Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௧௭

Qur'an Surah Al-A'raf Verse 17

ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௧௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ثُمَّ لَاٰتِيَنَّهُمْ مِّنْۢ بَيْنِ اَيْدِيْهِمْ وَمِنْ خَلْفِهِمْ وَعَنْ اَيْمَانِهِمْ وَعَنْ شَمَاۤىِٕلِهِمْۗ وَلَا تَجِدُ اَكْثَرَهُمْ شٰكِرِيْنَ (الأعراف : ٧)

thumma laātiyannahum
ثُمَّ لَءَاتِيَنَّهُم
Then surely, I will come to them
பிறகு/நிச்சயம் வருவேன்/அவர்களிடம்
min bayni aydīhim
مِّنۢ بَيْنِ أَيْدِيهِمْ
from before them
அவர்களுக்கு முன் புறத்திலிருந்து
wamin khalfihim
وَمِنْ خَلْفِهِمْ
and from behind them
இன்னும் அவர்களுக்கு பின் புறத்திலிருந்து
waʿan aymānihim
وَعَنْ أَيْمَٰنِهِمْ
and from their right
இன்னும் அவர்களின் வலது புறத்திலிருந்து
waʿan shamāilihim
وَعَن شَمَآئِلِهِمْۖ
and from their left
இன்னும் அவர்களின் இடது புறத்திலிருந்து
walā tajidu
وَلَا تَجِدُ
and not You (will) find
நீ காணமாட்டாய்
aktharahum
أَكْثَرَهُمْ
most of them
அதிகமானவர்களை அவர்களில்
shākirīna
شَٰكِرِينَ
grateful"
நன்றி செலுத்துபவர்களாக

Transliteration:

Summa la aatiyannahum mim baine aideehim wa min khalfihim wa 'an aimaanihim wa 'an shamaaa'ilihim wa laa tajidu aksarahum shaakireen (QS. al-ʾAʿrāf:17)

English Sahih International:

Then I will come to them from before them and from behind them and on their right and on their left, and You will not find most of them grateful [to You]." (QS. Al-A'raf, Ayah ௧௭)

Abdul Hameed Baqavi:

"நிச்சயமாக அவர்களுக்கு முன்னும், பின்னும் அவர்களின் வலது பக்கத்திலும், இடது பக்கத்திலும் அவர்களிடம் வந்து (அவர்களை வழி கெடுத்துக்) கொண்டே இருப்பேன். ஆகவே, அவர்களில் பெரும்பாலானவர்களை (உனக்கு) நன்றி செலுத்துபவர் களாக நீ காணமாட்டாய்" என்றும் கூறினான். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௧௭)

Jan Trust Foundation

“பின் நிச்சயமாக நான் அவர்கள் முன்னும், அவர்கள் பின்னும், அவர்கள் வலப்பக்கத்திலும், அவர்கள் இடப்பக்கத்திலும் வந்து (அவர்களை வழி கெடுத்துக்) கொண்டிருப்பேன்; ஆதலால் நீ அவர்களில் பெரும்பாலோரை (உனக்கு) நன்றி செலுத்துவோர்களாகக் காண மாட்டாய்” (என்றும் கூறினான்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“பிறகு, அவர்களுக்கு முன் புறத்திலிருந்தும், அவர்களுக்கு பின் புறத்திலிருந்தும் அவர்களின் வலது புறத்திலிருந்தும், அவர்களின் இடது புறத்திலிருந்தும் நிச்சயம் அவர்களிடம் வருவேன். அவர்களில் அதிகமானவர்களை (உனக்கு) நன்றி செலுத்துபவர்களாக நீ காணமாட்டாய்” (என்றும் கூறினான்).