குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாயிதா வசனம் ௫௪
Qur'an Surah Al-Ma'idah Verse 54
ஸூரத்துல் மாயிதா [௫]: ௫௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا مَنْ يَّرْتَدَّ مِنْكُمْ عَنْ دِيْنِهٖ فَسَوْفَ يَأْتِى اللّٰهُ بِقَوْمٍ يُّحِبُّهُمْ وَيُحِبُّوْنَهٗٓ ۙاَذِلَّةٍ عَلَى الْمُؤْمِنِيْنَ اَعِزَّةٍ عَلَى الْكٰفِرِيْنَۖ يُجَاهِدُوْنَ فِيْ سَبِيْلِ اللّٰهِ وَلَا يَخَافُوْنَ لَوْمَةَ لَاۤىِٕمٍ ۗذٰلِكَ فَضْلُ اللّٰهِ يُؤْتِيْهِ مَنْ يَّشَاۤءُۗ وَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌ (المائدة : ٥)
- yāayyuhā alladhīna āmanū
- يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
- O you who believe!
- நம்பிக்கையாளர்களே
- man
- مَن
- Whoever
- எவரும்
- yartadda
- يَرْتَدَّ
- turns back
- மாறுவார்
- minkum
- مِنكُمْ
- among you
- உங்களிலிருந்து
- ʿan dīnihi
- عَن دِينِهِۦ
- from his religion
- விட்டு/தன்மார்க்கம்
- fasawfa yatī
- فَسَوْفَ يَأْتِى
- then soon (will be) brought
- கொண்டு வருவான்
- l-lahu
- ٱللَّهُ
- (by) Allah
- அல்லாஹ்
- biqawmin
- بِقَوْمٍ
- a people
- ஒரு சமுதாயத்தை
- yuḥibbuhum
- يُحِبُّهُمْ
- whom He loves
- நேசிப்பான்/அவர்களை
- wayuḥibbūnahu
- وَيُحِبُّونَهُۥٓ
- and they love Him
- இன்னும் நேசிப்பார்கள்/அவனை
- adhillatin
- أَذِلَّةٍ
- humble
- பணிவானவர்கள்
- ʿalā
- عَلَى
- towards
- இடம்
- l-mu'minīna
- ٱلْمُؤْمِنِينَ
- the believers
- நம்பிக்கையாளர்கள்
- aʿizzatin
- أَعِزَّةٍ
- (and) stern
- கண்டிப்பானவர்கள்
- ʿalā l-kāfirīna
- عَلَى ٱلْكَٰفِرِينَ
- towards the disbelievers
- நிராகரிப்பாளர்களிடம்
- yujāhidūna
- يُجَٰهِدُونَ
- striving
- போரிடுவார்கள்
- fī sabīli
- فِى سَبِيلِ
- in (the) way
- பாதையில்
- l-lahi
- ٱللَّهِ
- (of) Allah
- அல்லாஹ்வின்
- walā yakhāfūna
- وَلَا يَخَافُونَ
- and not fearing
- பயப்பட மாட்டார்கள்
- lawmata
- لَوْمَةَ
- the blame
- பழிப்பை
- lāimin
- لَآئِمٍۚ
- (of) a critic
- பழிப்பவனின்
- dhālika
- ذَٰلِكَ
- That
- இது
- faḍlu
- فَضْلُ
- (is the) Grace
- அருள்
- l-lahi
- ٱللَّهِ
- (of) Allah
- அல்லாஹ்வின்
- yu'tīhi
- يُؤْتِيهِ
- He grants
- அதை கொடுக்கின்றான்
- man yashāu
- مَن يَشَآءُۚ
- whom He wills
- எவருக்கு/நாடுகிறான்
- wal-lahu
- وَٱللَّهُ
- And Allah
- அல்லாஹ்
- wāsiʿun
- وَٰسِعٌ
- (is) All-Encompassing
- விசாலமானவன்
- ʿalīmun
- عَلِيمٌ
- All-Knowing
- நன்கறிந்தவன்
Transliteration:
Yaa aiyuhal lazeena aamanoo mai yartadda minkum 'an deenihee fasawfa yaatil laahu biqawminy yuhibbuhum wa yuhibboonahoo azillatin 'alal mu'mineena a'izzatin 'alal kaafireena yujaahidoona fee sabeelil laahi wa laa yakhaafoona lawmata laaa'im; zaalika fadlul laahi yu'teehi mai yashaaa'; wallaahu Waasi'un 'Aleem(QS. al-Māʾidah:54)
English Sahih International:
O you who have believed, whoever of you should revert from his religion – Allah will bring forth [in place of them] a people He will love and who will love Him [who are] humble toward the believers, strong against the disbelievers; they strive in the cause of Allah and do not fear the blame of a critic. That is the favor of Allah; He bestows it upon whom He wills. And Allah is all-Encompassing and Knowing. (QS. Al-Ma'idah, Ayah ௫௪)
Abdul Hameed Baqavi:
நம்பிக்கையாளர்களே! உங்களில் எவரேனும் தங்கள் மார்க்கத்தில் இருந்து மாறிவிட்டால் (அதனால் அல்லாஹ்வுக்கு நஷ்டமொன்றுமில்லை. உங்களைப்போக்கி) வேறு மக்களை அல்லாஹ் கொண்டு வருவான். அவன் அவர்களை நேசிப்பான்; அவர்களும் அவனை நேசிப்பார்கள். அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களிடம் பணிவாக நடந்து கொள்வார்கள்; நிராகரிப்பவர்களிடம் கண்டிப்புடையவர்களாக இருப்பார்கள்; அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவார்கள். பழிப்பவனின் பழிப்பை அவர்கள் அஞ்ச மாட்டார்கள். இது அல்லாஹ்வின் அருளாகும். அவன் விரும்பியவர்களுக்குத்தான் இதனை அளிக்கின்றான். அல்லாஹ் மிக விசாலமானவனும், (அனைத்தையும்) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துல் மாயிதா, வசனம் ௫௪)
Jan Trust Foundation
முஃமின்களே! உங்களில் எவரேனும் தன் மார்க்கத்தைவிட்டு மாறிவிட்டால் (அல்லாஹ்வுக்கு அதனால் நஷ்டமில்லை); அப்பொழுது அல்லாஹ் வேறு ஒரு கூட்டத்தாரைக் கொண்டு வருவான்; அவன் அவர்களை நேசிப்பான்; அவனை அவர்களும் நேசிப்பார்கள்; அவர்கள் முஃமின்களிடம் பணிவாக நடந்து கொள்வார்கள்; காஃபிர்களிடம் கடுமையாக இருப்பார்கள்; அல்லாஹ்வின் பாதையில் போர் செய்வார்கள்; நிந்தனை செய்வோரின் நிந்தனைக்கு அஞ்சமாட்டார்கள்; இது அல்லாஹ்வின் அருட்கொடையாகும்; இதை அவன் நாடியவருக்குக் கொடுக்கின்றான்; அல்லாஹ் மிகவும் விசாலமானவனும் (எல்லாம்) நன்கறிந்தவனுமாக இருக்கின்றான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நம்பிக்கையாளர்களே! உங்களில் எவரும் தன் மார்க்கத்தை விட்டும் மாறினால் அல்லாஹ் ஒரு சமுதாயத்தைக் கொண்டு வருவான். அவன் அவர்களை நேசிப்பான்; அவர்களும் அவனை நேசிப்பார்கள். (அவர்கள்) நம்பிக்கையாளர்களிடம் பணிவானவர்கள்; நிராகரிப்பாளர்களிடம் கண்டிப்பானவர்கள்; அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள். பழிப்பவனின் பழிப்பை பயப்படமாட்டார்கள். இது அல்லாஹ்வின் அருள். தான் நாடியவர்களுக்கு அதைத் தருகிறான். அல்லாஹ் விசாலமானவன், நன்கறிந்தவன்.