குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௧௯௦
Qur'an Surah Al-A'raf Verse 190
ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௧௯௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَلَمَّآ اٰتٰىهُمَا صَالِحًا جَعَلَا لَهٗ شُرَكَاۤءَ فِيْمَآ اٰتٰىهُمَا ۚفَتَعٰلَى اللّٰهُ عَمَّا يُشْرِكُوْنَ (الأعراف : ٧)
- falammā
- فَلَمَّآ
- But when
- போது
- ātāhumā
- ءَاتَىٰهُمَا
- He gives them
- கொடுத்தான்/அவ்விருவருக்கும்
- ṣāliḥan
- صَٰلِحًا
- a good (child)
- நல்ல குழந்தையை
- jaʿalā
- جَعَلَا
- they make
- அவ்விருவரும் ஆக்கினர்
- lahu
- لَهُۥ
- for Him
- அவனுக்கு
- shurakāa
- شُرَكَآءَ
- partners
- இணைகளை
- fīmā
- فِيمَآ
- in what
- எதில்
- ātāhumā
- ءَاتَىٰهُمَاۚ
- He has given them
- கொடுத்தான்/அவ்விருவருக்கு
- fataʿālā
- فَتَعَٰلَى
- But exalted
- உயர்ந்தவன்
- l-lahu
- ٱللَّهُ
- (is) Allah
- அல்லாஹ்
- ʿammā
- عَمَّا
- above what
- எவற்றைவிட்டு
- yush'rikūna
- يُشْرِكُونَ
- they associate (with Him)
- இணைவைக்கிறார்கள்
Transliteration:
Falammaaa aataahumaa saalihan ja'alaa lahoo shurakaaa'a feemaaa aataahumaa; fata'aalal laahu 'ammaa yushrikoon(QS. al-ʾAʿrāf:190)
English Sahih International:
But when He gives them a good [child], they ascribe partners to Him concerning that which He has given them. Exalted is Allah above what they associate with Him. (QS. Al-A'raf, Ayah ௧௯௦)
Abdul Hameed Baqavi:
(அவர்கள் பிரார்த்தனையின்படி) அவர்களுக்கு (இறைவன்) நல்லதோர் சந்ததியை அளித்தாலோ அதனை அவர்களுக்கு அளித்ததில் (அவர்களுடைய தெய்வங்களும் துணையாய் இருந்தன என அவைகளை இறைவனுக்குக்) கூட்டாக்குகின்றனர். (அவர்கள் கூறும்) இணை துணைகளிலிருந்து அல்லாஹ் மிக உயர்ந்தவன். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௧௯௦)
Jan Trust Foundation
அவர்களுக்கு (அவர்கள் விருப்பப்படி) நல்ல குழந்தையை அவன் கொடுத்தவுடன், அவர்களுக்கு அவன் கொடுத்ததில் அவ்விருவரும் அவனுக்கு இணைகளைக் கற்பிக்கின்றனர் - இவர்கள் இணை வைப்பதை விட்டும் அல்லாஹ் தூய்மையானவன்.”
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவன் அவ்விருவருக்கும் நல்ல குழந்தையைக் கொடுத்தபோது அவ்விருவரும் அவன் கொடுத்தவற்றில் அவனுக்கு இணைகளை ஆக்கினர். அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் அல்லாஹ் உயர்ந்தவன்.