Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாயிதா வசனம் ௫

Qur'an Surah Al-Ma'idah Verse 5

ஸூரத்துல் மாயிதா [௫]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَلْيَوْمَ اُحِلَّ لَكُمُ الطَّيِّبٰتُۗ وَطَعَامُ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ حِلٌّ لَّكُمْ ۖوَطَعَامُكُمْ حِلٌّ لَّهُمْ ۖوَالْمُحْصَنٰتُ مِنَ الْمُؤْمِنٰتِ وَالْمُحْصَنٰتُ مِنَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ مِنْ قَبْلِكُمْ اِذَآ اٰتَيْتُمُوْهُنَّ اُجُوْرَهُنَّ مُحْصِنِيْنَ غَيْرَ مُسَافِحِيْنَ وَلَا مُتَّخِذِيْٓ اَخْدَانٍۗ وَمَنْ يَّكْفُرْ بِالْاِيْمَانِ فَقَدْ حَبِطَ عَمَلُهٗ ۖوَهُوَ فِى الْاٰخِرَةِ مِنَ الْخٰسِرِيْنَ ࣖ (المائدة : ٥)

al-yawma
ٱلْيَوْمَ
This day
இன்று
uḥilla
أُحِلَّ
are made lawful
ஆகுமாக்கப்பட்டன
lakumu
لَكُمُ
for you
உங்களுக்கு
l-ṭayibātu
ٱلطَّيِّبَٰتُۖ
the good things
நல்லவை
waṭaʿāmu
وَطَعَامُ
and (the) food
இன்னும் உணவும்
alladhīna
ٱلَّذِينَ
(of) those who
எவர்களின்
ūtū
أُوتُوا۟
were given
கொடுக்கப்பட்டார்கள்
l-kitāba
ٱلْكِتَٰبَ
the Book
வேதம்
ḥillun
حِلٌّ
(is) lawful
ஆகுமானது
lakum
لَّكُمْ
for you
உங்களுக்கு
waṭaʿāmukum
وَطَعَامُكُمْ
and your food
இன்னும் உங்கள் உணவு
ḥillun
حِلٌّ
(is) lawful
ஆகுமானது
lahum
لَّهُمْۖ
for them
அவர்களுக்கு
wal-muḥ'ṣanātu
وَٱلْمُحْصَنَٰتُ
And the chaste women
கற்புள்ள பெண்கள்
mina
مِنَ
from
இருந்து
l-mu'mināti
ٱلْمُؤْمِنَٰتِ
the believers
ஈமான் கொண்ட பெண்கள்
wal-muḥ'ṣanātu
وَٱلْمُحْصَنَٰتُ
and the chaste women
இன்னும் கற்புள்ள பெண்கள்
mina alladhīna
مِنَ ٱلَّذِينَ
from those who
எவர்களில்
ūtū
أُوتُوا۟
were given
கொடுக்கப்பட்டவர்கள்
l-kitāba
ٱلْكِتَٰبَ
the Book
வேதம்
min qablikum
مِن قَبْلِكُمْ
from before you
உங்களுக்குமுன்னர்
idhā
إِذَآ
when
நீங்கள்கொடுத்தால்
ātaytumūhunna
ءَاتَيْتُمُوهُنَّ
you have given them
நீங்கள்கொடுத்தால் அவர்களுக்கு
ujūrahunna
أُجُورَهُنَّ
their bridal due
மணக்கொடைகளை அவர்களுடைய
muḥ'ṣinīna
مُحْصِنِينَ
being chaste
கற்புள்ளவர்களாக
ghayra
غَيْرَ
not
அன்றி
musāfiḥīna
مُسَٰفِحِينَ
being lewd
விபச்சாரர்களாக
walā muttakhidhī
وَلَا مُتَّخِذِىٓ
and not ones (who are) taking
இன்னும் ஆக்காதவர்களாக
akhdānin
أَخْدَانٍۗ
secret lovers
இரகசிய தோழிகளை
waman
وَمَن
And whoever
எவர்
yakfur
يَكْفُرْ
denies
மறுக்கிறார்
bil-īmāni
بِٱلْإِيمَٰنِ
the faith
நம்பிக்கை கொள்ள
faqad
فَقَدْ
then surely
திட்டமாக
ḥabiṭa
حَبِطَ
(are) wasted
அழிந்து விடும்
ʿamaluhu
عَمَلُهُۥ
his deeds
அவருடைய செயல்
wahuwa
وَهُوَ
and he
அவர்
fī l-ākhirati
فِى ٱلْءَاخِرَةِ
in the Hereafter
மறுமையில்
mina l-khāsirīna
مِنَ ٱلْخَٰسِرِينَ
(will be) among the losers
நஷ்டவாளிகளில்

Transliteration:

Alyawma uhilla lakumut taiyibaatu wa ta'aamul lazeena ootul Kitaaba hillul lakum wa ta'aamukum hillul lahum wal muhsanaatu minal mu'minaati walmuhsanaatu minal lazeena ootul Kitaaba min qablikum izaaa aataitumoohunna ujoorahunna muhsineena ghaira musaafiheena wa laa muttakhizeee akhdaan; wa mai yakfur bil eemaani faqad habita 'amaluhoo wa huwa fil Aaakhirati minal khaasireen (QS. al-Māʾidah:5)

English Sahih International:

This day [all] good foods have been made lawful, and the food of those who were given the Scripture is lawful for you and your food is lawful for them. And [lawful in marriage are] chaste women from among the believers and chaste women from among those who were given the Scripture before you, when you have given them their due compensation, desiring chastity, not unlawful sexual intercourse or taking [secret] lovers. And whoever denies the faith – his work has become worthless, and he, in the Hereafter, will be among the losers. (QS. Al-Ma'idah, Ayah ௫)

Abdul Hameed Baqavi:

(நம்பிக்கையாளர்களே!) இன்றுமுதல் நல்லவைகள் அனைத்தும் உங்களுக்கு (உண்பதற்கு) ஆகுமாக்கப்பட்டுவிட்டன. வேதத்தையுடையவர்களின் உணவும் உங்களுக்கு ஆகுமானதே! உங்களுடைய உணவும் அவர்களுக்கு ஆகுமானதே! நம்பிக்கை கொண்ட கற்புடைய பெண்களையும், உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்ட கற்புடைய பெண்களையும், விபச்சாரிகளாகவோ வைப்பாட்டிகளாகவோ கொள்ளாமல், அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய மஹர்களையும் கொடுத்து (திருமணம் செய்து) கொள்வது (உங்களுக்கு ஆகும்.) அன்றி, எவன் நம்பிக்கை கொண்டதன் பின்னர் (இவற்றை) நிராகரிக்கின்றானோ அவனுடைய நற்செயல்கள் நிச்சயமாக அழிந்துவிடும். மறுமையிலோ அவன் (முற்றிலும்) நஷ்டமடைந்தவனாகவே இருப்பான். (ஸூரத்துல் மாயிதா, வசனம் ௫)

Jan Trust Foundation

இன்றைய தினம் உங்களுக்கு (உண்ண) எல்லா நல்ல தூய பொருட்களும் ஹலாலாக்கப் பட்டுள்ளன; வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவும் உங்களுக்கு ஹலாலானதே; உங்களுடைய உணவும் அவர்களுக்கு (சாப்பிட) ஆகுமானதே, முஃமின்களான கற்புடைய பெண்களும், உங்களுக்கு முன்னர் வேதம் அளிக்கப்ட்டவர்களிலுள்ள கற்புடைய பெண்களும் விலைப் பெண்டிராகவோ, ஆசை நாயகிகளாகவோ வைத்துக் கொள்ளாது, அவர்களுக்குரிய மஹரை அவர்களுக்கு அளித்து, மண முடித்துக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது; மேலும் எவர் ஈமானை நிராகரிக்கிறாரோ, அவருடைய அமல் (செயல்) அழிந்து போகும் - மேலும் அவர் மறுமையில் நஷ்டமடைந்தோரில் ஒருவராகவே இருப்பார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்று, நல்லவை உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டன. வேதம் கொடுக்கப்பட்டவர்களின் உணவும் உங்களுக்கு ஆகுமானதாகும்! உங்கள் உணவும் அவர்களுக்கு ஆகுமானதாகும்! ஈமான் கொண்ட பெண்களில் கற்புள்ள பெண்களும், உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களில் கற்புள்ள பெண்களும் ஆகுமானவர்களாகும் அவர்களுடைய மணக்கொடைகளை நீங்கள் அவர்களுக்கு கொடுத்தால். (நீங்களும்) கற்புள்ளவர்களாக இருக்கவேண்டும், விபசாரர்களாக, இரகசிய தோழிகளை ஆக்காதவர்களாக இருக்கவேண்டும். எவர் (இந்த சட்டங்களை) நம்பிக்கைகொள்ள மறுக்கிறாரோ அவருடைய (நற்)செயல் திட்டமாக அழிந்துவிடும். அவர் மறுமையில் நஷ்டவாளிகளில் இருப்பார்.