குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௩௬
Qur'an Surah Al-An'am Verse 36
ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௩௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
۞ اِنَّمَا يَسْتَجِيْبُ الَّذِيْنَ يَسْمَعُوْنَ ۗوَالْمَوْتٰى يَبْعَثُهُمُ اللّٰهُ ثُمَّ اِلَيْهِ يُرْجَعُوْنَ (الأنعام : ٦)
- innamā
- إِنَّمَا
- Only
- எல்லாம்
- yastajību
- يَسْتَجِيبُ
- respond
- ஏற்றுக் கொள்வார்
- alladhīna
- ٱلَّذِينَ
- those who
- எவர்கள்
- yasmaʿūna
- يَسْمَعُونَۘ
- listen
- செவிசாய்ப்பார்கள்
- wal-mawtā
- وَٱلْمَوْتَىٰ
- But the dead
- இறந்தவர்கள்
- yabʿathuhumu
- يَبْعَثُهُمُ
- will resurrect them
- எழுப்புவான்/அவர்களை
- l-lahu
- ٱللَّهُ
- Allah
- அல்லாஹ்
- thumma
- ثُمَّ
- then
- பிறகு
- ilayhi
- إِلَيْهِ
- to Him
- அவனிடமே
- yur'jaʿūna
- يُرْجَعُونَ
- they will be returned
- திருப்பப்படுவார்கள்
Transliteration:
Innamaa yastajeebul lazeena yasma'oon; walmawtaa yab'asuhumul laahu summa ilaihi yurja'oon(QS. al-ʾAnʿām:36)
English Sahih International:
Only those who hear will respond. But the dead – Allah will resurrect them; then to Him they will be returned. (QS. Al-An'am, Ayah ௩௬)
Abdul Hameed Baqavi:
எவர்கள் (உங்களுக்குச்) செவிசாய்க்கக்கூடிய (உயிருள்ள)வர்களாக இருக்கின்றனரோ அவர்கள்தான் (உங்களை) ஏற்றுக் கொள்வார்கள். (ஆனால், இந்த காஃபிர்களோ செவிமடுக்க முடியாத இறந்தவர்களைப் போலவே இருக்கின்றனர்.) ஆகவே, இறந்தவர்களை (மறுமையில்தான்) அல்லாஹ் உயிர்ப்பிப்பான். பின்னர் அவனிடமே கொண்டு வரப்படுவார்கள். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௩௬)
Jan Trust Foundation
(சத்தியத்திற்கு) செவிசாய்ப்போர் தாம் நிச்சயமாக உம் உபதேசத்தை ஏற்றுக் கொள்வார்கள்; (மற்றவர்கள் உயிரற்றவர்களைப் போன்றோரே!) இறந்தவர்களை அல்லாஹ் உயிர்ப்பித்து எழுப்புவான்; பின்னர் அவனிடமே அவர்கள் மீட்டப்படுவார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(உண்மையை) ஏற்றுக் கொள்வதெல்லாம் செவிசாய்ப்பவர்கள்தான். இறந்தவர்களை அல்லாஹ் எழுப்புவான். பிறகு, அவனிடமே திருப்பப்படுவார்கள்.