Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௪௪

Qur'an Surah Al-An'am Verse 44

ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௪௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَلَمَّا نَسُوْا مَا ذُكِّرُوْا بِهٖ فَتَحْنَا عَلَيْهِمْ اَبْوَابَ كُلِّ شَيْءٍۗ حَتّٰٓى اِذَا فَرِحُوْا بِمَآ اُوْتُوْٓا اَخَذْنٰهُمْ بَغْتَةً فَاِذَا هُمْ مُّبْلِسُوْنَ (الأنعام : ٦)

falammā nasū
فَلَمَّا نَسُوا۟
So when they forgot
போது/மறந்தனர்
mā dhukkirū
مَا ذُكِّرُوا۟
what they were reminded
எதை/உபதேசிக்கப் பட்டனர்
bihi
بِهِۦ
of [it]
அதைக் கொண்டு
fataḥnā
فَتَحْنَا
We opened
திறந்தோம்
ʿalayhim
عَلَيْهِمْ
on them
அவர்களுக்கு
abwāba
أَبْوَٰبَ
gates
வாசல்களை
kulli shayin
كُلِّ شَىْءٍ
(of) every thing
எல்லாவற்றின்
ḥattā
حَتَّىٰٓ
until
முடிவாக
idhā fariḥū
إِذَا فَرِحُوا۟
when they rejoiced
மகிழ்ச்சியடைந்த போது
bimā
بِمَآ
in what
எதைக் கொண்டு
ūtū
أُوتُوٓا۟
they were given
கொடுக்கப்பட்டனர்
akhadhnāhum
أَخَذْنَٰهُم
We seized them
பிடித்தோம்/அவர்களை
baghtatan
بَغْتَةً
suddenly
திடீரென
fa-idhā hum
فَإِذَا هُم
and then they
அப்போது அவர்கள்
mub'lisūna
مُّبْلِسُونَ
(were) dumbfounded
நம்பிக்கை இழந்து விடுகிறார்கள்

Transliteration:

Falammaa nasoo maa zukkiroo bihee fatahnaa 'alaihim abwaaba kulli shai'in hattaaa izaa farihoo bimaaa ootooo akhaznaahum baghtatan fa izaa hum mmublisoon (QS. al-ʾAnʿām:44)

English Sahih International:

So when they forgot that by which they had been reminded, We opened to them the doors of every [good] thing until, when they rejoiced in that which they were given, We seized them suddenly, and they were [then] in despair. (QS. Al-An'am, Ayah ௪௪)

Abdul Hameed Baqavi:

அவர்களுக்குச் செய்யப்பட்ட நல்லுபதேசத்தை அவர்கள் மறந்துவிடவே (அவர்களைச் சோதிப்பதற்காக) ஒவ்வொரு பொரு(ள் செல்வங்க)ளின் வாயிலையும் நாம் அவர்களுக்குத் திறந்துவிட்டோம். (அவர்களுக்கு வேண்டியவை எல்லாம் தாராளமாக கிடைத்துக் கொண்டிருந்தன.) அவர்களுக்குக் கொடுக்கப்பட்டவைகளைக் கொண்டு அவர்கள் ஆனந்தமடைந்து கொண்டிருந்த சமயத்தில் (நம் வேதனையைக் கொண்டு) நாம் அவர்களைத் திடீரென பிடித்துக் கொண்டோம் (தண்டித்தோம்). அந்நேரத்தில் அவர்கள் நம்பிக்கையை இழந்து விட்டனர். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௪௪)

Jan Trust Foundation

அவர்களுக்கு நினைவூட்டப்பட்ட நற்போதனைகளை அவர்கள் மறந்துவிட்ட போது, அவர்களுக்கு (முதலில்) எல்லாப் பொருட்களின் வாயில்களையும் நாம் திறந்து விட்டோம் - பின்னர், அவர்களுக்கு கொடுக்கப்பட்டதைக் கொண்டு அவர்கள் மகிழ்ச்சியடைந்து கொண்டிருந்த வேளை (நம் வேதனையைக் கொண்டு) அவர்களை திடீரெனப் பிடித்துக் கொண்டோம்; அப்போது அவர்கள் நம்பிக்கை இழந்தவர்களாக ஆகிவிட்டனர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

தாங்கள் உபதேசிக்கப்பட்டதை அவர்கள் மறந்தபோது (செல்வங்கள்) எல்லாவற்றின் வாசல்களை அவர்களுக்குத் திறந்தோம். முடிவாக, தாங்கள் கொடுக்கப்பட்டதைக் கொண்டு அவர்கள் மகிழ்ச்சியடைந்தபோது அவர்களைத் திடீரென பிடித்தோம். அப்போது, அவர்கள் நம்பிக்கையிழந்து விடுகிறார்கள்.