குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௧௮௫
Qur'an Surah Al-A'raf Verse 185
ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௧௮௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَوَلَمْ يَنْظُرُوْا فِيْ مَلَكُوْتِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا خَلَقَ اللّٰهُ مِنْ شَيْءٍ وَّاَنْ عَسٰٓى اَنْ يَّكُوْنَ قَدِ اقْتَرَبَ اَجَلُهُمْۖ فَبِاَيِّ حَدِيْثٍۢ بَعْدَهٗ يُؤْمِنُوْنَ (الأعراف : ٧)
- awalam yanẓurū
- أَوَلَمْ يَنظُرُوا۟
- Do not they look
- அவர்கள் கவனிக்கவில்லையா?
- fī malakūti
- فِى مَلَكُوتِ
- in (the) dominion
- பேராட்சியில்
- l-samāwāti
- ٱلسَّمَٰوَٰتِ
- (of) the heavens
- வானங்கள்
- wal-arḍi
- وَٱلْأَرْضِ
- and the earth
- இன்னும் பூமி
- wamā khalaqa
- وَمَا خَلَقَ
- and what has (been) created
- இன்னும் எவற்றைப்படைத்தான்
- l-lahu
- ٱللَّهُ
- (by) Allah
- அல்லாஹ்
- min shayin
- مِن شَىْءٍ
- of (every)thing
- பொருளிலும்
- wa-an ʿasā
- وَأَنْ عَسَىٰٓ
- and that perhaps
- என்பதிலும்/கூடும்
- an yakūna qadi iq'taraba
- أَن يَكُونَ قَدِ ٱقْتَرَبَ
- [that] has verily come near
- நெருங்கி இருக்க
- ajaluhum
- أَجَلُهُمْۖ
- their term?
- அவர்களுடைய தவணை
- fabi-ayyi ḥadīthin
- فَبِأَىِّ حَدِيثٍۭ
- So in what statement
- எந்த செய்தியை?
- baʿdahu
- بَعْدَهُۥ
- after this
- இதற்குப் பின்னர்
- yu'minūna
- يُؤْمِنُونَ
- will they believe?
- நம்பிக்கை கொள்வார்கள்
Transliteration:
Awalam yanzuroo fee malakootis samaawaati wal ardi wa maa khalaqal laahu min shai'inw wa an 'asaaa ai yakoona qadiqtaraba ajaluhum fabi aiyi hadeesim ba'dahoo yu'minoon(QS. al-ʾAʿrāf:185)
English Sahih International:
Do they not look into the realm of the heavens and the earth and everything that Allah has created and [think] that perhaps their appointed time has come near? So in what statement [i.e., message] hereafter will they believe? (QS. Al-A'raf, Ayah ௧௮௫)
Abdul Hameed Baqavi:
வானங்கள், பூமியினுடைய ஆட்சியையும் அல்லாஹ் படைத்திருக்கும் மற்ற பொருள்களையும் அவர்கள் பார்க்க வில்லையா? அவர்களுடைய (மரண) தவணை நெருங்கி இருக்கக் கூடும் என்பதையும் (அவர்கள் எண்ணவில்லையா?) இவ் வேதத்திற்குப் பின்னர் எதைத்தான் அவர்கள் நம்பிக்கை கொள்வார்கள். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௧௮௫)
Jan Trust Foundation
வானங்கள், பூமி, இவற்றின் ஆட்சியையும் அல்லாஹ் படைத்திருக்கும் மற்றப் பொருள்களையும் அவர்கள் நோட்டமிடவில்லையா? அவர்களுடைய (மரண) தவணை நெருங்கியிருக்கக்கூடும் என்பதையும் (அவர்கள் சிந்திக்கவில்லையா?) இதற்குப் பின்னர் எந்த விஷயத்தைத் தான் அவர்கள் ஈமான் கொள்ளப்போகிறார்கள்?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
வானங்கள், பூமியின் பேராட்சியிலும் அல்லாஹ் படைத்த (ஏனைய சிறிய, பெரிய) பொருளிலும் அவர்களுடைய (மரண) தவணை நெருங்கி இருக்கக் கூடும் என்பதிலும் அவர்கள் கவனி(த்துப் பார்)க்கவில்லையா? இதற்குப் பின்னர் (எச்சரிக்கை நிறைந்த) எந்த செய்தியை அவர்கள் நம்பிக்கை கொள்வார்கள்?