Skip to content

ஸூரா ஸூரத்துல் அன்ஆம் - Page: 8

Al-An'am

(al-ʾAnʿām)

௭௧

قُلْ اَنَدْعُوْا مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا يَنْفَعُنَا وَلَا يَضُرُّنَا وَنُرَدُّ عَلٰٓى اَعْقَابِنَا بَعْدَ اِذْ هَدٰىنَا اللّٰهُ كَالَّذِى اسْتَهْوَتْهُ الشَّيٰطِيْنُ فِى الْاَرْضِ حَيْرَانَ لَهٗٓ اَصْحٰبٌ يَّدْعُوْنَهٗٓ اِلَى الْهُدَى ائْتِنَا ۗ قُلْ اِنَّ هُدَى اللّٰهِ هُوَ الْهُدٰىۗ وَاُمِرْنَا لِنُسْلِمَ لِرَبِّ الْعٰلَمِيْنَۙ ٧١

qul
قُلْ
கூறுவீராக
anadʿū
أَنَدْعُوا۟
அழைப்போமா?
min dūni l-lahi
مِن دُونِ ٱللَّهِ
அல்லாஹ்வைத் தவிர
مَا
எவற்றை
lā yanfaʿunā
لَا يَنفَعُنَا
பலனளிக்காது/நமக்கு
walā yaḍurrunā
وَلَا يَضُرُّنَا
இன்னும் தீங்கிழைக்காது/நமக்கு
wanuraddu
وَنُرَدُّ
இன்னும் திருப்பப்படுவோம்
ʿalā
عَلَىٰٓ
மேல்
aʿqābinā
أَعْقَابِنَا
எங்கள் குதிங்கால்கள்
baʿda idh hadānā
بَعْدَ إِذْ هَدَىٰنَا
பின்னர்/நேர்வழிப்படுத்தினான்/எங்களை
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ka-alladhī
كَٱلَّذِى
ஒருவனைப்போன்று
is'tahwathu
ٱسْتَهْوَتْهُ
வழிதவறச் செய்தன/ அவனை
l-shayāṭīnu
ٱلشَّيَٰطِينُ
ஷைத்தான்கள்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
ḥayrāna
حَيْرَانَ
திகைத்தவனாக
lahu
لَهُۥٓ
அவனுக்கு
aṣḥābun
أَصْحَٰبٌ
நண்பர்கள்
yadʿūnahu
يَدْعُونَهُۥٓ
அழைக்கிறார்கள்/அவனை
ilā l-hudā
إِلَى ٱلْهُدَى
பக்கம்/நேர்வழி
i'tinā
ٱئْتِنَاۗ
எங்களிடம் வா
qul
قُلْ
கூறுவீராக
inna
إِنَّ
நிச்சயமாக
hudā
هُدَى
நேர்வழி
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
huwa
هُوَ
அதுதான்
l-hudā
ٱلْهُدَىٰۖ
நேர்வழி
wa-umir'nā
وَأُمِرْنَا
கட்டளையிடப்பட்டோம்
linus'lima
لِنُسْلِمَ
நாங்கள் பணிந்துவிட
lirabbi
لِرَبِّ
இறைவனுக்கே
l-ʿālamīna
ٱلْعَٰلَمِينَ
அகிலத்தார்களின்
(நபியே!) நீங்கள் கேளுங்கள்: "அல்லாஹ்வை விட்டுவிட்டு நமக்கு யாதொரு நன்மையும், தீமையும் செய்ய சக்தி அற்றவைகளையா நாம் அழைப்போம்? அல்லாஹ் நம்மை நேரான வழியில் செலுத்திய பின்னரும் (நாம்) நம் பின்புறமே திரும்பி விடுவோமா? (அவ்வாறாயின்) ஒருவனுக்கு நேரான வழியில் அழைக்கக்கூடிய நண்பர்கள் இருந்து அவனை அவர்கள் "தம்மிடம் வா" என அழைத்துக் கொண்டிருக்க, அவன் (அவ்வழியில் செல்லாது) ஷைத்தானுடைய ஏமாற்றத்தில் சிக்கி, பூமியில் தட்டழிந்து திரிபவனாக ஆகிவிட்டானோ அவனுக்கு ஒப்பானவர்களாகி விடுவோம்." (மேலும்) நீங்கள் கூறுங்கள்: "நிச்சயமாக அல்லாஹ்வின் வழிதான் நேரான வழி. உலகத்தார் அனைவரின் இறைவனாகிய அவனுக்கே முற்றிலும் தலைசாய்க்க வேண்டும் என நாங்கள் கட்டளையிடப்பட்டுள்ளோம்." ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௭௧)
Tafseer
௭௨

وَاَنْ اَقِيْمُوا الصَّلٰوةَ وَاتَّقُوْهُۗ وَهُوَ الَّذِيْٓ اِلَيْهِ تُحْشَرُوْنَ ٧٢

wa-an aqīmū
وَأَنْ أَقِيمُوا۟
இன்னும் நிலைநிறுத்துங்கள்
l-ṣalata
ٱلصَّلَوٰةَ
தொழுகையை
wa-ittaqūhu
وَٱتَّقُوهُۚ
இன்னும் அவனைஅஞ்சுங்கள்
wahuwa
وَهُوَ
அவன்
alladhī
ٱلَّذِىٓ
எவன்
ilayhi
إِلَيْهِ
அவன் பக்கம் தான்
tuḥ'sharūna
تُحْشَرُونَ
ஒன்று திரட்டப்படுவீர்கள்
"(அன்றி) தொழுகையைக் கடைப்பிடித்தொழுகும்படியும், அவனுக்கே பயப்படும்படியும் (ஏவப்பட்டுள்ளோம்.) அவனிடம்தான் நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள்" (என்றும் கூறுங்கள்.) ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௭௨)
Tafseer
௭௩

وَهُوَ الَّذِيْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ بِالْحَقِّۗ وَيَوْمَ يَقُوْلُ كُنْ فَيَكُوْنُۚ قَوْلُهُ الْحَقُّۗ وَلَهُ الْمُلْكُ يَوْمَ يُنْفَخُ فِى الصُّوْرِۗ عٰلِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ وَهُوَ الْحَكِيْمُ الْخَبِيْرُ ٧٣

wahuwa
وَهُوَ
அவன்தான்
alladhī
ٱلَّذِى
எவன்
khalaqa
خَلَقَ
படைத்தான்
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களை
wal-arḍa
وَٱلْأَرْضَ
இன்னும் பூமியை
bil-ḥaqi
بِٱلْحَقِّۖ
உண்மையில்
wayawma
وَيَوْمَ
இன்னும் நாள்
yaqūlu
يَقُولُ
கூறுவான்
kun
كُن
ஆகுக!
fayakūnu
فَيَكُونُۚ
உடனே ஆகிவிடும்
qawluhu
قَوْلُهُ
அவனுடைய சொல்தான்
l-ḥaqu
ٱلْحَقُّۚ
உண்மை
walahu
وَلَهُ
இன்னும் அவனுக்கே
l-mul'ku
ٱلْمُلْكُ
ஆட்சி
yawma
يَوْمَ
நாளில்
yunfakhu
يُنفَخُ
ஊதப்படும்
fī l-ṣūri
فِى ٱلصُّورِۚ
சூரில்
ʿālimu
عَٰلِمُ
அறிந்தவன்
l-ghaybi
ٱلْغَيْبِ
மறைவானதை
wal-shahādati
وَٱلشَّهَٰدَةِۚ
வெளிப்படையானதை
wahuwa
وَهُوَ
அவன்தான்
l-ḥakīmu
ٱلْحَكِيمُ
ஞானவான்
l-khabīru
ٱلْخَبِيرُ
ஆழ்ந்தறிபவன்
வானங்களையும், பூமியையும் படைத்தவன் உண்மையாகவே அவன்தான். (அவன் யாதொன்றை படைக்கக் கருதும்போது) "ஆகுக!" என அவன் கூறுவதுதான் (தாமதம்.) உடனே (அது) ஆகிவிடும். அவனுடைய சொல்தான் உண்மை. சூர் (எக்காளம்) ஊதப்படும் நாளில், அதிகாரம் அவன் ஒருவனுடையதாகவே இருக்கும். மறைவானவற்றையும், வெளிப்படையானவற்றையும் அவன் நன்கறிவான். அவன் ஞானமுடையவனாகவும், (அனைத்தையும்) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௭௩)
Tafseer
௭௪

۞ وَاِذْ قَالَ اِبْرٰهِيْمُ لِاَبِيْهِ اٰزَرَ اَتَتَّخِذُ اَصْنَامًا اٰلِهَةً ۚاِنِّيْٓ اَرٰىكَ وَقَوْمَكَ فِيْ ضَلٰلٍ مُّبِيْنٍ ٧٤

wa-idh qāla
وَإِذْ قَالَ
கூறிய சமயத்தை
ib'rāhīmu
إِبْرَٰهِيمُ
இப்றாஹீம்
li-abīhi
لِأَبِيهِ
தன் தந்தைக்கு
āzara
ءَازَرَ
ஆஸர்
atattakhidhu
أَتَتَّخِذُ
எடுத்துக்கொள்கிறீரா?
aṣnāman
أَصْنَامًا
சிலைகளை
ālihatan
ءَالِهَةًۖ
வணங்கப்படும் தெய்வங்களாக
innī
إِنِّىٓ
நிச்சயமாக நான்
arāka
أَرَىٰكَ
காண்கிறேன்/உம்மை
waqawmaka
وَقَوْمَكَ
இன்னும் உம் சமுதாயம்
fī ḍalālin
فِى ضَلَٰلٍ
வழிகேட்டில்
mubīnin
مُّبِينٍ
தெளிவானது
இப்ராஹீம் தன் தந்தையாகிய ஆஜரை நோக்கி "நீங்கள் சிலைகளைத் தெய்வங்களாக எடுத்துக் கொண்டீர்களா?" என்று கேட்டு "நிச்சயமாக நீங்களும் உங்களுடைய மக்களும் பகிரங்கமான வழிகேட்டில் இருப்பதை நான் காண்கிறேன்" என்று கூறினார். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௭௪)
Tafseer
௭௫

وَكَذٰلِكَ نُرِيْٓ اِبْرٰهِيْمَ مَلَكُوْتَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَلِيَكُوْنَ مِنَ الْمُوْقِنِيْنَ ٧٥

wakadhālika
وَكَذَٰلِكَ
இவ்வாறுதான்
nurī
نُرِىٓ
காண்பித்தோம்
ib'rāhīma
إِبْرَٰهِيمَ
இப்றாஹீமுக்கு
malakūta
مَلَكُوتَ
பேராட்சியை
l-samāwāti wal-arḍi
ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ
வானங்கள்/இன்னும் பூமியின்
waliyakūna
وَلِيَكُونَ
இன்னும் அவர்ஆவதற்காக
mina l-mūqinīna
مِنَ ٱلْمُوقِنِينَ
உறுதியான நம்பிக்கை உடையவர்களில்
இப்ராஹீம் உறுதியான நம்பிக்கையுடையவர்களில் ஆவதற்காக வானங்களிலும், பூமியிலுமுள்ள (நம்முடைய) ஆட்சிகளை நாம் அவருக்கு இவ்வாறு காண்பித்து வந்தோம். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௭௫)
Tafseer
௭௬

فَلَمَّا جَنَّ عَلَيْهِ الَّيْلُ رَاٰ كَوْكَبًا ۗقَالَ هٰذَا رَبِّيْۚ فَلَمَّآ اَفَلَ قَالَ لَآ اُحِبُّ الْاٰفِلِيْنَ ٧٦

falammā
فَلَمَّا
போது
janna
جَنَّ
சூழ்ந்தது
ʿalayhi
عَلَيْهِ
அவர் மீது
al-laylu
ٱلَّيْلُ
இரவு
raā
رَءَا
கண்டார்
kawkaban
كَوْكَبًاۖ
ஒரு நட்சத்திரத்தை
qāla
قَالَ
கூறினார்
hādhā
هَٰذَا
இது
rabbī
رَبِّىۖ
என் இறைவன்
falammā
فَلَمَّآ
போது
afala
أَفَلَ
மறைந்தது
qāla
قَالَ
கூறினார்
lā uḥibbu
لَآ أُحِبُّ
விரும்ப மாட்டேன்
l-āfilīna
ٱلْءَافِلِينَ
மறையக் கூடியவற்றை
(ஒரு நாள்) இருள் சூழ்ந்த இரவில் அவர் (மின்னிக் கொண்டிருந்த) ஒரு நட்சத்திரத்தைக் கண்டு "இது என்னுடைய இறைவன் (ஆகுமா?)" என (தம் மக்களைக்) கேட்டு அது மறையவே, "மறையக்கூடியவற்றை (இறைவனாக எடுத்துக்கொள்ள) நான் விரும்பமாட்டேன்" எனக் கூறிவிட்டார். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௭௬)
Tafseer
௭௭

فَلَمَّا رَاَ الْقَمَرَ بَازِغًا قَالَ هٰذَا رَبِّيْ ۚفَلَمَّآ اَفَلَ قَالَ لَىِٕنْ لَّمْ يَهْدِنِيْ رَبِّيْ لَاَكُوْنَنَّ مِنَ الْقَوْمِ الضَّاۤلِّيْنَ ٧٧

falammā
فَلَمَّا
போது
raā
رَءَا
கண்டார்
l-qamara
ٱلْقَمَرَ
சந்திரனை
bāzighan
بَازِغًا
உதயமாகிய
qāla
قَالَ
கூறினார்
hādhā
هَٰذَا
இது
rabbī
رَبِّىۖ
என் இறைவன்
falammā
فَلَمَّآ
போது
afala
أَفَلَ
மறைந்தது
qāla
قَالَ
கூறினார்
la-in lam yahdinī
لَئِن لَّمْ يَهْدِنِى
நேர் வழிபடுத்தாவிட்டால்/என்னை
rabbī
رَبِّى
என் இறைவன்
la-akūnanna
لَأَكُونَنَّ
நிச்சயமாக ஆகிவிடுவேன்
mina l-qawmi
مِنَ ٱلْقَوْمِ
சமுதாயத்தில்
l-ḍālīna
ٱلضَّآلِّينَ
வழிகெட்டவர்கள்
பின்னர் உதயமான சந்திரனைக் காணவே "இது என்னுடைய இறைவன் (ஆகுமா?)" எனக் கேட்டு, அதுவும் அஸ்தமித்து மறையவே (அதனையும் நிராகரித்துவிட்டு) "எனது இறைவன் எனக்கு நேரான வழியை அறிவிக்காவிட்டால் வழி தவறிய மக்களில் நிச்சயமாக நானும் ஒருவனாகிவிடுவேன்" என்று கூறினார். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௭௭)
Tafseer
௭௮

فَلَمَّا رَاَ الشَّمْسَ بَازِغَةً قَالَ هٰذَا رَبِّيْ هٰذَآ اَكْبَرُۚ فَلَمَّآ اَفَلَتْ قَالَ يٰقَوْمِ اِنِّيْ بَرِيْۤءٌ مِّمَّا تُشْرِكُوْنَ ٧٨

falammā
فَلَمَّا
போது
raā
رَءَا
கண்டார்
l-shamsa
ٱلشَّمْسَ
சூரியனை
bāzighatan
بَازِغَةً
உதயமாகிய
qāla
قَالَ
கூறினார்
hādhā rabbī
هَٰذَا رَبِّى
இது/என் இறைவன்
hādhā
هَٰذَآ
இது
akbaru
أَكْبَرُۖ
மிகப் பெரியது
falammā
فَلَمَّآ
போது
afalat
أَفَلَتْ
மறைந்தது
qāla
قَالَ
கூறினார்
yāqawmi
يَٰقَوْمِ
என் சமுதாயமே
innī
إِنِّى
நிச்சயமாக நான்
barīon
بَرِىٓءٌ
விலகியவன்
mimmā tush'rikūna
مِّمَّا تُشْرِكُونَ
எவற்றிலிருந்து/இணைவைக்கிறீர்கள்
பின்னர் உதயமான (பளிச்சென்று நன்கு ஒளிரும்) சூரியனைக் கண்டபொழுது "இது மிகப்பெரியதாயிருக்கிறது. இது என்னுடைய இறைவன் (ஆகுமா?)" எனக் கேட்டு, அதுவும் அஸ்தமித்து மறையவே அவர் (தம் மக்களை நோக்கி) "என் மக்களே! நீங்கள் (இறைவனுக்கு) இணையாக்கும் (இவை) ஒவ்வொன்றிலிருந்தும் நிச்சயமாக நான் விலகிக்கொண்டேன்" என்று கூறிவிட்டு, ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௭௮)
Tafseer
௭௯

اِنِّيْ وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِيْ فَطَرَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ حَنِيْفًا وَّمَآ اَنَا۠ مِنَ الْمُشْرِكِيْنَۚ ٧٩

innī
إِنِّى
நிச்சயமாக நான்
wajjahtu
وَجَّهْتُ
முன்னோக்க வைத்தேன்
wajhiya
وَجْهِىَ
என் முகத்தை
lilladhī
لِلَّذِى
எவன் பக்கம்
faṭara
فَطَرَ
படைத்தான்
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களை
wal-arḍa
وَٱلْأَرْضَ
இன்னும் பூமியை
ḥanīfan
حَنِيفًاۖ
உறுதியுடையவனாக
wamā
وَمَآ
இல்லை
anā
أَنَا۠
நான்
mina l-mush'rikīna
مِنَ ٱلْمُشْرِكِينَ
இணைவைப்பவர்களில்
"வானங்களையும் பூமியையும் எவன் படைத்தானோ அ(ந்த ஒரு)வனின் பக்கமே நிச்சயமாக நான் முற்றிலும் நோக்குகிறேன். நான் (அவனுக்கு எதனையும்) இணை வைப்பவன் அல்ல" (என்று கூறினார்.) ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௭௯)
Tafseer
௮௦

وَحَاۤجَّهٗ قَوْمُهٗ ۗقَالَ اَتُحَاۤجُّوْۤنِّيْ فِى اللّٰهِ وَقَدْ هَدٰىنِۗ وَلَآ اَخَافُ مَا تُشْرِكُوْنَ بِهٖٓ اِلَّآ اَنْ يَّشَاۤءَ رَبِّيْ شَيْـًٔا ۗوَسِعَ رَبِّيْ كُلَّ شَيْءٍ عِلْمًا ۗ اَفَلَا تَتَذَكَّرُوْنَ ٨٠

waḥājjahu
وَحَآجَّهُۥ
தர்க்கித்தனர்/அவருடன்
qawmuhu
قَوْمُهُۥۚ
சமுதாயத்தினர்/அவருடைய
qāla
قَالَ
கூறினார்
atuḥājjūnnī
أَتُحَٰٓجُّوٓنِّى
தர்க்கிக்கிறீர்கள்/என்னுடன்
fī l-lahi
فِى ٱللَّهِ
அல்லாஹ்வை பற்றி
waqad hadāni
وَقَدْ هَدَىٰنِۚ
நேர்வழி காட்டிவிட்டான்/எனக்கு
walā akhāfu
وَلَآ أَخَافُ
இன்னும் பயப்பட மாட்டேன்
مَا
எதை
tush'rikūna
تُشْرِكُونَ
இணைவைக்கிறீர்கள்
bihi
بِهِۦٓ
அவனுக்கு
illā an yashāa
إِلَّآ أَن يَشَآءَ
தவிர/நாடினால்
rabbī
رَبِّى
என் இறைவன்
shayan
شَيْـًٔاۗ
எதையும்
wasiʿa
وَسِعَ
விசாலமானது
rabbī
رَبِّى
என் இறைவ(னி)ன்
kulla shayin
كُلَّ شَىْءٍ
எல்லாவற்றையும்
ʿil'man
عِلْمًاۗ
அறிவு
afalā tatadhakkarūna
أَفَلَا تَتَذَكَّرُونَ
நீங்கள் நல்லுபதேசம் பெறவேண்டாமா?
(இதைப் பற்றி) அவருடன் அவருடைய மக்கள் தர்க்கித்தார்கள். அதற்கு அவர் (அவர்களை நோக்கிக்) கூறினார்: "நீங்கள் (படைப்பவனாகிய) அல்லாஹ்வைப் பற்றியா என்னுடன் தர்க்கிக்கின்றீர்கள்? நிச்சயமாக அவன் எனக்கு நேரான வழியை அறிவித்து விட்டான். என் இறைவன் யாதொன்றை விரும்பினாலன்றி நீங்கள் இணைவைத்து வணங்குபவை(கள் எனக்கு யாதொரு தீங்கும் செய்துவிட முடியாது. ஆகவே அவை)களுக்கு நான் பயப்பட மாட்டேன். என் இறைவன் அனைவரையும் விட கல்வியில் மிக்க விசாலமானவன். (இவ்வளவுகூட) நீங்கள் சிந்திக்க வேண்டாமா? ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௮௦)
Tafseer