Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௫௪

Qur'an Surah Al-A'raf Verse 54

ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௫௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّ رَبَّكُمُ اللّٰهُ الَّذِيْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ فِيْ سِتَّةِ اَيَّامٍ ثُمَّ اسْتَوٰى عَلَى الْعَرْشِۗ يُغْشِى الَّيْلَ النَّهَارَ يَطْلُبُهٗ حَثِيْثًاۙ وَّالشَّمْسَ وَالْقَمَرَ وَالنُّجُوْمَ مُسَخَّرٰتٍۢ بِاَمْرِهٖٓ ۙاَلَا لَهُ الْخَلْقُ وَالْاَمْرُۗ تَبٰرَكَ اللّٰهُ رَبُّ الْعٰلَمِيْنَ (الأعراف : ٧)

inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
rabbakumu
رَبَّكُمُ
your Lord
உங்கள் இறைவன்
l-lahu
ٱللَّهُ
(is) Allah
அல்லாஹ்
alladhī khalaqa
ٱلَّذِى خَلَقَ
the One Who created
எவன் படைத்தான்
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
the heavens
வானங்களை
wal-arḍa
وَٱلْأَرْضَ
and the earth
இன்னும் பூமியை
fī sittati ayyāmin
فِى سِتَّةِ أَيَّامٍ
in six epochs
ஆறு நாட்களில்
thumma
ثُمَّ
then
பிறகு
is'tawā
ٱسْتَوَىٰ
He ascended
உயர்ந்து விட்டான்
ʿalā l-ʿarshi
عَلَى ٱلْعَرْشِ
on the Throne
அர்ஷின் மீது
yugh'shī
يُغْشِى
He covers
மூடுகிறான்
al-layla
ٱلَّيْلَ
the night
இரவால்
l-nahāra
ٱلنَّهَارَ
(with) the day
பகலை
yaṭlubuhu
يَطْلُبُهُۥ
seeking it
தேடுகிறது/அதை
ḥathīthan
حَثِيثًا
rapidly
தீவிரமாக
wal-shamsa
وَٱلشَّمْسَ
and the sun
இன்னும் சூரியனை
wal-qamara
وَٱلْقَمَرَ
and the moon
இன்னும் சந்திரனை
wal-nujūma
وَٱلنُّجُومَ
and the stars -
இன்னும் நட்சத்திரங்களை
musakharātin
مُسَخَّرَٰتٍۭ
subjected
வசப்படுத்தப்பட்டவையாக
bi-amrihi
بِأَمْرِهِۦٓۗ
by His command
தனது கட்டளைக் கொண்டு
alā
أَلَا
Unquestionably
அறிந்துகொள்ளுங்கள்!
lahu
لَهُ
for Him
அவனுக்கே
l-khalqu
ٱلْخَلْقُ
(is) the creation
படைத்தல்
wal-amru
وَٱلْأَمْرُۗ
and the command
இன்னும் அதிகாரம்
tabāraka
تَبَارَكَ
blessed
அருள் வளமிக்கவன்
l-lahu rabbu
ٱللَّهُ رَبُّ
(is) Allah Lord
அல்லாஹ்/இறைவன்
l-ʿālamīna
ٱلْعَٰلَمِينَ
(of) the worlds
அகிலங்களின்

Transliteration:

Inna Rabbakkumul laahul lazee khalaqas sammaawaati wal arda fee sittati qiyaamin summmas tawaa 'alal 'arshi yughshil lailan nahaara yatlu buhoo haseesanw washshamsa walqamara wannujooma musakhkharaatim bi amrih; alaa lahul khalqu wal-amr; tabaarakal laahu Rabbul 'aalameen (QS. al-ʾAʿrāf:54)

English Sahih International:

Indeed, your Lord is Allah, who created the heavens and earth in six days and then established Himself above the Throne. He covers the night with the day, [another night] chasing it rapidly; and [He created] the sun, the moon, and the stars, subjected by His command. Unquestionably, His is the creation and the command; blessed is Allah, Lord of the worlds. (QS. Al-A'raf, Ayah ௫௪)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்து அர்ஷின் மீது (தன் மகிமைக்குத் தக்கவாறு) உயர்ந்துவிட்டான். அவனே இரவால் பகலை மூடுகிறான்; (பகலால் இரவை மூடுகிறான்.) அது வெகு தீவிரமாகவே அதனைப் பின் தொடர்கிறது. (அவனே) சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் (படைத்தான். இவை அனைத்தும்) அவனது கட்டளைக்கு உட்பட்டவைகளே. படைப்பினங்களும் (படைத்தலும்) அதன் ஆட்சியும் அவனுக்கு உரியதல்லவா? அனைத்து உலகங்களையும் படைத்து, வளர்த்து, பரிபக்குவப்படுத்தும் அல்லாஹ் மிக்க பாக்கியமுடையவன். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௫௪)

Jan Trust Foundation

நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ் தான் ஆறு நாட்களில் வானங்களையும், பூமியையும் படைத்துப் பின் அர்ஷின் மீது தன் ஆட்சியை அமைத்தான் - அவனே இரவைக் கொண்டு பகலை மூடுகிறான்; அவ்விரவு பகலை வெகு விரைவாக பின் தொடர்கின்றது; இன்னும் சூரியனையும்; சந்திரனையும், நட்சத்திரங்களையும் தன் கட்டளைக்கு - ஆட்சிக்குக் - கீழ்படிந்தவையாக(ப் படைத்தான்); படைப்பும், ஆட்சியும் அவனுக்கே சொந்தமல்லவா? அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய (அவற்றைப் படைத்து, பரிபாலித்துப் பரிபக்குவப்படுத்தும்) அல்லாஹ்வே மிகவும் பாக்கியமுடையவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக வானங்களையும், பூமியையும், சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் தனது கட்டளைக் கொண்டு வசப்படுத்தப்பட்டவையாக ஆறு நாட்களில் படைத்து, பிறகு அர்ஷின் மீது (தன் மகிமைக்குத் தக்கவாறு) உயர்ந்துவிட்ட அல்லாஹ்தான் உங்கள் இறைவன். அவனே இரவால் பகலை மூடுகிறான். அது தீவிரமாக அதைத் தேடுகிறது. அறிந்து கொள்ளுங்கள் “படைத்தலும் அதிகாரமும்” அவனுக்கே உரியன. அகிலங்களின் இறைவனான அல்லாஹ் அருள்வளமிகுந்தவன்.