குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௩
Qur'an Surah Al-A'raf Verse 3
ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِتَّبِعُوْا مَآ اُنْزِلَ اِلَيْكُمْ مِّنْ رَّبِّكُمْ وَلَا تَتَّبِعُوْا مِنْ دُوْنِهٖٓ اَوْلِيَاۤءَۗ قَلِيْلًا مَّا تَذَكَّرُوْنَ (الأعراف : ٧)
- ittabiʿū
- ٱتَّبِعُوا۟
- Follow
- பின்பற்றுங்கள்
- mā
- مَآ
- what
- எது
- unzila
- أُنزِلَ
- has been revealed
- இறக்கப்பட்டது
- ilaykum
- إِلَيْكُم
- to you
- உங்களுக்கு
- min
- مِّن
- from
- இருந்து
- rabbikum
- رَّبِّكُمْ
- your Lord
- உங்கள் இறைவன்
- walā tattabiʿū
- وَلَا تَتَّبِعُوا۟
- and (do) not follow
- பின்பற்றாதீர்கள்
- min dūnihi
- مِن دُونِهِۦٓ
- from beside Him
- அதைத் தவிர
- awliyāa
- أَوْلِيَآءَۗ
- any allies
- பொறுப்பாளர்களை
- qalīlan mā
- قَلِيلًا مَّا
- Little (is) what
- மிகக் குறைவாக
- tadhakkarūna
- تَذَكَّرُونَ
- you remember
- நீங்கள் நல்லுணர்வு பெறுவது
Transliteration:
Ittabi'oo maaa unzila 'ilaikum mir Rabbikum wa laa tattabi'oo min dooniheee awliyaaa'; qaleelam maa tazakkaroon(QS. al-ʾAʿrāf:3)
English Sahih International:
Follow, [O mankind], what has been revealed to you from your Lord and do not follow other than Him any allies. Little do you remember. (QS. Al-A'raf, Ayah ௩)
Abdul Hameed Baqavi:
(மனிதர்களே!) உங்களுக்காக உங்கள் இறைவன் அருளியதையே பின்பற்றுங்கள். அவனையன்றி (மற்றெவரையும் உங்களுக்குக்) பொறுப்பாளர்(களாக ஆக்கி, அவர்)களை நீங்கள் பின்பற்றாதீர்கள். (எனினும், இதனைக் கொண்டு) நல்லுணர்ச்சி பெறுபவர்கள் உங்களில் மிகக் குறைவு. (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௩)
Jan Trust Foundation
(மனிதர்களே!) உங்கள் இறைவனிடமிருந்து, உங்களுக்கு இறக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள்; அவனையன்றி (வேறெவரையும்) பாதுகாவலர்(களாக்கி கொண்டு அவர்)களை பின்பற்றாதீர்கள்; நீங்கள் சொற்பமாகவே நல்லுணர்வு பெறுகிறீர்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(உலக மக்களே!) உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்டதை பின்பற்றுங்கள். அதைத் தவிர (மற்ற) பொறுப்பாளர்களை பின்பற்றாதீர்கள். மிகக் குறைவாகவே நீங்கள் நல்லுணர்வு (நல்லுபதேசம்) பெறுகிறீர்கள்.