Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௧௩௩

Qur'an Surah Al-An'am Verse 133

ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௧௩௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَرَبُّكَ الْغَنِيُّ ذُو الرَّحْمَةِ ۗاِنْ يَّشَأْ يُذْهِبْكُمْ وَيَسْتَخْلِفْ مِنْۢ بَعْدِكُمْ مَّا يَشَاۤءُ كَمَآ اَنْشَاَكُمْ مِّنْ ذُرِّيَّةِ قَوْمٍ اٰخَرِيْنَ (الأنعام : ٦)

warabbuka
وَرَبُّكَ
And your Lord
உம் இறைவன்
l-ghaniyu
ٱلْغَنِىُّ
(is) the Self-Sufficient
நிறைவானவன்
dhū l-raḥmati
ذُو ٱلرَّحْمَةِۚ
(the) Possessor (of) mercy
கருணையுடையவன்
in yasha
إِن يَشَأْ
If He wills
அவன் நாடினால்
yudh'hib'kum
يُذْهِبْكُمْ
He can take you away
போக்கி விடுவான்/உங்களை
wayastakhlif
وَيَسْتَخْلِفْ
and grant succession
இன்னும் தோன்றச் செய்வான்
min
مِنۢ
from
பின்னர்
baʿdikum
بَعْدِكُم
after you
பின்னர் உங்களுக்கு
mā yashāu
مَّا يَشَآءُ
(to) whom He wills
எவர்களை/நாடுகிறான்
kamā
كَمَآ
as
போன்று
ansha-akum
أَنشَأَكُم
He raised you
உருவாக்கினான் உங்களை
min dhurriyyati
مِّن ذُرِّيَّةِ
from the descendants
சந்ததியிலிருந்து
qawmin
قَوْمٍ
(of) people
சமுதாயத்தின்
ākharīna
ءَاخَرِينَ
other
மற்றவர்கள்

Transliteration:

Wa Rabbukal ghaniyyu zur rahmah; iny yashaaa yuz hibkum wa yastakhlif mim ba'dikum wa yastakhlif mim ba'dikum maa yashaaa'u kamaaa ansha akum min zurriyyati qawmin aakhareen (QS. al-ʾAnʿām:133)

English Sahih International:

And your Lord is the Free of need, the possessor of mercy. If He wills, He can do away with you and give succession after you to whomever He wills, just as He produced you from the descendants of another people. (QS. Al-An'am, Ayah ௧௩௩)

Abdul Hameed Baqavi:

(நபியே!) உங்களது இறைவன் (எத்தகைய) தேவையற்றவனாகவும் அன்புடையவனாகவும் இருக்கின்றான். (மனிதர்களே!) அவன் விரும்பினால் உங்களைப் போக்கி தான் நாடிய எவரையும் உங்களுடைய இடத்தில் அமர்த்தி விடுவான். இவ்வாறே (சென்று போன) மற்ற மக்களின் சந்ததிகளிலிருந்து உங்களை உற்பத்தி செய்திருக்கிறான். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௧௩௩)

Jan Trust Foundation

உம் இறைவன் தேவைகளற்றவன்; மிக்க கருணையுடையவன் - அவன் நாடினால் உங்களைபோக்கி உங்களுக்கு பிறகு, உங்களை அவன் இதர மக்களின் சந்ததியிலிருந்து உற்பத்தி செய்தது போன்று - தான் நாடியவரை உங்களுக்கு பதிலாக ஆக்கி விடுவான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) உம் இறைவன் நிறைவானவன், கருணையுடையவன் ஆவான். (மனிதர்களே!) அவன் நாடினால் உங்களைப் போக்கி, (சென்றுபோன) மற்ற சமுதாயத்தின் சந்ததியிலிருந்து உங்களை உருவாக்கியதைப் போன்று உங்களுக்குப் பின்னர் தான் நாடியவர்களை தோன்றச் செய்வான்.