குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௧௬௪
Qur'an Surah Al-An'am Verse 164
ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௧௬௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قُلْ اَغَيْرَ اللّٰهِ اَبْغِيْ رَبًّا وَّهُوَ رَبُّ كُلِّ شَيْءٍۗ وَلَا تَكْسِبُ كُلُّ نَفْسٍ اِلَّا عَلَيْهَاۚ وَلَا تَزِرُ وَازِرَةٌ وِّزْرَ اُخْرٰىۚ ثُمَّ اِلٰى رَبِّكُمْ مَّرْجِعُكُمْ فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ فِيْهِ تَخْتَلِفُوْنَ (الأنعام : ٦)
- qul
- قُلْ
- Say
- கூறுவீராக
- aghayra
- أَغَيْرَ
- "Is (it) other than
- அல்லாதவனையா?
- l-lahi
- ٱللَّهِ
- Allah
- அல்லாஹ்
- abghī
- أَبْغِى
- I (should) seek
- தேடுவேன்
- rabban
- رَبًّا
- (as) a Lord
- இறைவனாக
- wahuwa
- وَهُوَ
- while He
- அவன் இருக்க
- rabbu
- رَبُّ
- (is) the Lord
- இறைவன்
- kulli shayin
- كُلِّ شَىْءٍۚ
- (of) every thing?"
- எல்லாவற்றின்
- walā taksibu
- وَلَا تَكْسِبُ
- And not earns
- செய்வதில்லை
- kullu nafsin
- كُلُّ نَفْسٍ
- every soul
- ஒவ்வொரு ஆன்மா
- illā
- إِلَّا
- except
- தவிர
- ʿalayhā
- عَلَيْهَاۚ
- against itself
- தனக்கெதிராக
- walā taziru
- وَلَا تَزِرُ
- and not bears
- சுமக்காது
- wāziratun
- وَازِرَةٌ
- any bearer of burden
- பாவம் செய்யக்கூடிய ஆன்மா
- wiz'ra
- وِزْرَ
- burden
- பாவத்தை
- ukh'rā
- أُخْرَىٰۚ
- (of) another
- மற்றொன்றின்
- thumma
- ثُمَّ
- Then
- பிறகு
- ilā
- إِلَىٰ
- to
- பக்கம்தான்
- rabbikum
- رَبِّكُم
- your Lord
- உங்கள் இறைவன்
- marjiʿukum
- مَّرْجِعُكُمْ
- (is) your return
- உங்கள் மீட்சி
- fayunabbi-ukum
- فَيُنَبِّئُكُم
- then He will inform you
- அறிவிப்பான்/உங்களுக்கு
- bimā
- بِمَا
- about what
- எதை
- kuntum
- كُنتُمْ
- you were
- இருந்தீர்கள்
- fīhi
- فِيهِ
- concerning it
- அதில்
- takhtalifūna
- تَخْتَلِفُونَ
- differing
- முரண்படுகிறீர்கள்
Transliteration:
Qul aghairal laahi abhee Rabbanw wa Huwa Rabbu kulli shai'; wa laa taksibu kullu nafsin illaa 'alaihaa; wa laa taziru waaziratunw wizra ukhraa; summa ilaa Rabbikum marji'ukum fa yunabbi'ukum bimaa kuntum feehi takhtalifoon(QS. al-ʾAnʿām:164)
English Sahih International:
Say, "Is it other than Allah I should desire as a lord while He is the Lord of all things? And every soul earns not [blame] except against itself, and no bearer of burdens will bear the burden of another. Then to your Lord is your return, and He will inform you concerning that over which you used to differ." (QS. Al-An'am, Ayah ௧௬௪)
Abdul Hameed Baqavi:
அன்றி "அல்லாஹ்வே அனைவரையும் படைத்து வளர்த்து வருகையில் அவனையன்றி மற்றெவரையும் எனக்கு இறைவனாக நான் எடுத்துக் கொள்வேனா? பாவம் செய்யும் ஒவ்வொரு ஆத்மாவும் தனக்கே கேட்டைத் தேடிக் கொள்கிறது. ஆகவே, ஓர் ஆத்மாவின் (பாவச்) சுமையை மற்றொரு ஆத்மா சுமக்காது. (இறந்த) பின்னர் நீங்கள் அனைவரும் உங்கள் இறைவனிடமே செல்வீர்கள். நீங்கள் கருத்து வேற்றுமை கொண்டிருந்ததைப் பற்றி (அவற்றில் எது தவறு, எது சரி என்பதை அது சமயம்) அவன் உங்களுக்கு அறிவிப்பான். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௧௬௪)
Jan Trust Foundation
“அல்லாஹ்வை அன்றி மற்றெவரையாவது நான் இறைவனாக எடுத்துக் கொள்வேனா? எல்லாப் பொருள்களுக்கும் அவனே இறைவனாக இருக்கின்றான் - பாவம் செய்யும் ஒவ்வோர் ஆத்மாவும் தனக்கே, கேட்டைத் தேடிக்கொள்கிறது; ஓர் ஆத்மாவின் (பாவச்)சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது. பின்னர், நீங்கள் (அனைவரும்) உங்கள் இறைவன் பக்கமே திரும்பிச் செல்ல வேண்டியதிருக்கிறது; அப்போது நீங்கள் பிணங்கி விவாதம் செய்து கொண்டிருந்தவை பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான்” என்று (நபியே!) நீர் கூறும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அல்லாஹ் அல்லாதவனையா -அவன் எல்லாவற்றின் இறைவனாக இருக்கல- நான் இறைவனாக (எனக்கு)த் தேடுவேன்? (பாவம் செய்கிற) ஒவ்வோர் ஆன்மா(வும்) தனக்கெதிராகவே தவிர (பாவம்) செய்வதில்லை. பாவம் செய்யக்கூடிய ஓர் ஆன்மா மற்றொன்றின் பாவத்தை சுமக்காது. (இறந்த) பிறகு, உங்கள் இறைவன் பக்கம்தான் உங்கள் மீட்சி இருக்கிறது. நீங்கள் முரண்பட்டு கொண்டிருந்தவற்றில் (எது தவறு, எது சரி என்று அவன்) உங்களுக்கு அறிவிப்பான்.