سَحَابًا
- clouds
- மேகத்தை
- thiqālan
- ثِقَالًا
- heavy
- கன(மான)
- suq'nāhu
- سُقْنَٰهُ
- We drive them
- ஓட்டுகிறோம்/அதை
- libaladin
- لِبَلَدٍ
- to a land
- பூமியின் பக்கம்
- mayyitin
- مَّيِّتٍ
- dead
- இறந்தது
- fa-anzalnā
- فَأَنزَلْنَا
- then We send down
- இன்னும் இறக்குகிறோம்
- bihi
- بِهِ
- from it
- அதிலிருந்து
- l-māa
- ٱلْمَآءَ
- the water
- மழையை
- fa-akhrajnā
- فَأَخْرَجْنَا
- then We bring forth
- இன்னும் வெளியாக்குகிறோம்
- bihi
- بِهِۦ
- from it
- அதன் மூலம்
- min
- مِن
- (of)
- இருந்து
- kulli
- كُلِّ
- all (kinds)
- எல்லாம்
- l-thamarāti
- ٱلثَّمَرَٰتِۚ
- (of) fruits
- கனிகள்
- kadhālika
- كَذَٰلِكَ
- Thus
- இவ்வாறே
- nukh'riju
- نُخْرِجُ
- We will bring forth
- வெளியாக்குவோம்
- l-mawtā
- ٱلْمَوْتَىٰ
- the dead
- மரணித்தவர்களை
- laʿallakum tadhakkarūna
- لَعَلَّكُمْ تَذَكَّرُونَ
- so that you may take heed
- நீங்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக
Transliteration:
Wa Huwal lazee yursilur riyaaha bushram baina yadai rahmatihee hattaaa izaaa aqallat sahaaban siqaalan suqnaahu libaladim maiyitin fa annzalnaa bihil maaa'a fa akhrajnaa bihee minn kullis samaraat; kazaalika nukhrijul mawtaa la'allakum tazakkaroon(QS. al-ʾAʿrāf:57)
English Sahih International:
And it is He who sends the winds as good tidings before His mercy [i.e., rainfall] until, when they have carried heavy rainclouds, We drive them to a dead land and We send down rain therein and bring forth thereby [some] of all the fruits. Thus will We bring forth the dead; perhaps you may be reminded. (QS. Al-A'raf, Ayah ௫௭)
Abdul Hameed Baqavi:
அவன்தான் அவனுடைய அருள்மழைக்கு (முன்னர்) நற்செய்தியாக குளிர்ந்த காற்றை அனுப்பி வைக்கின்றான். அது (கருக்கொண்டு) கனத்த மேகங்களைச் சுமந்த பின்னர் அதனை நாம் (வரண்டு) இறந்த பூமியின் பக்கம் ஓட்டிச் சென்று அதிலிருந்து மழை பெய்யச் செய்கின்றோம். பின்னர் அதைக் கொண்டு எல்லா வகைக் கனிகளையும் வெளியாக்குகின்றோம். இவ்வாறே மரணித்தவர்களையும் (அவர்களின் சமாதிகளிலிருந்து) வெளியாக்குவோம். (இதனை அறிந்து) நீங்கள் நல்லுணர்ச்சி பெறுவீர்களாக! (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௫௭)
Jan Trust Foundation
அவன் தான், தன்னுடைய அருள் (மாரிக்)கு முன், நற்செய்தியாக (குளிர்ந்த) காற்றுகளை அனுப்பிவைக்கிறான்; அவை கனத்த மேகங்களைச் சுமக்கலானதும் நாம் அவற்றை இறந்து கிடக்கும் (வரண்ட) பூமியின் பக்கம் ஓட்டிச் சென்று, அதிலிருந்து மழையைப் பொழியச் செய்கின்றோம்; பின்னர் அதைக் கொண்டு எல்லாவிதமான கனிவகை (விளைச்சல்)களையும் வெளிப்படுத்துகின்றோம் - இவ்வாறே நாம் இறந்தவர்களையும் எழுப்புவோம். (எனவே இவற்றை யெல்லாம் சிந்தித்து) நீங்கள் நல்லுணர்வு பெறுவீர்களாக.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவன்தான் தனது (மழை எனும்) கருணைக்கு முன்னர் நற்செய்தியாக (குளிர்ந்த) காற்றுகளை அனுப்புகிறான். இறுதியாக, அது கனமேகத்தைச் சுமந்தால் அதை (வறண்டு) இறந்(து கிடந்)த பூமியின் பக்கம் ஓட்டுகிறோம். அதிலிருந்து மழையை இறக்குகிறோம். அதன் மூலம் எல்லா கனிகளிலிருந்தும் (குறிப்பிட்ட அளவை) வெளியாக்குகிறோம். இவ்வாறே, மரணித்தவர்களையும் வெளியாக்குவோம். நீங்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக (உங்களுக்கு இவற்றை விவரிக்கிறோம்)!