Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௧௦௩

Qur'an Surah Al-A'raf Verse 103

ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௧௦௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ثُمَّ بَعَثْنَا مِنْۢ بَعْدِهِمْ مُّوْسٰى بِاٰيٰتِنَآ اِلٰى فِرْعَوْنَ وَمَلَا۟ىِٕهٖ فَظَلَمُوْا بِهَاۚ فَانْظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُفْسِدِيْنَ (الأعراف : ٧)

thumma
ثُمَّ
Then
பிறகு
baʿathnā
بَعَثْنَا
We sent
அனுப்பினோம்
min
مِنۢ
from
பின்னர்
baʿdihim
بَعْدِهِم
after them
பின்னர் அவர்களுக்கு
mūsā
مُّوسَىٰ
Musa
மூஸாவை
biāyātinā
بِـَٔايَٰتِنَآ
with Our Signs
நம் அத்தாட்சிகளைக் கொண்டு
ilā fir'ʿawna
إِلَىٰ فِرْعَوْنَ
to Firaun
ஃபிர்அவ்னிடம்
wamala-ihi
وَمَلَإِي۟هِۦ
and his chiefs
இன்னும் அவனுடைய தலைவர்களிடம்
faẓalamū
فَظَلَمُوا۟
But they were unjust
அநீதியிழைத்தனர்
bihā
بِهَاۖ
to them
அவற்றுக்கு
fa-unẓur
فَٱنظُرْ
So see
கவனிப்பீராக
kayfa kāna
كَيْفَ كَانَ
how was
எவ்வாறு இருந்தது
ʿāqibatu
عَٰقِبَةُ
(the) end
முடிவு
l-muf'sidīna
ٱلْمُفْسِدِينَ
(of) the corrupters
விஷமிகளின்

Transliteration:

Summa ba'asnaa mim ba'dihim Moosaa bi Aayaatinaaa ilaa Fir'awana wa mala'ihee fazalamoo bihaa fanzur kaifa kaana 'aaqibatul mufsideen (QS. al-ʾAʿrāf:103)

English Sahih International:

Then We sent after them Moses with Our signs to Pharaoh and his establishment, but they were unjust toward them. So see how was the end of the corrupters. (QS. Al-A'raf, Ayah ௧௦௩)

Abdul Hameed Baqavi:

இதற்குப் பின்னரும் மூஸாவை நம்முடைய அத்தாட்சி களுடன் ஃபிர்அவ்னிடமும் அவனுடைய தலைவர்களிடமும் அனுப்பி வைத்தோம். எனினும், அவர்களோ அந்த அத்தாட்சிகளை அவமதித்து (நிராகரித்து) விட்டனர். (இத்தகைய) விஷமிகளின் முடிவு எவ்வாறாயிற்று என்பதை (நபியே!) நீங்கள் கவனியுங்கள். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௧௦௩)

Jan Trust Foundation

அவர்களுக்குப் பிறகு, மூஸாவை நம் அத்தாட்சிகளுடன் ஃபிர்அவ்னிடத்திலும் அவனுடைய தலைவர்களிடத்திலும் நாம் அனுப்பிவைத்தோம்; அப்போது அவர்கள் அவற்றை (நிராகரித்து) அநியாயம் செய்து விட்டார்கள்; இத்தகைய குழப்பக்காரர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதை கவனிப்பீராக!

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களுக்குப் பின்னர் மூஸாவை நம் அத்தாட்சிகளைக் கொண்டு ஃபிர்அவ்ன் இன்னும் அவனுடைய (அவைத்) தலைவர்களிடம் அனுப்பினோம். (அவர்கள்) அவற்றுக்கு அநீதியிழைத்(து பொய்ப்பித்)தனர். விஷமிகளின் முடிவு எவ்வாறு இருந்தது என்பதை (நபியே!) கவனிப்பீராக.