குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௧௫௬
Qur'an Surah Al-A'raf Verse 156
ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௧௫௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
۞ وَاكْتُبْ لَنَا فِيْ هٰذِهِ الدُّنْيَا حَسَنَةً وَّفِى الْاٰخِرَةِ اِنَّا هُدْنَآ اِلَيْكَۗ قَالَ عَذَابِيْٓ اُصِيْبُ بِهٖ مَنْ اَشَاۤءُۚ وَرَحْمَتِيْ وَسِعَتْ كُلَّ شَيْءٍۗ فَسَاَكْتُبُهَا لِلَّذِيْنَ يَتَّقُوْنَ وَيُؤْتُوْنَ الزَّكٰوةَ وَالَّذِيْنَ هُمْ بِاٰيٰتِنَا يُؤْمِنُوْنَۚ (الأعراف : ٧)
- wa-uk'tub
- وَٱكْتُبْ
- And ordain
- எழுதுவாயாக, விதிப்பாயாக
- lanā
- لَنَا
- for us
- எங்களுக்கு
- fī hādhihi l-dun'yā
- فِى هَٰذِهِ ٱلدُّنْيَا
- in this [the] world
- இம்மையில்
- ḥasanatan
- حَسَنَةً
- good
- அழகியதை, நல்ல வாழ்வை
- wafī l-ākhirati
- وَفِى ٱلْءَاخِرَةِ
- and in the Hereafter
- இன்னும் மறுமையில்
- innā
- إِنَّا
- Indeed, we
- நிச்சயமாக நாங்கள்
- hud'nā
- هُدْنَآ
- we have turned
- திரும்பினோம்
- ilayka
- إِلَيْكَۚ
- to You"
- உன் பக்கம்
- qāla
- قَالَ
- He said
- கூறினான்
- ʿadhābī
- عَذَابِىٓ
- "My punishment
- என் வேதனை
- uṣību
- أُصِيبُ
- I afflict
- அடைவேன்
- bihi
- بِهِۦ
- with it
- அதைக் கொண்டு
- man ashāu
- مَنْ أَشَآءُۖ
- whom I will
- எவரை/நாடுவேன்
- waraḥmatī
- وَرَحْمَتِى
- but My Mercy
- என் கருணை
- wasiʿat
- وَسِعَتْ
- encompasses
- விசாலமாக்கி விட்டது
- kulla shayin
- كُلَّ شَىْءٍۚ
- every thing
- எல்லாவற்றையும்
- fasa-aktubuhā
- فَسَأَكْتُبُهَا
- So I will ordain it
- விதிப்பேன்/அதை
- lilladhīna
- لِلَّذِينَ
- for those who
- எவர்களுக்கு
- yattaqūna
- يَتَّقُونَ
- (are) righteous
- அஞ்சுவார்கள்
- wayu'tūna
- وَيُؤْتُونَ
- and give
- இன்னும் கொடுப்பார்கள்
- l-zakata
- ٱلزَّكَوٰةَ
- zakah
- ஸகாத்தை
- wa-alladhīna
- وَٱلَّذِينَ
- and those who
- இன்னும் எவர்கள்
- hum
- هُم
- [they]
- அவர்கள்
- biāyātinā
- بِـَٔايَٰتِنَا
- in Our Verses
- நம் வசனங்களை
- yu'minūna
- يُؤْمِنُونَ
- they believe
- நம்பிக்கை கொள்வார்கள்
Transliteration:
Waktub lanaa fee haazi hid dunyaa hasanatanw wa fil Aakhirati innnaa hudnaaa ilaik; qaala 'azaabee useebu bihee man ashaaa'u wa rahmatee wasi'at kulla shai'; fasa aktubuhaa lillazeena yattaqoona wa yu'toonaz Zakaata wallazeena hum bi Aayaatinaa yu'minoon(QS. al-ʾAʿrāf:156)
English Sahih International:
And decree for us in this world [that which is] good and [also] in the Hereafter; indeed, we have turned back to You." [Allah] said, "My punishment – I afflict with it whom I will, but My mercy encompasses all things." So I will decree it [especially] for those who fear Me and give Zakah and those who believe in Our verses– (QS. Al-A'raf, Ayah ௧௫௬)
Abdul Hameed Baqavi:
அன்றி "(இறைவனே!) இம்மையில் நீ எங்களுக்கு நன்மையை முடிவு செய்வாயாக! (அவ்வாறே) மறுமையிலும் (செய்வாயாக!) நிச்சயமாக நாங்கள் உன் பக்கமே முன்னோக்கினோம்" (என்றும் பிரார்த்தித்தார்.) அ(தற்கு இறை)வன் "நான் நாடியவர்களை என்னுடைய வேதனை வந்தடையும். எனினும், என்னுடைய அருட்கொடை அனைத்தையும் விட மிக விரிவானது. ஆகவே, எவர்கள் (எனக்குப்) பயந்து ஜகாத்தும் கொடுத்து வருகிறார்களோ அவர்களுக்கும், எவர்கள் நம்முடைய வசனங்களை நம்பிக்கை கொள்கிறார்களோ அவர்களுக்கும் (என்னுடைய அருளை) நான் முடிவு செய்வேன்" என்று கூறினான். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௧௫௬)
Jan Trust Foundation
“இன்னும் இவ்வுலகத்திலும், மறுமையிலும் எங்களுக்கு (அழகிய) நன்மைகளையே விதித்தருள்வாயாக! நிச்சயமாக நாங்கள் உன்னையே முன்னோக்குகிறோம்” (என்றும் பிரார்த்தித்தார்). அதற்கு இறைவன், ”என்னுடைய வேதனையை கொண்டு நான் நாடியவரை பிடிப்பேன்; ஆனால் என்னுடைய அருளானது எல்லாப் பொருள்களிலும் (விரிந்து, பரந்து) சூழ்ந்து நிற்கிறது; எனினும் அதனை பயபக்தியுடன் (பேணி) நடப்போருக்கும், (முறையாக) ஜகாத்து கொடுத்து வருவோருக்கும் நம்முடைய வசனங்களை நம்புகிறவர்களுக்கும் நான் விதித்தருள் செய்வேன்” என்று கூறினான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
“இம்மையிலும் மறுமையிலும் எங்களுக்கு அழகியதை விதிப்பாயாக! நிச்சயமாக நாங்கள் உன் பக்கமே திரும்பினோம்” (என்றும் மூஸா கூறினார்). “என் வேதனை அதைக் கொண்டு நான் நாடியவர்களை அடைவேன். என் கருணை எல்லாவற்றையும் விசாலமாக்கி விட்டது. ஆகவே, அதை (என்னை) அஞ்சி, ஸகாத்தைக் கொடுப்பவர்களுக்கும், நம் வசனங்களை நம்பிக்கை கொள்பவர்களுக்கும் விதிப்பேன்” என்று (இறைவன்) கூறினான். (இம்மையில் ஹசனா என்பது நற்செயல்களையும் மறுமையில் ஹசனா என்பது இறைமன்னிப்பையும் குறிக்கும்)