Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௪௨

Qur'an Surah Al-An'am Verse 42

ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௪௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَقَدْ اَرْسَلْنَآ اِلٰٓى اُمَمٍ مِّنْ قَبْلِكَ فَاَخَذْنٰهُمْ بِالْبَأْسَاۤءِ وَالضَّرَّاۤءِ لَعَلَّهُمْ يَتَضَرَّعُوْنَ (الأنعام : ٦)

walaqad
وَلَقَدْ
And certainly
திட்டவட்டமாக
arsalnā
أَرْسَلْنَآ
We sent (Messengers)
அனுப்பினோம்
ilā
إِلَىٰٓ
to
பக்கம்
umamin
أُمَمٍ
nations
(பல) சமுதாயங்கள்
min qablika
مِّن قَبْلِكَ
from before you
உமக்கு முன்னர்
fa-akhadhnāhum
فَأَخَذْنَٰهُم
then We seized them
பிடித்தோம்/அவர்களை
bil-basāi
بِٱلْبَأْسَآءِ
with adversity
வறுமையைக் கொண்டு
wal-ḍarāi
وَٱلضَّرَّآءِ
and hardship
இன்னும் நோய்
laʿallahum yataḍarraʿūna
لَعَلَّهُمْ يَتَضَرَّعُونَ
so that they may humble themselves
அவர்கள் பணிவதற்காக

Transliteration:

Wa laqad arsalnaaa ilaaa umamim min qablika fa akhaznaahum bilbaasaaa'i waddarraaa'i la'allahum yata darra'oon (QS. al-ʾAnʿām:42)

English Sahih International:

And We have already sent [messengers] to nations before you, [O Muhammad]; then We seized them with poverty and hardship that perhaps they might humble themselves [to Us]. (QS. Al-An'am, Ayah ௪௨)

Abdul Hameed Baqavi:

(நபியே!) உங்களுக்கு முன்னிருந்த பல வகுப்பினருக்கும் நாம் (நம்முடைய தூதர்களை) நிச்சயமாக அனுப்பி வைத்தோம். (எனினும் அத்தூதர்களை அவர்கள் நிராகரித்துவிட்டனர். ஆகவே) அவர்கள் பணிந்து வருவதற்காக நோயைக் கொண்டும், வறுமையைக் கொண்டும் நாம் அவர்களைப் பிடித்தோம். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௪௨)

Jan Trust Foundation

(நபியே!) உமக்கு முன்னர் இருந்த சமூகத்தாருக்கும் நாம் (நம்) தூதர்களை அனுப்பினோம்; அச்சமூகத்தாரை நோயைக் கொண்டும் வறுமையைக் கொண்டும் பிடித்தோம் அவர்கள் பணிந்து வரும் பொருட்டு.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) உமக்கு முன்னர் பல சமுதாயங்களுக்கு (தூதர்களை) திட்டவட்டமாக அனுப்பினோம். (அவர்கள் நிராகரித்து விடவே) அவர்கள் பணிவதற்காக வறுமை இன்னும் நோயைக் கொண்டு அவர்களைப் பிடித்தோம்.