குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௯௨
Qur'an Surah Al-An'am Verse 92
ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௯௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَهٰذَا كِتٰبٌ اَنْزَلْنٰهُ مُبٰرَكٌ مُّصَدِّقُ الَّذِيْ بَيْنَ يَدَيْهِ وَلِتُنْذِرَ اُمَّ الْقُرٰى وَمَنْ حَوْلَهَاۗ وَالَّذِيْنَ يُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ يُؤْمِنُوْنَ بِهٖ وَهُمْ عَلٰى صَلَاتِهِمْ يُحٰفِظُوْنَ (الأنعام : ٦)
- wahādhā
- وَهَٰذَا
- And this
- இது
- kitābun
- كِتَٰبٌ
- (is) a Book
- ஒரு வேதம்
- anzalnāhu
- أَنزَلْنَٰهُ
- We have revealed it
- இதை இறக்கினோம்
- mubārakun
- مُبَارَكٌ
- blessed
- அருள் வளமிக்கது
- muṣaddiqu
- مُّصَدِّقُ
- confirming
- உண்மைப்படுத்தக் கூடியது
- alladhī
- ٱلَّذِى
- which
- எதை
- bayna yadayhi
- بَيْنَ يَدَيْهِ
- (came) before its hands
- தனக்கு முன்னால்
- walitundhira
- وَلِتُنذِرَ
- so that you may warn
- இன்னும் நீர் எச்சரிப்பதற்காக
- umma l-qurā
- أُمَّ ٱلْقُرَىٰ
- (the) mother (of) the cities
- மக்காவை
- waman ḥawlahā
- وَمَنْ حَوْلَهَاۚ
- and who (are) around it
- இன்னும் அதைச் சுற்றி உள்ளவர்களை
- wa-alladhīna yu'minūna
- وَٱلَّذِينَ يُؤْمِنُونَ
- Those who believe
- எவர்கள்/நம்பிக்கை கொள்வார்கள்
- bil-ākhirati
- بِٱلْءَاخِرَةِ
- in the Hereafter
- மறுமையை
- yu'minūna
- يُؤْمِنُونَ
- they believe
- நம்பிக்கை கொள்பவர்கள்
- bihi
- بِهِۦۖ
- in it
- இதை
- wahum
- وَهُمْ
- and they
- அவர்கள்
- ʿalā ṣalātihim
- عَلَىٰ صَلَاتِهِمْ
- over their prayers
- தங்கள் தொழுகையை
- yuḥāfiẓūna
- يُحَافِظُونَ
- (are) guarding
- பேணுவார்கள்
Transliteration:
Wa haazaa Kitaabun anzalnaahu Mubaarakum musaddiqul lazee bainaa yadaihi wa litunzira ummal Quraa wa man hawlahaa; wallazeena yu'minoona bil Aakhirati yu'minoona bihee wa hum'alaa Salaatihim yuhaafizoon(QS. al-ʾAnʿām:92)
English Sahih International:
And this is a Book which We have sent down, blessed and confirming what was before it, that you may warn the Mother of Cities [i.e., Makkah] and those around it. Those who believe in the Hereafter believe in it, and they are maintaining their prayers. (QS. Al-An'am, Ayah ௯௨)
Abdul Hameed Baqavi:
(நபியே!) இது நாம் உங்கள் மீது இறக்கிய மிக்க பாக்கியமுடைய ஒரு வேதமாகும். இது அவர்களிடம் உள்ள (வேதத்)தையும் உண்மைபடுத்துகிறது. ஆகவே நீங்கள் (இதனைக் கொண்டு தாய்நாட்டினராகிய) மக்காவாசிகளுக்கும், அதைச் சுற்றி உள்ளவர்களுக்கும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள். எவர்கள் மறுமையை நம்புகின்றார்களோ அவர்கள் இவ்வேதத்தையும் (அவசியம்) நம்புவார்கள். அன்றி, அவர்கள் தவறாது தொழுதும் வருவார்கள். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௯௨)
Jan Trust Foundation
இந்த வேதத்தை - அபிவிருத்தி நிறைந்ததாகவும், இதற்குமுன் வந்த (வேதங்களை) மெய்ப்படுத்துவதாகவும் நாம் இறக்கி வைத்துள்ளோம்; (இதைக்கொண்டு) நீர் (நகரங்களின் தாயாகிய) மக்காவில் உள்ளவர்களையும், அதனைச் சுற்றியுள்ளவர்களையும் எச்சரிக்கை செய்வதற்காகவும், (நாம் இதனை அருளினோம்.) எவர்கள் மறுமையை நம்புகிறார்களோ அவர்கள் இதை நம்புவார்கள். இன்னும் அவர்கள் தொழுகையைப் பேணுவார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) இது நாம் இறக்கிய, அருள் வளமிக்க, தனக்கு முன்னுள்ளதை உண்மைப்படுத்தக்கூடிய ஒரு வேதமாகும். நீர் (இதன் மூலம்) மக்காவையும் அதைச் சுற்றி உள்ளவர்களையும் எச்சரிப்பதற்காக (இறக்கினோம்). மறுமையை நம்பிக்கை கொள்பவர்கள் இதையும் நம்பிக்கை கொள்வார்கள். அவர்கள் தங்கள் தொழுகையைப் பேணுவார்கள்.