குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௪௦
Qur'an Surah Al-A'raf Verse 40
ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௪௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّ الَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِنَا وَاسْتَكْبَرُوْا عَنْهَا لَا تُفَتَّحُ لَهُمْ اَبْوَابُ السَّمَاۤءِ وَلَا يَدْخُلُوْنَ الْجَنَّةَ حَتّٰى يَلِجَ الْجَمَلُ فِيْ سَمِّ الْخِيَاطِ ۗ وَكَذٰلِكَ نَجْزِى الْمُجْرِمِيْنَ (الأعراف : ٧)
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- alladhīna kadhabū
- ٱلَّذِينَ كَذَّبُوا۟
- those who denied
- பொய்ப்பித்தவர்கள்
- biāyātinā
- بِـَٔايَٰتِنَا
- Our Verses
- நம் வசனங்களை
- wa-is'takbarū
- وَٱسْتَكْبَرُوا۟
- and (were) arrogant
- இன்னும் பெருமையடித்து புறக்கணித்தனர்
- ʿanhā
- عَنْهَا
- towards them
- அவற்றை விட்டு
- lā tufattaḥu
- لَا تُفَتَّحُ
- (will) not be opened
- திறக்கப்படாது
- lahum
- لَهُمْ
- for them
- அவர்களுக்கு
- abwābu
- أَبْوَٰبُ
- (the) doors
- வாசல்கள்
- l-samāi
- ٱلسَّمَآءِ
- (of) the heaven
- வானத்தின்
- walā yadkhulūna
- وَلَا يَدْخُلُونَ
- and not they will enter
- இன்னும் நுழைய மாட்டார்கள்
- l-janata
- ٱلْجَنَّةَ
- Paradise
- சொர்க்கத்தில்
- ḥattā yalija
- حَتَّىٰ يَلِجَ
- until passes
- நுழையும் வரை
- l-jamalu
- ٱلْجَمَلُ
- the camel
- ஒட்டகம்
- fī sammi
- فِى سَمِّ
- through (the) eye
- காதில்
- l-khiyāṭi
- ٱلْخِيَاطِۚ
- (of) the needle
- ஊசியின்
- wakadhālika
- وَكَذَٰلِكَ
- And thus
- இவ்வாறே
- najzī
- نَجْزِى
- We recompense
- கூலி கொடுப்போம்
- l-muj'rimīna
- ٱلْمُجْرِمِينَ
- the criminals
- குற்றவாளிகளுக்கு
Transliteration:
Innal lazeena kazzaboo bi Aayaatinaa wastakbaroo 'anhaa laa tufattahu lahum ahwaabus samaaa'i wa laa yadkhuloonal jannata hattaa yalijal jamalu fee sammil khiyaat; wa kazaalika najzil mujrimeen(QS. al-ʾAʿrāf:40)
English Sahih International:
Indeed, those who deny Our verses and are arrogant toward them – the gates of Heaven will not be opened for them, nor will they enter Paradise until a camel enters into the eye of a needle [i.e., never]. And thus do We recompense the criminals. (QS. Al-A'raf, Ayah ௪௦)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக எவர்கள் நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கி, அதனைப் புறக்கணிப்பதைப் பெருமையாகக் கொண்டார்களோ அவர்களுக்கு (இறைவனின் அருளுக்குரிய) வானத்தின் வாயில்கள் திறக்கப்படமாட்டாது. ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனபதியை அடையவே மாட்டார்கள். குற்றவாளிகளை இவ்வாறே நாம் தண்டிப்போம். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௪௦)
Jan Trust Foundation
எவர்கள் நம் வசனங்களை பொய்ப்பித்து இன்னும் (அவற்றைப் புறக்கணித்து) பெருமையடித்தார்களோ நிச்சயமாக அவர்களுக்கு வானத்தின் (அருள்) வாயில்கள் திறக்கப்பட மாட்டா - மேலும் ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனபதியில் நுழைய மாட்டார்கள் - இவ்வாறே குற்றம் செய்பவர்களுக்கு கூலி கொடுப்போம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக நம் வசனங்களைப் பொய்ப்பித்து, அவற்றை விட்டு பெருமையடித்து புறக்கணித்தவர்கள் அவர்களுக்கு வானத்தின் வாசல்கள் திறக்கப்படாது. ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரை சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள். குற்றவாளிகளுக்கு இவ்வாறே கூலிகொடுப்போம்.