Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௨௩

Qur'an Surah Al-An'am Verse 23

ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௨௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ثُمَّ لَمْ تَكُنْ فِتْنَتُهُمْ اِلَّآ اَنْ قَالُوْا وَاللّٰهِ رَبِّنَا مَا كُنَّا مُشْرِكِيْنَ (الأنعام : ٦)

thumma
ثُمَّ
Then
பிறகு
lam takun
لَمْ تَكُن
not will be
இருக்காது
fit'natuhum
فِتْنَتُهُمْ
(for) them a plea
அவர்களுடைய சோதனை
illā
إِلَّآ
except
தவிர
an qālū
أَن قَالُوا۟
that they say
அவர்கள் கூறுவதை
wal-lahi
وَٱللَّهِ
"By Allah
அல்லாஹ் மீது சத்தியமாக
rabbinā
رَبِّنَا
our Lord
எங்கள் இறைவா
mā kunnā
مَا كُنَّا
not we were
நாங்கள் இருக்கவில்லை
mush'rikīna
مُشْرِكِينَ
those who associated others (with Allah)"
இணைவைப்பவர்களாக

Transliteration:

Summa lam takun fitnatuhum illaaa an qaaloo wallaahi Rabbinaa maa kunnaa mushrikeen (QS. al-ʾAnʿām:23)

English Sahih International:

Then there will be no [excuse upon] examination except they will say, "By Allah, our Lord, we were not those who associated." (QS. Al-An'am, Ayah ௨௩)

Abdul Hameed Baqavi:

(அது சமயம்) அவர்கள் "அல்லாஹ்தான் எங்கள் இறைவன்; நாங்கள் (அவனுக்கு யாதொன்றையும்) இணையாக்கவில்லையே!" என்று (பொய்யாகப்) புகல் கூறுவதைத் தவிர (பதில்) வேறொன்றுமிராது. (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௨௩)

Jan Trust Foundation

“எங்கள் ரப்பாகிய அல்லாஹ்வின் மீது ஆணையாக, நாங்கள் இணைவைப்பவர்களாக இருந்ததில்லை” என்று கூறுவதைத் தவிர வேறு அவர்களுடைய பதில் எதுவும் இராது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பிறகு, “எங்கள் இறைவா! அல்லாஹ் மீது சத்தியமாக நாங்கள் இணைவைப்பவர்களாக இருக்கவில்லை!” என்று அவர்கள் கூறுவதைத் தவிர அவர்களுடைய சோதனை(யில் பதில் வேறு) இருக்காது.