Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௫௨

Qur'an Surah Al-A'raf Verse 52

ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௫௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَقَدْ جِئْنٰهُمْ بِكِتٰبٍ فَصَّلْنٰهُ عَلٰى عِلْمٍ هُدًى وَّرَحْمَةً لِّقَوْمٍ يُّؤْمِنُوْنَ (الأعراف : ٧)

walaqad ji'nāhum
وَلَقَدْ جِئْنَٰهُم
And certainly We had brought (to) them
திட்டவட்டமாக/வந்தோம்/அவர்களிடம்
bikitābin
بِكِتَٰبٍ
a Book
ஒரு வேதத்தைக் கொண்டு
faṣṣalnāhu
فَصَّلْنَٰهُ
which We have explained
விவரித்தோம்/அதை
ʿalā ʿil'min
عَلَىٰ عِلْمٍ
with knowledge -
அறிந்து
hudan
هُدًى
a guidance
நேர்வழியாக
waraḥmatan
وَرَحْمَةً
and mercy
இன்னும் கருணையாக
liqawmin
لِّقَوْمٍ
for a people
மக்களுக்கு
yu'minūna
يُؤْمِنُونَ
who believe
நம்பிக்கை கொள்கிறார்கள்

Transliteration:

Wa laqad ji'naahum bi Kitaabin fassalnaahu 'alaa 'ilmin hudanw wa rahmatal liqawminy-yu'miinoon (QS. al-ʾAʿrāf:52)

English Sahih International:

And We had certainly brought them a Book which We detailed by knowledge – as guidance and mercy to a people who believe. (QS. Al-A'raf, Ayah ௫௨)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக நாம் அவர்களுக்கு ஒரு வேதத்தைக் கொடுத்திருந்தோம். அதில் ஒவ்வொன்றையும் ஞான முறையில் விவரித்திருக்கின்றோம். (அன்றி அது) நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நேரான வழியாகவும் அருளாகவும் இருக்கின்றது. (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௫௨)

Jan Trust Foundation

நிச்சயமாக நாம் அவர்களுக்கு ஒரு வேதத்தை கொடுத்தோம். அதை நாம் பூரண ஞானத்தைக் கொண்டு விளக்கியுள்ளோம்; அது நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நேர் வழியாகவும், அருளாகவும் இருக்கிறது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நாம் அவர்களிடம் திட்டவட்டமாக ஒரு வேதத்தைக் கொண்டுவந்தோம். நம்பிக்கை கொள்கின்ற மக்களுக்கு நேர்வழியாகவும் கருணையாகவும் இருப்பதற்காக (தெளிவாக அதிலுள்ள உண்மையை நாம்) அறிந்து அதை விவரித்தோம்.