Skip to content

ஸூரா ஸூரத்துல் அஃராஃப் - Page: 21

Al-A'raf

(al-ʾAʿrāf)

௨௦௧

اِنَّ الَّذِيْنَ اتَّقَوْا اِذَا مَسَّهُمْ طٰۤىِٕفٌ مِّنَ الشَّيْطٰنِ تَذَكَّرُوْا فَاِذَا هُمْ مُّبْصِرُوْنَۚ ٢٠١

inna alladhīna
إِنَّ ٱلَّذِينَ
நிச்சயமாக எவர்கள்
ittaqaw
ٱتَّقَوْا۟
அஞ்சினார்கள்
idhā massahum
إِذَا مَسَّهُمْ
ஏற்பட்டால்/அவர்களுக்கு
ṭāifun
طَٰٓئِفٌ
ஓர் எண்ணம்
mina
مِّنَ
இருந்து
l-shayṭāni
ٱلشَّيْطَٰنِ
ஷைத்தான்
tadhakkarū
تَذَكَّرُوا۟
நினைவுகூருகிறார்கள்
fa-idhā hum
فَإِذَا هُم
அப்போது அவர்கள்
mub'ṣirūna
مُّبْصِرُونَ
பார்த்துக் கொள்கிறார்கள்
நிச்சயமாக எவர்கள் (அல்லாஹ்வுக்குப்) பயப்படு கிறார்களோ, அவர்களுக்குள் ஷைத்தானுடைய (தவறான) எண்ணம் ஊசலாடினால் அவர்கள் (அல்லாஹ்வை) நினைக்கிறார்கள்; அது சமயம் அவர்களுடைய (அறிவுக்) கண் திறந்து விழிப்படைந்து விடுகிறார்கள். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௨௦௧)
Tafseer
௨௦௨

وَاِخْوَانُهُمْ يَمُدُّوْنَهُمْ فِى الْغَيِّ ثُمَّ لَا يُقْصِرُوْنَ ٢٠٢

wa-ikh'wānuhum
وَإِخْوَٰنُهُمْ
அவர்களுடைய சகோதரர்கள்
yamuddūnahum
يَمُدُّونَهُمْ
அதிகப்படுத்துகிறார்கள்/அவர்களை
fī l-ghayi
فِى ٱلْغَىِّ
வழிகேட்டில்
thumma
ثُمَّ
பிறகு
lā yuq'ṣirūna
لَا يُقْصِرُونَ
அவர்கள் குறைவு செய்வதில்லை
எனினும் ஷைத்தானுடைய சகோதரர்களோ அவர்களை வழிகேட்டிலேயே இழுத்துச் செல்வார்கள். (அவர்களுக்குத் தீங்கிழைப்பதில்) யாதொரு குறைவும் செய்வதில்லை. ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௨௦௨)
Tafseer
௨௦௩

وَاِذَا لَمْ تَأْتِهِمْ بِاٰيَةٍ قَالُوْا لَوْلَا اجْتَبَيْتَهَاۗ قُلْ اِنَّمَآ اَتَّبِعُ مَا يُوْحٰٓى اِلَيَّ مِنْ رَّبِّيْۗ هٰذَا بَصَاۤىِٕرُ مِنْ رَّبِّكُمْ وَهُدًى وَّرَحْمَةٌ لِّقَوْمٍ يُّؤْمِنُوْنَ ٢٠٣

wa-idhā lam tatihim
وَإِذَا لَمْ تَأْتِهِم
நீர் வரவில்லையென்றால்/அவர்களிடம்
biāyatin
بِـَٔايَةٍ
ஒரு வசனத்தைக் கொண்டு
qālū
قَالُوا۟
கூறுகின்றனர்
lawlā ij'tabaytahā
لَوْلَا ٱجْتَبَيْتَهَاۚ
நீர் அதை தேர்ந்தெடுத்திருக்க வேண்டாமா?
qul
قُلْ
கூறுவீராக
innamā attabiʿu
إِنَّمَآ أَتَّبِعُ
நான் பின்பற்றுவதெல்லாம்
mā yūḥā
مَا يُوحَىٰٓ
எதை/வஹீ அறிவிக்கப்படுகிறது
ilayya
إِلَىَّ
எனக்கு
min rabbī
مِن رَّبِّىۚ
என் இறைவனிடமிருந்து
hādhā
هَٰذَا
இவை
baṣāiru
بَصَآئِرُ
தெளிவான ஆதாரங்கள், விளக்கங்கள்
min
مِن
இருந்து
rabbikum
رَّبِّكُمْ
உங்கள் இறைவன்
wahudan
وَهُدًى
இன்னும் நேர்வழி
waraḥmatun
وَرَحْمَةٌ
இன்னும் கருணை
liqawmin yu'minūna
لِّقَوْمٍ يُؤْمِنُونَ
மக்களுக்கு/நம்பிக்கை கொள்கிறார்கள்
(அவர்கள் விருப்பப்படி) யாதொரு வசனத்தை நீங்கள் அவர்களிடம் கொண்டு வராவிட்டால் (அதற்குப் பதிலாகத் தங்கள் விருப்பப்படி கற்பனையாக ஒரு வசனத்தை அமைத்து) "இதனை நீங்கள் வசனமாக எடுத்துக்கொள்ள வேண்டாமா?" என்று (பரிகாசமாகக்) கூறுகின்றனர். அதற்கு (நபியே!) நீங்கள் கூறுங்கள்: "என் இறைவனால் எனக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டவை களையே நான் பின்பற்றுகிறேன். இதுவோ உங்கள் இறைவனால் (உங்களுக்கு) அளிக்கப்பட்ட நல்லறிவாகவும், நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நேர்வழியாகவும், (இறைவனின்) அருளாகவும் இருக்கின்றது. ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௨௦௩)
Tafseer
௨௦௪

وَاِذَا قُرِئَ الْقُرْاٰنُ فَاسْتَمِعُوْا لَهٗ وَاَنْصِتُوْا لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ ٢٠٤

wa-idhā quri-a
وَإِذَا قُرِئَ
ஓதப்பட்டால்
l-qur'ānu
ٱلْقُرْءَانُ
குர்ஆன்
fa-is'tamiʿū
فَٱسْتَمِعُوا۟
செவி தாழ்த்துங்கள்
lahu
لَهُۥ
அதற்கு
wa-anṣitū
وَأَنصِتُوا۟
இன்னும் வாய்மூடுங்கள்
laʿallakum tur'ḥamūna
لَعَلَّكُمْ تُرْحَمُونَ
நீங்கள் கருணை காட்டப்படுவதற்காக
(மனிதர்களே!) திருக்குர்ஆன் ஓதப்பட்டால் வாய்மூடி, செவி தாழ்த்தி அதனைக் கேளுங்கள். (அதனால்) நீங்கள் (இறைவனின்) அருளை அடைவீர்கள். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௨௦௪)
Tafseer
௨௦௫

وَاذْكُرْ رَّبَّكَ فِيْ نَفْسِكَ تَضَرُّعًا وَّخِيْفَةً وَّدُوْنَ الْجَهْرِ مِنَ الْقَوْلِ بِالْغُدُوِّ وَالْاٰصَالِ وَلَا تَكُنْ مِّنَ الْغٰفِلِيْنَ ٢٠٥

wa-udh'kur
وَٱذْكُر
நினைவு கூருவீராக
rabbaka
رَّبَّكَ
உம் இறைவனை
fī nafsika
فِى نَفْسِكَ
உம் மனதில்
taḍarruʿan
تَضَرُّعًا
பணிந்து
wakhīfatan
وَخِيفَةً
இன்னும் பயந்து
wadūna
وَدُونَ
இன்றி
l-jahri
ٱلْجَهْرِ
சப்தம்
mina l-qawli
مِنَ ٱلْقَوْلِ
சொல்லில்
bil-ghuduwi
بِٱلْغُدُوِّ
காலையில்
wal-āṣāli
وَٱلْءَاصَالِ
இன்னும் மாலையில்
walā takun
وَلَا تَكُن
ஆகிவிடாதீர்
mina l-ghāfilīna
مِّنَ ٱلْغَٰفِلِينَ
கவனமற்றவர்களில்
(நபியே!) உங்கள் மனதிற்குள் மிகப் பணிவோடும், உரத்த சப்தமின்றி பயத்தோடும் மெதுவாகவும் காலையிலும், மாலையிலும் உங்கள் இறைவனை நினைவு செய்து கொண்டிருங்கள்! அவனை மறந்தவர்களில் நீங்கள் ஆகிவிடாதீர்கள்! ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௨௦௫)
Tafseer
௨௦௬

اِنَّ الَّذِيْنَ عِنْدَ رَبِّكَ لَا يَسْتَكْبِرُوْنَ عَنْ عِبَادَتِهٖ وَيُسَبِّحُوْنَهٗ وَلَهٗ يَسْجُدُوْنَ ࣖ ۩ ٢٠٦

inna
إِنَّ
நிச்சயமாக
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
ʿinda
عِندَ
இடம்
rabbika
رَبِّكَ
உம் இறைவன்
lā yastakbirūna
لَا يَسْتَكْبِرُونَ
பெருமையடிக்க மாட்டார்கள்
ʿan ʿibādatihi
عَنْ عِبَادَتِهِۦ
அவனை வணங்குவதைவிட்டு
wayusabbiḥūnahu
وَيُسَبِّحُونَهُۥ
இன்னும் துதிப்பார்கள்/அவனை
walahu
وَلَهُۥ
அவனுக்கே
yasjudūna
يَسْجُدُونَ۩
சிரம் பணிவார்கள்
எவர்கள் நிச்சயமாக உங்கள் இறைவனிடத்தில் இருக்கின்றார்களோ அவர்கள் ( மலக்குகள்) இறுமாப்பு கொண்டு அவனை வணங்காதிருப்பதில்லை. எனினும் "(நீ மிகப் பரிசுத்தமானவன்; நீ மிகப் பரிசுத்தமானவன்" என்று) அவனை (எப்பொழுதும்) நினைவு செய்துகொண்டும், அவனுக்கு சிரம் பணிந்து (வணங்கிக்) கொண்டும் இருக்கின்றனர். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௨௦௬)
Tafseer