குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௫௨
Qur'an Surah Al-An'am Verse 52
ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௫௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَا تَطْرُدِ الَّذِيْنَ يَدْعُوْنَ رَبَّهُمْ بِالْغَدٰوةِ وَالْعَشِيِّ يُرِيْدُوْنَ وَجْهَهٗ ۗمَا عَلَيْكَ مِنْ حِسَابِهِمْ مِّنْ شَيْءٍ وَّمَا مِنْ حِسَابِكَ عَلَيْهِمْ مِّنْ شَيْءٍ فَتَطْرُدَهُمْ فَتَكُوْنَ مِنَ الظّٰلِمِيْنَ (الأنعام : ٦)
- walā taṭrudi
- وَلَا تَطْرُدِ
- And (do) not send away
- விரட்டாதீர்
- alladhīna
- ٱلَّذِينَ
- those who
- எவர்களை
- yadʿūna
- يَدْعُونَ
- call
- பிரார்த்திப்பார்கள்
- rabbahum
- رَبَّهُم
- their Lord
- தங்கள் இறைவனை
- bil-ghadati
- بِٱلْغَدَوٰةِ
- in the morning
- காலையில்
- wal-ʿashiyi
- وَٱلْعَشِىِّ
- and the evening
- இன்னும் மாலையில்
- yurīdūna
- يُرِيدُونَ
- desiring
- நாடியவர்களாக
- wajhahu
- وَجْهَهُۥۖ
- His Countenance
- அவனின் முகத்தை
- mā ʿalayka
- مَا عَلَيْكَ
- Not (is) on you
- உம் மீதில்லையே
- min
- مِنْ
- of
- இருந்து
- ḥisābihim
- حِسَابِهِم
- their account
- அவர்களுடைய கணக்கு
- min shayin
- مِّن شَىْءٍ
- [of] anything
- எதுவும்
- wamā
- وَمَا
- and not
- இன்னும் இல்லை
- min ḥisābika
- مِنْ حِسَابِكَ
- from your account
- உம் கணக்கிலிருந்து
- ʿalayhim
- عَلَيْهِم
- on them
- அவர்கள் மீது
- min shayin
- مِّن شَىْءٍ
- [of] anything
- எதுவும்
- fataṭrudahum
- فَتَطْرُدَهُمْ
- So were you to send them away
- நீர் விரட்டுவதற்கு/அவர்களை
- fatakūna
- فَتَكُونَ
- then you would be
- ஆகிவிடுவீர்
- mina l-ẓālimīna
- مِنَ ٱلظَّٰلِمِينَ
- of the wrongdoers
- அநியாயக்காரர்களில்
Transliteration:
Wa laa tatrudil lazeena yad'oona Rabbahum bilghadaati wal 'ashiyyi yureedoona Wajhahoo ma 'alaika min hisaabihim min shai'inw wa maa min hisaabika 'alaihim min shai'in fatatrudahum fatakoona minaz zaalimeen(QS. al-ʾAnʿām:52)
English Sahih International:
And do not send away those who call upon their Lord morning and afternoon, seeking His face [i.e., favor]. Not upon you is anything of their account and not upon them is anything of your account. So were you to send them away, you would [then] be of the wrongdoers. (QS. Al-An'am, Ayah ௫௨)
Abdul Hameed Baqavi:
(நபியே!) தங்கள் இறைவனின் திருப்பொருத்தத்தை விரும்பி காலையிலும் மாலையிலும் பிரார்த்தித்துக் கொண்டிருப்பவர்களை நீங்கள் விரட்டி விடாதீர்கள்! அவர்களுடைய கணக்கிலிருந்து எதுவும் உங்களுடைய பொறுப்பாகாது. உங்களுடைய கணக்கிலிருந்து எதுவும் அவர்களுடைய பொறுப்பாகாது. ஆகவே, நீங்கள் அவர்களை விரட்டினால் அநியாயக்காரர்களில் நீங்களும் ஒருவராகி விடுவீர்கள்! (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௫௨)
Jan Trust Foundation
(நபியே!) தங்கள் இறைவனுடைய திருப் பொருத்தத்தை நாடி, எவர் காலையிலும் மாலையிலும், அவனை(ப் பிரார்த்தித்து) அழைத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களை நீர் விரட்டி விடாதீர்; அவர்களுடைய கேள்வி கணக்குப் பற்றி உம்மீது பொறுப்பில்லை, உம்முடைய கேள்வி கணக்குப் பற்றி அவர்கள் மீதும் யாதொரு பொறுப்புமில்லை - எனவே நீர் அவர்களை விரட்டி விட்டால், நீரும் அநியாயம் செய்பவர்களில் ஒருவராகி விடுவீர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) தங்கள் இறைவனை அவனின் முகத்தை நாடியவர்களாக காலையிலும் மாலையிலும் பிரார்த்திப்பவர்களை விரட்டாதீர்! (அப்படி நீர் விரட்டினால்) அநியாயக்காரர்களில் ஆகிவிடுவீர்! நீர் அவர்களை விரட்டுவதற்கு அவர்களின் கணக்கிலிருந்து எதுவும் உம் மீதில்லையே. உம் கணக்கிலிருந்து எதுவும் அவர்கள் மீதில்லையே.