குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௧௩௫
Qur'an Surah Al-An'am Verse 135
ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௧௩௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قُلْ يٰقَوْمِ اعْمَلُوْا عَلٰى مَكَانَتِكُمْ اِنِّيْ عَامِلٌۚ فَسَوْفَ تَعْلَمُوْنَۙ مَنْ تَكُوْنُ لَهٗ عَاقِبَةُ الدَّارِۗ اِنَّهٗ لَا يُفْلِحُ الظّٰلِمُوْنَ (الأنعام : ٦)
- qul
- قُلْ
- Say
- கூறுவீராக
- yāqawmi
- يَٰقَوْمِ
- "O my people!
- என் சமுதாயமே
- iʿ'malū
- ٱعْمَلُوا۟
- Work
- செய்யுங்கள்
- ʿalā makānatikum
- عَلَىٰ مَكَانَتِكُمْ
- on your position
- உங்கள் போக்கில்
- innī
- إِنِّى
- Indeed, I am
- நிச்சயமாக நான்
- ʿāmilun
- عَامِلٌۖ
- a worker
- செய்கிறேன்
- fasawfa taʿlamūna
- فَسَوْفَ تَعْلَمُونَ
- And soon you will know
- அறிவீர்கள்
- man
- مَن
- who
- எவர்
- takūnu
- تَكُونُ
- will have
- இருக்கும்
- lahu
- لَهُۥ
- for himself
- அவருக்கு
- ʿāqibatu
- عَٰقِبَةُ
- (in) the end
- முடிவு
- l-dāri
- ٱلدَّارِۗ
- (a good) home
- மறுமையின்
- innahu
- إِنَّهُۥ
- Indeed [he]
- நிச்சயமாக செய்தி
- lā yuf'liḥu
- لَا يُفْلِحُ
- (will) not succeed
- வெற்றி பெறமாட்டார்(கள்)
- l-ẓālimūna
- ٱلظَّٰلِمُونَ
- the wrongdoers"
- அநியாயக்காரர்கள்
Transliteration:
Qul yaa qawmi' maloo 'alaa makaanatikum innee 'aamilun fasawfa ta'lamoona man takoonu lahoo 'aaqibatud daar; innahoo laa yuflihuz zaalimoon(QS. al-ʾAnʿām:135)
English Sahih International:
Say, "O my people, work according to your position; [for] indeed, I am working. And you are going to know who will have succession in the home. Indeed, the wrongdoers will not succeed." (QS. Al-An'am, Ayah ௧௩௫)
Abdul Hameed Baqavi:
(நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "என்னுடைய மக்களே! நீங்கள் உங்கள் போக்கில் (உங்கள்) காரியங்களைச் செய்துகொண்டே இருங்கள். நிச்சயமாக நானும் (என் போக்கில் என்) காரியங்களைச் செய்து கொண்டிருப்பேன். இம்மையின் முடிவு எவருக்குச் சாதகமாக இருக்கின்றது என்பதை பின்னர் நீங்கள் அறிந்து கொள்வீர்கள். நிச்சயமாக அநியாயக்காரர்கள் வெற்றிபெற மாட்டார்கள்." (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௧௩௫)
Jan Trust Foundation
(நபியே!) நீர் கூறும்| “என்னுடைய கூட்டத்தாரே! நீங்கள் உங்கள் நிலைமைக் கொப்ப காரியங்களைச் செய்து கொண்டிருங்கள்; நானும் (காரியங்கள்) செய்து கொண்டிருப்பவனே; அப்பால், இவ்வுலகத்தின் இறுதி முடிவு யாருக்கு நலமாக இருக்கும் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள் - நிச்சயமாக அநியாயக்காரர்கள் வெற்றிபெற மாட்டார்கள்.”
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) கூறுவீராக: "என் சமுதாயமே! உங்கள் போக்கில் (நீங்கள்) செய்யுங்கள். நிச்சயமாக நான் (என் இறைவனின் கட்டளைப்படி) செய்கிறேன். மறுமையின் (நல்ல) முடிவு எவருக்கு இருக்கும் என்பதை (நீங்கள் விரைவில்) அறிவீர்கள். நிச்சயமாக அநியாயக்காரர்கள் வெற்றிபெற மாட்டார்கள்."