குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௧௪௭
Qur'an Surah Al-A'raf Verse 147
ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௧௪௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَالَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِنَا وَلِقَاۤءِ الْاٰخِرَةِ حَبِطَتْ اَعْمَالُهُمْۗ هَلْ يُجْزَوْنَ اِلَّا مَا كَانُوْا يَعْمَلُوْنَ ࣖ (الأعراف : ٧)
- wa-alladhīna
- وَٱلَّذِينَ
- And those who
- எவர்கள்
- kadhabū
- كَذَّبُوا۟
- denied
- பொய்ப்பித்தனர்
- biāyātinā
- بِـَٔايَٰتِنَا
- Our Signs
- நம் வசனங்களை
- waliqāi
- وَلِقَآءِ
- and (the) meeting
- இன்னும் சந்திப்பை
- l-ākhirati
- ٱلْءَاخِرَةِ
- (of) the Hereafter -
- மறுமையின்
- ḥabiṭat
- حَبِطَتْ
- worthless
- பாழாகின
- aʿmāluhum
- أَعْمَٰلُهُمْۚ
- (are) their deeds
- (நற்)செயல்கள்/அவர்களுடைய
- hal yuj'zawna
- هَلْ يُجْزَوْنَ
- Will they be recompensed
- கூலி கொடுக்கப்படுவார்களா?
- illā mā kānū yaʿmalūna
- إِلَّا مَا كَانُوا۟ يَعْمَلُونَ
- except (for) what they used to do?
- தவிர/எவற்றை/இருந்தனர்/செய்வார்கள்
Transliteration:
Wallazeena kazzaboo bi Aayaatinaa wa liqaaa'il Aakhirati habitat 'amaaluhum; hal yujzawna illaa maa kaanoo ya'maloon(QS. al-ʾAʿrāf:147)
English Sahih International:
Those who denied Our signs and the meeting of the Hereafter – their deeds have become worthless. Are they recompensed except for what they used to do? (QS. Al-A'raf, Ayah ௧௪௭)
Abdul Hameed Baqavi:
ஆகவே, எவர்கள் நம்முடைய வசனங்களையும், மறுமையில் (நம்மைச்) சந்திப்பதையும் பொய்யாக்குகின்றார்களோ அவர்களுடைய (நற்)காரியங்கள் அனைத்தும் அழிந்துவிடும். (நம் வசனங்களைப் பொய்யாக்கி) அவர்கள் செய்து கொண்டிருந்த (தீய) செயல்களுக்குத் தவிர (வேறெதற்கும்) கூலி கொடுக்கப் படுவார்களா? (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௧௪௭)
Jan Trust Foundation
எவர்கள் நம் வசனங்களையும், (அத்தாட்சிகளையும்) மறுமையில் (நம்மைச்) சந்திப்பதையும் பொய்யெனக் கூறுகின்றார்களோ அவர்களுடைய நற்கருமங்கள் யாவும் அழிந்துவிடும்; அவர்கள் எவ்வாறு செயல்பட்டார்களோ அதற்குத்தகுந்த கூலியைத் தவிர வேறு எதைப் பெற முடியும்?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நம் வசனங்களையும், மறுமையின் சந்திப்பையும் பொய்ப்பித்தவர்கள், அவர்களுடைய (நற்)செயல்கள் பாழாகின. அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கே தவிர (அவர்கள்) கூலி கொடுக்கப்படுவார்களா?