Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௧௫௮

Qur'an Surah Al-A'raf Verse 158

ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௧௫௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قُلْ يٰٓاَيُّهَا النَّاسُ اِنِّيْ رَسُوْلُ اللّٰهِ اِلَيْكُمْ جَمِيْعًا ۨالَّذِيْ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِۚ لَآ اِلٰهَ اِلَّا هُوَ يُحْيٖ وَيُمِيْتُۖ فَاٰمِنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهِ النَّبِيِّ الْاُمِّيِّ الَّذِيْ يُؤْمِنُ بِاللّٰهِ وَكَلِمٰتِهٖ وَاتَّبِعُوْهُ لَعَلَّكُمْ تَهْتَدُوْنَ (الأعراف : ٧)

qul
قُلْ
Say
கூறுவீராக
yāayyuhā l-nāsu
يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ
"O! "mankind!
மனிதர்களே
innī
إِنِّى
Indeed I am
நிச்சயமாக நான்
rasūlu
رَسُولُ
(the) Messenger
தூதர்
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வின்
ilaykum jamīʿan
إِلَيْكُمْ جَمِيعًا
to you all
உங்கள் அனைவருக்கும்
alladhī
ٱلَّذِى
the One
எவன்
lahu
لَهُۥ
for Whom
அவனுக்குரியதே
mul'ku
مُلْكُ
(is the) dominion
ஆட்சி
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
(of) the heavens
வானங்களின்
wal-arḍi
وَٱلْأَرْضِۖ
and the earth
இன்னும் பூமியின்
lā ilāha
لَآ إِلَٰهَ
(There is) no god
அறவே இல்லை
illā
إِلَّا
except
வணங்கப்படும் இறைவன்
huwa
هُوَ
Him
அவனைத்தவிர
yuḥ'yī
يُحْىِۦ
He gives life
உயிர்ப்பிக்கிறான்
wayumītu
وَيُمِيتُۖ
and causes death
இன்னும் மரணிக்கச் செய்கிறான்
faāminū
فَـَٔامِنُوا۟
So believe
ஆகவே நம்பிக்கை கொள்ளுங்கள்
bil-lahi
بِٱللَّهِ
in Allah
அல்லாஹ்வைக் கொண்டு
warasūlihi
وَرَسُولِهِ
and His Messenger
இன்னும் அவனுடைய தூதரை
l-nabiyi
ٱلنَّبِىِّ
the Prophet
நபி
l-umiyi
ٱلْأُمِّىِّ
the unlettered
எழுதப்படிக்கத் தெரியாதவர்
alladhī
ٱلَّذِى
the one who
எவர்
yu'minu
يُؤْمِنُ
believes
நம்பிக்கைகொள்கிறார்
bil-lahi
بِٱللَّهِ
in Allah
அல்லாஹ்வைக் கொண்டு
wakalimātihi
وَكَلِمَٰتِهِۦ
and His Words
இன்னும் அவனுடைய வாக்குகளை
wa-ittabiʿūhu
وَٱتَّبِعُوهُ
and follow him
பின்பற்றுங்கள்/அவரை
laʿallakum tahtadūna
لَعَلَّكُمْ تَهْتَدُونَ
so that you may (be) guided"
நீங்கள் நேர்வழிபெறுவதற்காக

Transliteration:

Qul yaaa aiyuhan naasu innee Rasoohul laahi ilaikum jamee'anil lazee lahoo mulkus samaawaati wal ardi laaa ilaaha illaa Huwa yuhyee wa yumeetu fa aaminoo billaahi wa Rasoolihin Nabiyyil ummiy yil lazee yu'minu billaahi wa Kalimaatihee wattabi'oohu la'allakum tahtadoon (QS. al-ʾAʿrāf:158)

English Sahih International:

Say, [O Muhammad], "O mankind, indeed I am the Messenger of Allah to you all, [from Him] to whom belongs the dominion of the heavens and the earth. There is no deity except Him; He gives life and causes death." So believe in Allah and His Messenger, the unlettered prophet, who believes in Allah and His words, and follow him that you may be guided. (QS. Al-A'raf, Ayah ௧௫௮)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "மனிதர்களே! (நீங்கள் எந்த நாட்டவர் ஆயினும் எவ்வகுப்பாராயினும்) நிச்சயமாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட ஒரு தூதர். வானங்கள் பூமியின் ஆட்சி அவனுக்குடையதே! (வணக்கத்திற்குரிய) இறைவன் அவனைத்தவிர வேறு ஒருவருமில்லை. அவனே உயிர்ப்பிக்கிறான்; மரணிக்கும்படி செய்கிறான். ஆகவே, அந்த அல்லாஹ்வையும், எழுதப் படிக்க அறியாத அவனுடைய இத்தூதரையும் நீங்கள் நம்பிக்கை கொள்வீர்களாக! அவரும் அல்லாஹ்வையும், அவனுடைய வசனங்களையும் நம்பிக்கை கொள்கிறார். ஆகவே, நீங்கள் நேரான வழியை அடைய அவரையே நீங்கள் பின்பற்றுங்கள். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௧௫௮)

Jan Trust Foundation

(நபியே!) நீர் கூறுவீராக| “மனிதர்களே! மெய்யாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறேன்; வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அவனுக்கே உரியது, அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறுயாருமில்லை - அவனே உயிர்ப்பிக்கின்றான்; அவனே மரணம் அடையும்படியும் செய்கின்றான் - ஆகவே, அல்லாஹ்வின் மீதும், எழுதப்படிக்கத்தெரியா நபியாகிய அவன் தூதரின் மீதும் ஈமான் கொள்ளுங்கள், அவரும் அல்லாஹ்வின் மீதும் அவன் வசனங்களின் மீதும் ஈமான் கொள்கிறார் - அவரையே பின்பற்றுங்கள்; நீங்கள் நேர்வழி பெறுவீர்கள்.”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) கூறுவீராக: “மனிதர்களே! நிச்சயமாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதர் ஆவேன். வானங்கள் இன்னும் பூமியின் ஆட்சி அவனுக்குரியதே! அவனைத் தவிர வணங்கப்படும் இறைவன் (வேறு யாரும்) அறவே இல்லை. (அவன்தான்) உயிர்ப்பிக்கிறான்; மரணிக்கச் செய்கிறான். ஆகவே, நீங்கள் நேர்வழி பெறுவதற்காக அல்லாஹ்வைக் கொண்டு நம்பிக்கை கொள்ளுங்கள். அல்லாஹ்வையும் இன்னும் அவனுடைய வாக்குகளையும் நம்பிக்கை கொள்கிற எழுதப் படிக்கத் தெரியாதவராகிய நபியான அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொள்ளுங்கள்! அவரைப் பின்பற்றுங்கள்!