குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௫௧
Qur'an Surah Al-A'raf Verse 51
ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௫௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
الَّذِيْنَ اتَّخَذُوْا دِيْنَهُمْ لَهْوًا وَّلَعِبًا وَّغَرَّتْهُمُ الْحَيٰوةُ الدُّنْيَاۚ فَالْيَوْمَ نَنْسٰىهُمْ كَمَا نَسُوْا لِقَاۤءَ يَوْمِهِمْ هٰذَاۙ وَمَا كَانُوْا بِاٰيٰتِنَا يَجْحَدُوْنَ (الأعراف : ٧)
- alladhīna
- ٱلَّذِينَ
- Those who
- எவர்கள்
- ittakhadhū
- ٱتَّخَذُوا۟
- took
- எடுத்துக் கொண்டனர்
- dīnahum
- دِينَهُمْ
- their religion
- தங்கள் மார்க்கத்தை
- lahwan
- لَهْوًا
- (as) an amusement
- கேளிக்கையாக
- walaʿiban
- وَلَعِبًا
- and play
- இன்னும் விளையாட்டாக
- wagharrathumu
- وَغَرَّتْهُمُ
- and deluded them
- இன்னும் மயக்கியது/அவர்களை
- l-ḥayatu
- ٱلْحَيَوٰةُ
- the life
- வாழ்க்கை
- l-dun'yā
- ٱلدُّنْيَاۚ
- (of) the world"
- உலகம்
- fal-yawma
- فَٱلْيَوْمَ
- So today
- இன்று
- nansāhum
- نَنسَىٰهُمْ
- We forget them
- மறப்போம்/அவர்களை
- kamā nasū
- كَمَا نَسُوا۟
- as they forgot
- அவர்கள் மறந்ததினால்
- liqāa
- لِقَآءَ
- (the) meeting
- சந்திப்பை
- yawmihim hādhā
- يَوْمِهِمْ هَٰذَا
- (of) their day this
- அவர்களுடைய இந்நாளின்
- wamā kānū
- وَمَا كَانُوا۟
- and [what] (as) they used to
- இன்னும் அவர்கள் இருந்த காரணத்தால்
- biāyātinā
- بِـَٔايَٰتِنَا
- with Our Verses
- நம் வசனங்களை
- yajḥadūna
- يَجْحَدُونَ
- they reject
- மறுப்பார்கள்
Transliteration:
Allazeenat takhazoo deenahu lahwanw wa la'i-banw wa gharrat humul hayaatud dunyaa; fal Yawma nnannsaahum kamaa nasoo liqaaa'a Yawmihim haazaa wa maa kaanoo bi aayaatinaa yajhadoon(QS. al-ʾAʿrāf:51)
English Sahih International:
Who took their religion as distraction and amusement and whom the worldly life deluded." So today We will forget them just as they forgot the meeting of this Day of theirs and for having rejected Our verses. (QS. Al-A'raf, Ayah ௫௧)
Abdul Hameed Baqavi:
இவர்களை இவ்வுலக வாழ்க்கை மயக்கிவிட்டதனால் தங்களுடைய மார்க்கத்தை வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் நம் வசனங்களை நிராகரித்து இந்நாளில் (நம்மைச்) சந்திப்பதையும் மறந்தவாறே நாமும் இன்றைய தினம் அவர்களை மறந்துவிடுவோம். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௫௧)
Jan Trust Foundation
(ஏனென்றால்) அவர்கள் தங்களுடைய மார்க்கத்தை வீணாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டார்கள்; இன்னும் அவர்களை இவ்வுலக வாழ்க்கை மயக்கி விட்டது; எனவே அவர்கள் நம் வசனங்களை நிராகரித்து இந்த இறுதி நாளின் சந்திப்பை மறந்து விட்டது போன்று, இன்று நாம் அவர்களை மறந்து விடுகிறோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நிராகரிப்பவர்கள்) தங்கள் மார்க்கத்தை கேளிக்கையாகவும் விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டனர். அவர்களை உலக வாழ்க்கை மயக்கியது. அவர்களுடைய இந்நாளின் சந்திப்பை அவர்கள் மறந்து, நம் வசனங்களை மறுத்துக் கொண்டிருந்த காரணத்தால் இன்று அவர்களை (நாமும்) மறப்போம் (நரகத்தில் அவர்களை விட்டுவிடுவோம்).