Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௧௧௦

Qur'an Surah Al-An'am Verse 110

ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௧௧௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَنُقَلِّبُ اَفْـِٕدَتَهُمْ وَاَبْصَارَهُمْ كَمَا لَمْ يُؤْمِنُوْا بِهٖٓ اَوَّلَ مَرَّةٍ وَّنَذَرُهُمْ فِيْ طُغْيَانِهِمْ يَعْمَهُوْنَ ࣖ ۔ (الأنعام : ٦)

wanuqallibu afidatahum
وَنُقَلِّبُ أَفْـِٔدَتَهُمْ
And We will turn their hearts
புரட்டுகிறோம்/உள்ளங்களை/அவர்களுடைய
wa-abṣārahum
وَأَبْصَٰرَهُمْ
and their sights
இன்னும் பார்வைகளை/அவர்களுடைய
kamā
كَمَا
(just) as
போன்று
lam yu'minū
لَمْ يُؤْمِنُوا۟
not they believe
அவர்கள் நம்பிக்கைகொள்ளவில்லை
bihi
بِهِۦٓ
in it
இதை
awwala
أَوَّلَ
(the) first
முதல்
marratin
مَرَّةٍ
time
முறையாக
wanadharuhum
وَنَذَرُهُمْ
And We will leave them
விடுகிறோம்/அவர்களை
fī ṭugh'yānihim
فِى طُغْيَٰنِهِمْ
in their transgression
அட்டூழியத்தில்/அவர்களுடைய
yaʿmahūna
يَعْمَهُونَ
wandering blindly
கடுமையாக அட்டூழியம் செய்வார்கள்

Transliteration:

Wa nuqallibu af'idatahum wa absaarahum kamaa lam yu'minoo biheee awwala marratinw wa wa nazaruhum fee tughyaanihim ya'mahoon (QS. al-ʾAnʿām:110)

English Sahih International:

And We will turn away their hearts and their eyes just as they refused to believe in it [i.e., the revelation] the first time. And We will leave them in their transgression, wandering blindly. (QS. Al-An'am, Ayah ௧௧௦)

Abdul Hameed Baqavi:

முன்னர் அவர்கள் இ(வ்வேதத்)தை நம்பிக்கை கொள்ளாமல் இருந்தபடியே (இப்பொழுதும் நம்பிக்கை கொள்ளாது இருப்பதற்காக) நாம் அவர்களுடைய உள்ளங்களையும் பார்வைகளையும் புரட்டி அவர்களுடைய வழிகேட்டிலேயே அவர்களை தட்டழிந்து திரியும்படி விட்டிருக்கின்றோம். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௧௧௦)

Jan Trust Foundation

மேலும், நாம் அவர்களுடைய உள்ளங்களையும் அவர்களுடைய பார்வைகளையும் திருப்பிவிடுவோம் - அவர்கள் முதலில் இதை நம்பாமல் இருந்தது போலவே; இன்னும் அவர்கள் தங்களுடைய வழி கேட்டிலேயே தட்டழிந்து திரியுமாறு அவர்களை நாம் விட்டுவிடுவோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

முதல் முறையாக அவர்கள் இ(வ்வேதத்)தை நம்பிக்கை கொள்ளாதது போன்றே நாம் அவர்களுடைய உள்ளங்களையும் அவர்களுடைய பார்வைகளையும் புரட்டுகிறோம்; அவர்களுடைய அட்டூழியத்தில் (மேலும்) கடுமையாக அட்டூழியம் செய்பவர்களாக அவர்களை (விட்டு) விடுகிறோம.