Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௬௩

Qur'an Surah Al-An'am Verse 63

ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௬௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قُلْ مَنْ يُّنَجِّيْكُمْ مِّنْ ظُلُمٰتِ الْبَرِّ وَالْبَحْرِ تَدْعُوْنَهٗ تَضَرُّعًا وَّخُفْيَةً ۚ لَىِٕنْ اَنْجٰىنَا مِنْ هٰذِهٖ لَنَكُوْنَنَّ مِنَ الشّٰكِرِيْنَ (الأنعام : ٦)

qul
قُلْ
Say
கூறுவீராக
man
مَن
"Who
யார்
yunajjīkum
يُنَجِّيكُم
saves you
பாதுகாப்பவன்/உங்களை
min ẓulumāti
مِّن ظُلُمَٰتِ
from darkness[es]
இருள்களில்
l-bari
ٱلْبَرِّ
(of) the land
தரை
wal-baḥri
وَٱلْبَحْرِ
and the sea
இன்னும் கடல்
tadʿūnahu
تَدْعُونَهُۥ
you call Him
பிரார்த்திக்கிறீர்கள்/அவனிடம்
taḍarruʿan
تَضَرُّعًا
humbly
பணிவாக
wakhuf'yatan
وَخُفْيَةً
and secretly
இன்னும் மறைவாக
la-in anjānā
لَّئِنْ أَنجَىٰنَا
"If He saves us
பாதுகாத்தால்/எங்களை
min
مِنْ
from
இருந்து
hādhihi
هَٰذِهِۦ
this
இதில்
lanakūnanna
لَنَكُونَنَّ
surely we will be
நிச்சயம் ஆகிவிடுவோம்
mina l-shākirīna
مِنَ ٱلشَّٰكِرِينَ
from the grateful ones"
நன்றியாளர்களில்

Transliteration:

Qul mai yunajjeekum min zulumaatil barri walbahri tad'oonahoo tadarru'anw wa khufyatann la'in anjaanaa min haazihee lanakoonana minash shaakireen (QS. al-ʾAnʿām:63)

English Sahih International:

Say, "Who rescues you from the darknesses of the land and sea [when] you call upon Him imploring [aloud] and privately, 'If He should save us from this [crisis], we will surely be among the thankful.'" (QS. Al-An'am, Ayah ௬௩)

Abdul Hameed Baqavi:

நீங்கள் "தரையிலும், கடலிலும் உள்ள இருள்களில் சிக்கி (மிக கஷ்டத்திற்குள்ளாகிவிட்ட சமயத்தில்) எங்களை இதிலிருந்து பாதுகாத்துக் கொண்டால் நிச்சயமாக நாங்கள் நன்றி செலுத்துபவர் களாகி விடுவோம் என்று மறைவாகவும், பணிவாகவும் நீங்கள் பிரார்த்திக்கும் சமயத்தில் உங்களை பாதுகாப்பவன் யார்?" என்று (நபியே!) நீங்கள் (அவர்களைக்) கேட்டு, (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௬௩)

Jan Trust Foundation

(நபியே!) நீர் கூறும்| நீங்கள் கரையிலும் கடலிலும் உள்ள இருள்களில் (சிக்கித் தவிக்கும் சமயத்தில்) “எங்களை இதைவிட்டுக் காப்பாற்றிவிட்டால், நிச்சயமாக நாங்கள் நன்றி செலுத்துவோரில் ஆகி விடுவோம் என்று பணிவாகவும், மறைவாகவும் நீங்கள் அவனிடம் பிரார்த்திக்கின்றீர்களே அப்போது உங்களை காப்பாற்றுகிறவன் யார்?”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

"தரை இன்னும் கடலின் இருள்களில் உங்களைப் பாதுகாப்பவன் யார்? எங்களை இதிலிருந்து பாதுகாத்தால் நிச்சயமாக நாங்கள் நன்றியாளர்களில் ஆகிவிடுவோம்" என்று பணிவாகவும் மறைவாகவும் அவனிடமே பிரார்த்திக்கிறீர்கள்.