குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௩௪
Qur'an Surah Al-An'am Verse 34
ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௩௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَقَدْ كُذِّبَتْ رُسُلٌ مِّنْ قَبْلِكَ فَصَبَرُوْا عَلٰى مَا كُذِّبُوْا وَاُوْذُوْا حَتّٰٓى اَتٰىهُمْ نَصْرُنَا ۚوَلَا مُبَدِّلَ لِكَلِمٰتِ اللّٰهِ ۚوَلَقَدْ جَاۤءَكَ مِنْ نَّبَإِ۟ى الْمُرْسَلِيْنَ (الأنعام : ٦)
- walaqad
- وَلَقَدْ
- And surely
- திட்டவட்டமாக
- kudhibat
- كُذِّبَتْ
- were rejected
- பொய்ப்பிக்கப்பட்டனர்
- rusulun
- رُسُلٌ
- Messengers
- (பல) தூதர்கள்
- min qablika
- مِّن قَبْلِكَ
- from before you
- உமக்கு முன்னர்
- faṣabarū
- فَصَبَرُوا۟
- but they were patient
- பொறுத்தனர்
- ʿalā
- عَلَىٰ
- over
- மீது
- mā
- مَا
- what
- எது
- kudhibū
- كُذِّبُوا۟
- they were rejected
- பொய்ப்பிக்கப்பட்டனர்
- waūdhū
- وَأُوذُوا۟
- and they were harmed
- இன்னும் துன்புறுத்தப்பட்டனர்
- ḥattā
- حَتَّىٰٓ
- until
- வரை
- atāhum
- أَتَىٰهُمْ
- came to them
- வந்தது/அவர்களுக்கு
- naṣrunā
- نَصْرُنَاۚ
- Our help
- நம் உதவி
- walā mubaddila
- وَلَا مُبَدِّلَ
- And no one (can) alter
- அறவே இல்லை/மாற்றுபவர்
- likalimāti
- لِكَلِمَٰتِ
- (the) words
- வாக்குகளை
- l-lahi
- ٱللَّهِۚ
- (of) Allah
- அல்லாஹ்வின்
- walaqad
- وَلَقَدْ
- and surely
- திட்டமாக
- jāaka
- جَآءَكَ
- has come to you
- வந்துள்ளது/உமக்கு
- min naba-i
- مِن نَّبَإِى۟
- of (the) news
- செய்தியில் சில
- l-mur'salīna
- ٱلْمُرْسَلِينَ
- (of) the Messengers
- தூதர்களின்
Transliteration:
Wa laqad kuzzibat Rusulum min qablika fasabaroo 'alaa maa kuzziboo wa oozoo hattaaa ataahum nasrunaa; wa laa mubaddila li Kalimaatil laah; wa laqad jaaa'aka min naba'il mursaleen(QS. al-ʾAnʿām:34)
English Sahih International:
And certainly were messengers denied before you, but they were patient over the denial, and they were harmed until Our victory came to them. And none can alter the words [i.e., decrees] of Allah. And there has certainly come to you some information about the [previous] messengers. (QS. Al-An'am, Ayah ௩௪)
Abdul Hameed Baqavi:
உங்களுக்கு முன்னிருந்த (நம்முடைய) பல தூதர்களும் (இவ்வாறு) பொய்யரெனவே கூறப்பட்டனர். அவர்களுக்கு நம்முடைய உதவி வரும் வரையில் அவர்கள் பொய்யரெனத் துன்புறுத்தப்பட்டதை அவர்கள் (உறுதியோடு) பொறுத்துக் கொண்டிருந்தனர். (ஆகவே நபியே! நீங்களும் அவ்வாறே பொறுத்திருங்கள்.) அல்லாஹ்வுடைய வாக்குகளை எவராலும் மாற்ற முடியாது. (உங்களுக்கு முன்னிருந்த நம்) தூதர்களின் (இத்தகைய) செய்திகள் நிச்சயமாக உங்களிடம் வந்தே இருக்கின்றன. (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௩௪)
Jan Trust Foundation
உமக்கு முன்னிருந்த (நம்) தூதர்களும் பொய்ப்பிக்கப்பட்டனர் அவர்களுக்கு நம் உதவி வரும்வரை, தாம் பொய்ப்பிக்கப் பட்டதையும், துன்புறுத்தப்பட்டதையும், அவர்கள் பொறுத்துக் கொண்டனர்; அல்லாஹ்வின் வாக்குகளை யாராலும் மாற்ற முடியாது; (உங்களுக்கு முன்னிருந்த) தூதர்களின் இத்தகைய செய்திகள் உம்மிடம் வந்தேயிருக்கின்றன.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
திட்டவட்டமாக உமக்கு முன்னர் பல தூதர்கள் பொய்ப்பிக்கப்பட்டனர். அவர்களுக்கு நம் உதவி வரும்வரை அவர்கள் பொய்ப்பிக்கப்பட்டதையும் துன்புறுத்தப்பட்டதையும் பொறுத்தனர். அல்லாஹ்வின் வாக்குகளை மாற்றுபவர் அறவே இல்லை. தூதர்களின் செய்தியில் சில உமக்கு திட்டமாக வந்துள்ளது.