குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௧௦
Qur'an Surah Al-A'raf Verse 10
ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௧௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَقَدْ مَكَّنّٰكُمْ فِى الْاَرْضِ وَجَعَلْنَا لَكُمْ فِيْهَا مَعَايِشَۗ قَلِيْلًا مَّا تَشْكُرُوْنَ ࣖ (الأعراف : ٧)
- walaqad
- وَلَقَدْ
- And certainly
- திட்டவட்டமாக
- makkannākum
- مَكَّنَّٰكُمْ
- We established you
- இடமளித்தோம்/உங்களுக்கு
- fī l-arḍi
- فِى ٱلْأَرْضِ
- in the earth
- பூமியில்
- wajaʿalnā
- وَجَعَلْنَا
- and We made
- இன்னும் ஏற்படுத்தினோம்
- lakum
- لَكُمْ
- for you
- உங்களுக்கு
- fīhā
- فِيهَا
- in it
- அதில்
- maʿāyisha
- مَعَٰيِشَۗ
- livelihood
- வாழ்வாதாரங்களை
- qalīlan mā
- قَلِيلًا مَّا
- Little (is) what
- மிகக் குறைவாக
- tashkurūna
- تَشْكُرُونَ
- you (are) grateful
- நன்றி செலுத்துகிறீர்கள்
Transliteration:
Wa laqad makkannaakum fil ardi wa ja'alnaa lakum feehaa ma'aayish; qaleelam maa tashkuroon(QS. al-ʾAʿrāf:10)
English Sahih International:
And We have certainly established you upon the earth and made for you therein ways of livelihood. Little are you grateful. (QS. Al-A'raf, Ayah ௧௦)
Abdul Hameed Baqavi:
(மனிதர்களே!) நிச்சயமாக நாம் உங்களுக்குப் பூமியில் எல்லா வசதிகளையும் அளித்து, அதில் உங்களுக்கு வாழ்வதற்குத் தேவையான காரணங்களை ஏற்படுத்தினோம். (இவ்வாறிருந்தும்) நீங்கள் நன்றி செலுத்துவதோ மிகக் குறைவு. (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௧௦)
Jan Trust Foundation
(மனிதர்களே!) நிச்சயமாக நாம் உங்களை பூமியில் வசிக்கச் செய்தோம்; அதில் உங்களுக்கு வாழ்க்கை வசதிகளையும் ஆக்கித்தந்தோம் - எனினும் நீங்கள் நன்றி செலுத்துவதோ மிகவும் சொற்பமேயாகும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
திட்டவட்டமாக நாம் உங்களுக்குப் பூமியில் (வசிக்க) இடமளித்தோம். அதில் உங்களுக்கு வாழ்வாதாரங்களை ஏற்படுத்தினோம். (இவ்வாறு இருந்தும்) மிகக் குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள்.