Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௩௭

Qur'an Surah Al-A'raf Verse 37

ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௩௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَرٰى عَلَى اللّٰهِ كَذِبًا اَوْ كَذَّبَ بِاٰيٰتِهٖۗ اُولٰۤىِٕكَ يَنَالُهُمْ نَصِيْبُهُمْ مِّنَ الْكِتٰبِۗ حَتّٰٓى اِذَا جَاۤءَتْهُمْ رُسُلُنَا يَتَوَفَّوْنَهُمْۙ قَالُوْٓا اَيْنَ مَا كُنْتُمْ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ ۗقَالُوْا ضَلُّوْا عَنَّا وَشَهِدُوْا عَلٰٓى اَنْفُسِهِمْ اَنَّهُمْ كَانُوْا كٰفِرِيْنَ (الأعراف : ٧)

faman aẓlamu
فَمَنْ أَظْلَمُ
Then who (is) more unjust
யார்?/மிகப்பெரிய அநியாயக்காரன்
mimmani
مِمَّنِ
than (one) who
எவனைவிட
if'tarā
ٱفْتَرَىٰ
invented
இட்டுக்கட்டினான்
ʿalā l-lahi
عَلَى ٱللَّهِ
against Allah
அல்லாஹ்வின் மீது
kadhiban
كَذِبًا
a lie
பொய்யை
aw
أَوْ
or
அல்லது
kadhaba
كَذَّبَ
denies
பொய்ப்பித்தான்
biāyātihi
بِـَٔايَٰتِهِۦٓۚ
His Verses?
அவனுடைய வசனங்களை
ulāika
أُو۟لَٰٓئِكَ
Those
இவர்கள்
yanāluhum
يَنَالُهُمْ
will reach them
அடையும்/இவர்களை
naṣībuhum
نَصِيبُهُم
their portion
பாகம்/இவர்களுடைய
mina l-kitābi
مِّنَ ٱلْكِتَٰبِۖ
from the Book
விதியில்
ḥattā
حَتَّىٰٓ
until
இறுதியாக
idhā jāathum
إِذَا جَآءَتْهُمْ
when comes to them
வந்தால்/இவர்களிடம்
rusulunā
رُسُلُنَا
Our messengers (Angels)
நம் தூதர்கள்
yatawaffawnahum
يَتَوَفَّوْنَهُمْ
(to) take them in death
உயிர்வாங்குபவர்களாக/இவர்களை
qālū
قَالُوٓا۟
they say
கூறுவார்கள்
ayna
أَيْنَ
"Where are
எங்கே?
mā kuntum
مَا كُنتُمْ
those (whom) you used to
எவை/இருந்தீர்கள்
tadʿūna
تَدْعُونَ
invoke
பிரார்த்திப்பீர்கள்
min dūni l-lahi
مِن دُونِ ٱللَّهِۖ
from besides Allah?"
அல்லாஹ்வையன்றி
qālū
قَالُوا۟
They say
கூறினார்கள்
ḍallū
ضَلُّوا۟
"They strayed
மறைந்தனர்
ʿannā
عَنَّا
from us
எங்களை விட்டு
washahidū
وَشَهِدُوا۟
and they (will) testify
இன்னும் சாட்சியளிப்பார்கள்
ʿalā
عَلَىٰٓ
against
எதிராக
anfusihim
أَنفُسِهِمْ
themselves
தங்களுக்கு
annahum
أَنَّهُمْ
that they
நிச்சயமாக தாங்கள்
kānū
كَانُوا۟
were
இருந்தனர்
kāfirīna
كَٰفِرِينَ
disbelievers
நிராகரிப்பவர்களாக

Transliteration:

Faman azlamu mimmanif taraa 'alal laahi kaziban aw kazzaba bi Aayaatih; ulaaa'ika yanaaluhum naseebuhum minal Kitaab; hataaa izaa jaaa'at hum rusulunaa yatawaf fawnahum qaalooo aina maa kuntum tad'oonaa min doonil laahi qaaloo dalloo 'annaa wa shahidoo 'alaaa anfusihim annahum kaanoo kaafieen (QS. al-ʾAʿrāf:37)

English Sahih International:

And who is more unjust than one who invents about Allah a lie or denies His verses? Those will attain their portion of the decree until, when Our messengers [i.e., angels] come to them to take them in death, they will say, "Where are those you used to invoke besides Allah?" They will say, "They have departed from us," and will bear witness against themselves that they were disbelievers. (QS. Al-A'raf, Ayah ௩௭)

Abdul Hameed Baqavi:

எவன் அல்லாஹ்வுடைய வசனங்களைப் பொய்யாக்கி, அல்லாஹ்வின் மீது பொய்யைக் கற்பனை செய்தும் கூறுகின்றானோ அவனைவிட அநியாயக்காரன் யார்? (இவ்வுலகில் அவர்கள் உயிர் வாழும் வரையில்) அவர்களுக்கு விதிக்கப்பட்ட (உணவு, பொருள் ஆகிய)வை அவர்களுக்குக் கிடைத்துக் கொண்டேயிருக்கும். (அவர்களுடைய காலம் முடிந்து) அவர்களுடைய உயிரைக் கைப்பற்ற நம்முடைய மலக்குகள் அவர்களிடம் வரும் சமயத்தில் (அவர்களை நோக்கி) நீங்கள் "கடவுளென அழைத்துக் கொண்டிருந்த அல்லாஹ் அல்லாதவை எங்கே?" என்று அவர்கள் கேட்பார்கள். அதற்கு அவர்கள் "(அவை அனைத்தும்) எங்களை விட்டு (ஓடி) மறைந்துவிட்டன" என்று கூறி மெய்யாகவே தாங்கள் (சத்தியத்தை) நிராகரிப்பவர்களாக இருந்ததாகவும், தங்களுக்கு எதிராகவே சாட்சியம் கூறுவார்கள். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௩௭)

Jan Trust Foundation

எவன் அல்லாஹ்வின் மீது பொய்க்கற்பனை செய்து அவனுடைய வசனங்களையும் நிராகரிக்கிறானோ, அவனைவிட மிக அநியாயக்காரன் யார்? எனினும் அத்தகையவர்களுக்கு அவர்களுக்கு விதிக்கப்பட்ட (உணவும், பொருள்களிலுள்ள) பங்கு (இவ்வுலகில்) கிடைத்துக்கொண்டே இருக்கும்; நம்முடைய (வான) தூதர்கள் அவர்களிடம் வந்து, அவர்(களுடைய உயிர்)களைக் கைப்பற்றும் போது (அவ்வான தூதர்கள்) “அல்லாஹ்வை விட்டு எவர்களை அழைத்துக் கொண்டு இருந்தீர்களோ, அவர்கள் எங்கே?” எனக் கேட்பார்கள்; (அதற்கு) “அவர்கள் எங்களை விட்டுக் காணாமல் (மறைந்து போய்) விட்டார்கள்” என்று கூறி மெய்யாகவே தாம் நிராகரிப்பவர்களாக - இருந்ததாகத் தங்களுக்கு எதிராகவே அவர்கள் சாட்சி கூறுவார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவனை விட அல்லது அவனுடைய வசனங்களைப் பொய்ப்பித்தவனைவிட மிகப்பெரிய அநியாயக்காரன் யார்? விதியில் இவர்களுடைய பாகம் இவர்களை அடையும். இறுதியாக, இவர்களை உயிர் வாங்குபவர்களாக நம் (வானவத்) தூதர்கள் இவர்களிடம் வந்தால் அல்லாஹ்வை அன்றி நீங்கள் பிரார்த்தித்துக் கொண்டிருந்தவர்கள் எங்கே?” என்று கூறுவார்கள். “அவர்கள் எங்களை விட்டு மறைந்தனர்”என்று கூறி, நிச்சயமாக தாங்கள் நிராகரிப்பவர்களாக(வே) இருந்தனர் என்று தங்களுக்கு எதிராக சாட்சியளிப்பார்கள்.