Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௧௨

Qur'an Surah Al-A'raf Verse 12

ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௧௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ مَا مَنَعَكَ اَلَّا تَسْجُدَ اِذْ اَمَرْتُكَ ۗقَالَ اَنَا۠ خَيْرٌ مِّنْهُۚ خَلَقْتَنِيْ مِنْ نَّارٍ وَّخَلَقْتَهٗ مِنْ طِيْنٍ (الأعراف : ٧)

qāla mā
قَالَ مَا
(Allah) said "What
கூறினான்/எது?
manaʿaka
مَنَعَكَ
prevented you
உம்மை தடுத்தது
allā tasjuda
أَلَّا تَسْجُدَ
that not you prostrate
நீ சிரம் பணியாதிருக்க
idh
إِذْ
when
போது
amartuka
أَمَرْتُكَۖ
I commanded you?"
கட்டளையிட்டேன்/உனக்கு
qāla
قَالَ
(Shaitaan) said
கூறினான்
anā
أَنَا۠
"I am
நான்
khayrun
خَيْرٌ
better
மேலானவன்
min'hu
مِّنْهُ
than him
அவரைவிட
khalaqtanī
خَلَقْتَنِى
You created me
என்னை படைத்தாய்
min nārin
مِن نَّارٍ
from fire
நெருப்பால்
wakhalaqtahu
وَخَلَقْتَهُۥ
and You created him
இன்னும் படைத்தாய்/அவரை
min ṭīnin
مِن طِينٍ
from clay"
களிமண்ணால்

Transliteration:

Qaala maa mana'aka allaa tasjuda iz amartuka qaala ana khairum minhu khalaqtanee min naarinw wa khalaqtahoo min teen (QS. al-ʾAʿrāf:12)

English Sahih International:

[Allah] said, "What prevented you from prostrating when I commanded you?" [Satan] said, "I am better than him. You created me from fire and created him from clay [i.e., earth]." (QS. Al-A'raf, Ayah ௧௨)

Abdul Hameed Baqavi:

(ஆகவே இறைவன் இப்லீஸை நோக்கி) "நான் உனக்குக் கட்டளையிட்ட சமயத்தில், நீ (சிரம்) பணியாதிருக்கும்படி உன்னைத் தடை செய்தது எது?" என்று கேட்க, (அதற்கு இப்லீஸ்) "நான் அவரைவிட மேலானவன். (ஏனென்றால்,) நீ என்னை நெருப்பால் படைத்தாய். அவரை களிமண்ணால் படைத்திருக் கின்றாய். (களிமண்ணை விட நெருப்பு உயர்ந்தது)" என்று (இறுமாப்புடன்) கூறினான். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௧௨)

Jan Trust Foundation

“நான் உனக்குக் கட்டளையிட்ட போது, நீ ஸஜ்தா செய்யாதிருக்க உன்னைத் தடுத்தது யாது?” என்று அல்லாஹ் கேட்டான்; “நான் அவரை (ஆதமை)விட மேலானவன் - என்னை நீ நெருப்பினால் படைத்தாய், அவரை களிமண்ணால் படைத்தாய்” என்று (இப்லீஸ் பதில்) கூறினான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“நான் உனக்குக் கட்டளையிட்ட போது, நீ சிரம் பணியாதிருக்க உன்னைத் (தூண்டி, சிரம்பணிவதிலிருந்து) தடுத்தது எது?” என்று கூறினான் (இறைவன்). (அதற்கு இப்லீஸ்) “நான் அவரைவிட மேலானவன். நீ என்னை நெருப்பால் படைத்தாய். அவரை களிமண்ணால் படைத்தாய்” என்று கூறினான்.