Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௭௧

Qur'an Surah Al-An'am Verse 71

ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௭௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قُلْ اَنَدْعُوْا مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا يَنْفَعُنَا وَلَا يَضُرُّنَا وَنُرَدُّ عَلٰٓى اَعْقَابِنَا بَعْدَ اِذْ هَدٰىنَا اللّٰهُ كَالَّذِى اسْتَهْوَتْهُ الشَّيٰطِيْنُ فِى الْاَرْضِ حَيْرَانَ لَهٗٓ اَصْحٰبٌ يَّدْعُوْنَهٗٓ اِلَى الْهُدَى ائْتِنَا ۗ قُلْ اِنَّ هُدَى اللّٰهِ هُوَ الْهُدٰىۗ وَاُمِرْنَا لِنُسْلِمَ لِرَبِّ الْعٰلَمِيْنَۙ (الأنعام : ٦)

qul
قُلْ
Say
கூறுவீராக
anadʿū
أَنَدْعُوا۟
"Shall we call
அழைப்போமா?
min dūni l-lahi
مِن دُونِ ٱللَّهِ
from besides Allah
அல்லாஹ்வைத் தவிர
مَا
what
எவற்றை
lā yanfaʿunā
لَا يَنفَعُنَا
not benefits us
பலனளிக்காது/நமக்கு
walā yaḍurrunā
وَلَا يَضُرُّنَا
and not harms us
இன்னும் தீங்கிழைக்காது/நமக்கு
wanuraddu
وَنُرَدُّ
and we turn back
இன்னும் திருப்பப்படுவோம்
ʿalā
عَلَىٰٓ
on
மேல்
aʿqābinā
أَعْقَابِنَا
our heels
எங்கள் குதிங்கால்கள்
baʿda idh hadānā
بَعْدَ إِذْ هَدَىٰنَا
after [when] (has) guided us?
பின்னர்/நேர்வழிப்படுத்தினான்/எங்களை
l-lahu
ٱللَّهُ
Allah?
அல்லாஹ்
ka-alladhī
كَٱلَّذِى
Like the one
ஒருவனைப்போன்று
is'tahwathu
ٱسْتَهْوَتْهُ
whom (has been) enticed
வழிதவறச் செய்தன/ அவனை
l-shayāṭīnu
ٱلشَّيَٰطِينُ
(by) the Shaitaan
ஷைத்தான்கள்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
in the earth
பூமியில்
ḥayrāna
حَيْرَانَ
confused
திகைத்தவனாக
lahu
لَهُۥٓ
he has
அவனுக்கு
aṣḥābun
أَصْحَٰبٌ
companions
நண்பர்கள்
yadʿūnahu
يَدْعُونَهُۥٓ
who call him
அழைக்கிறார்கள்/அவனை
ilā l-hudā
إِلَى ٱلْهُدَى
towards the guidance
பக்கம்/நேர்வழி
i'tinā
ٱئْتِنَاۗ
Come to us
எங்களிடம் வா
qul
قُلْ
Say
கூறுவீராக
inna
إِنَّ
"Indeed
நிச்சயமாக
hudā
هُدَى
(the) Guidance
நேர்வழி
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வின்
huwa
هُوَ
it
அதுதான்
l-hudā
ٱلْهُدَىٰۖ
(is) the Guidance
நேர்வழி
wa-umir'nā
وَأُمِرْنَا
and we have been commanded
கட்டளையிடப்பட்டோம்
linus'lima
لِنُسْلِمَ
that we submit
நாங்கள் பணிந்துவிட
lirabbi
لِرَبِّ
to (the) Lord
இறைவனுக்கே
l-ʿālamīna
ٱلْعَٰلَمِينَ
(of) the worlds
அகிலத்தார்களின்

Transliteration:

Qul anad'oo min doonil laahi maa laa yanfa'unaa wa laa yadurrunaa wa nuraddu 'alaaa a'qaabina ba'da iz hadaanal laahu kallazis tahwat hush Shayaateenu fil ardi hairaana lahooo ashaabuny yad'oo nahooo ilal huda' tinaa; qul inna hudal laahi huwal hudaa wa umirnaa linuslima li Rabbil 'aalameen (QS. al-ʾAnʿām:71)

English Sahih International:

Say, "Shall we invoke instead of Allah that which neither benefits us nor harms us and be turned back on our heels after Allah has guided us? [We would then be] like one whom the devils enticed [to wander] upon the earth confused, [while] he has companions inviting him to guidance, [calling], 'Come to us.'" Say, "Indeed, the guidance of Allah is the [only] guidance; and we have been commanded to submit to the Lord of the worlds. (QS. Al-An'am, Ayah ௭௧)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நீங்கள் கேளுங்கள்: "அல்லாஹ்வை விட்டுவிட்டு நமக்கு யாதொரு நன்மையும், தீமையும் செய்ய சக்தி அற்றவைகளையா நாம் அழைப்போம்? அல்லாஹ் நம்மை நேரான வழியில் செலுத்திய பின்னரும் (நாம்) நம் பின்புறமே திரும்பி விடுவோமா? (அவ்வாறாயின்) ஒருவனுக்கு நேரான வழியில் அழைக்கக்கூடிய நண்பர்கள் இருந்து அவனை அவர்கள் "தம்மிடம் வா" என அழைத்துக் கொண்டிருக்க, அவன் (அவ்வழியில் செல்லாது) ஷைத்தானுடைய ஏமாற்றத்தில் சிக்கி, பூமியில் தட்டழிந்து திரிபவனாக ஆகிவிட்டானோ அவனுக்கு ஒப்பானவர்களாகி விடுவோம்." (மேலும்) நீங்கள் கூறுங்கள்: "நிச்சயமாக அல்லாஹ்வின் வழிதான் நேரான வழி. உலகத்தார் அனைவரின் இறைவனாகிய அவனுக்கே முற்றிலும் தலைசாய்க்க வேண்டும் என நாங்கள் கட்டளையிடப்பட்டுள்ளோம்." (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௭௧)

Jan Trust Foundation

(நபியே!) நீர் கூறும்| “நமக்கு யாதொரு நன்மையும், தீமையும் செய்ய இயலாத அல்லாஹ் அல்லாதவற்றையா நாம் அழைப்போம்? அல்லாஹ் நமக்கு நேர் வழி காட்டிய பின்னரும் (நாம் வழிதவறி) நம் பின்புறமே திருப்பப்பட்டுவிடுவோமா? அவ்வாறாயின் ஒருவனுக்கு நண்பர்கள் இருந்து அவனை, அவர்கள் “எங்கள் இடம் வந்து விடு” என நேர்வழி காட்டி அழைத்துக் கொண்டிருக்கும் போது ஷைத்தான் அவனை வழிதவறச் செய்தால் பூமியிலே தட்டழிந்து திரிகிறானே அவனைப் போன்று ஆகிவிடுவோம்.” இன்னும் கூறும்| “நிச்சயமாக அல்லாஹ் காட்டும் நேர்வழியே நேர் வழியாகும்; அகிலங்களின் இறைவனுக்கே வழிபடுமாறு நாங்கள் ஏவப்பட்டுள்ளோம்.”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) கூறுவீராக: "அல்லாஹ்வைத் தவிர நமக்கு பலனளிக்காதவற்றையும் தீங்கிழைக்காதவற்றையும் அழைப்போமா? நேர்வழி பக்கம் அவனை அழைக்கின்ற நண்பர்கள் அவனுக்கு இருக்க ஷைத்தான்கள் அவனை வழிதவறச் செய்து திகைத்தவனாக பூமியில் இருப்பவனைப் போல், அல்லாஹ் எங்களை நேர்வழிப்படுத்திய பின்னர் எங்கள் குதிங்கால்கள் மேல் (வழிகேட்டின் பக்கம்) திருப்பப்படுவோமா?" கூறுவீராக: "நிச்சயமாக அல்லாஹ்வின் நேர்வழி அதுதான் நேர்வழியாகும். அகிலத்தார்களின் இறைவனுக்கே நாங்கள் (முற்றிலும்) பணிந்துவிட கட்டளையிடப்பட்டோம்."