குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாயிதா வசனம் ௨
Qur'an Surah Al-Ma'idah Verse 2
ஸூரத்துல் மாயிதா [௫]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تُحِلُّوْا شَعَاۤىِٕرَ اللّٰهِ وَلَا الشَّهْرَ الْحَرَامَ وَلَا الْهَدْيَ وَلَا الْقَلَاۤىِٕدَ وَلَآ اٰۤمِّيْنَ الْبَيْتَ الْحَرَامَ يَبْتَغُوْنَ فَضْلًا مِّنْ رَّبِّهِمْ وَرِضْوَانًا ۗوَاِذَا حَلَلْتُمْ فَاصْطَادُوْا ۗوَلَا يَجْرِمَنَّكُمْ شَنَاٰنُ قَوْمٍ اَنْ صَدُّوْكُمْ عَنِ الْمَسْجِدِ الْحَرَامِ اَنْ تَعْتَدُوْۘا وَتَعَاوَنُوْا عَلَى الْبِرِّ وَالتَّقْوٰىۖ وَلَا تَعَاوَنُوْا عَلَى الْاِثْمِ وَالْعُدْوَانِ ۖوَاتَّقُوا اللّٰهَ ۗاِنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَابِ (المائدة : ٥)
- yāayyuhā alladhīna āmanū
- يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
- O you who believe!
- நம்பிக்கையாளர்களே
- lā tuḥillū
- لَا تُحِلُّوا۟
- (Do) not violate
- ஆகுமாக்காதீர்கள்
- shaʿāira
- شَعَٰٓئِرَ
- (the) rites
- அடையாளங்களை
- l-lahi
- ٱللَّهِ
- (of) Allah
- அல்லாஹ்வின்
- walā l-shahra
- وَلَا ٱلشَّهْرَ
- and not the month
- இன்னும் மாதத்தை
- l-ḥarāma
- ٱلْحَرَامَ
- the sacred
- புனிதமானது
- walā l-hadya
- وَلَا ٱلْهَدْىَ
- and not the sacrificial animals
- இன்னும் குர்பானியை
- walā l-qalāida
- وَلَا ٱلْقَلَٰٓئِدَ
- and not the garlanded
- இன்னும் மாலையிடப்பட்ட குர்பானிகளை
- walā āmmīna
- وَلَآ ءَآمِّينَ
- and not (those) coming
- இன்னும் நாடுபவர்களை
- l-bayta
- ٱلْبَيْتَ
- (to) the House
- (கஅபா)ஆலயத்தை
- l-ḥarāma
- ٱلْحَرَامَ
- the Sacred
- புனிதமானது
- yabtaghūna
- يَبْتَغُونَ
- seeking
- தேடியவர்களாக
- faḍlan
- فَضْلًا
- Bounty
- அருளை
- min rabbihim
- مِّن رَّبِّهِمْ
- of their Lord
- தங்கள் இறைவனிடமிருந்து
- wariḍ'wānan
- وَرِضْوَٰنًاۚ
- and good pleasure
- இன்னும் பொருத்தத்தை
- wa-idhā ḥalaltum
- وَإِذَا حَلَلْتُمْ
- And when you come out of Ihram
- நீங்கள் இஹ்ராமிலிருந்து நீங்கினால்
- fa-iṣ'ṭādū
- فَٱصْطَادُوا۟ۚ
- then (you may) hunt
- வேட்டையாடுங்கள்
- walā yajrimannakum
- وَلَا يَجْرِمَنَّكُمْ
- And let not incite you
- உங்களை தூண்ட வேண்டாம்
- shanaānu
- شَنَـَٔانُ
- (the) hatred
- துவேஷம்
- qawmin
- قَوْمٍ
- (for) a people
- சமுதாயத்தின்
- an
- أَن
- as
- அவர்களை தடுத்த காரணத்தால்
- ṣaddūkum
- صَدُّوكُمْ
- they stopped you
- அவர்களை தடுத்த காரணத்தால் உங்களை
- ʿani l-masjidi
- عَنِ ٱلْمَسْجِدِ
- from Al-Masjid
- மஸ்ஜிதை விட்டு
- l-ḥarāmi
- ٱلْحَرَامِ
- Al-Haraam
- புனிதமானது
- an taʿtadū
- أَن تَعْتَدُواۘ
- that you commit transgression
- நீங்கள் வரம்புமீறுவது
- wataʿāwanū
- وَتَعَاوَنُوا۟
- And help one another
- ஒருவருக்கொருவர் உதவுங்கள்
- ʿalā l-biri
- عَلَى ٱلْبِرِّ
- in [the] righteousness
- நன்மைக்கு
- wal-taqwā
- وَٱلتَّقْوَىٰۖ
- and [the] piety
- இன்னும் இறையச்சம்
- walā taʿāwanū
- وَلَا تَعَاوَنُوا۟
- but (do) not help one another
- ஒருவருக்கொருவர் உதவாதீர்கள்
- ʿalā l-ith'mi
- عَلَى ٱلْإِثْمِ
- in [the] sin
- பாவத்திற்கு
- wal-ʿud'wāni
- وَٱلْعُدْوَٰنِۚ
- and [the] transgression
- இன்னும் அநியாயம்
- wa-ittaqū
- وَٱتَّقُوا۟
- And fear
- அஞ்சுங்கள்
- l-laha
- ٱللَّهَۖ
- Allah
- அல்லாஹ்வை
- inna
- إِنَّ
- indeed
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்
- shadīdu
- شَدِيدُ
- (is) severe
- கடுமையானவன்
- l-ʿiqābi
- ٱلْعِقَابِ
- (in) [the] punishment
- தண்டனை
Transliteration:
Yaaa aiyuhal lazeena aamanoo laa tuhilloo sha'aaa 'iral laahi wa lash Shahral Haraama wa lal hadya wa lal qalaaa'ida wa laa aaammeenal Baital Haraama yabtaghoona fadlam mir Rabbihim wa ridwaanaa; wa izaa halaltum fastaadoo; wa laa yajrimannakum shana aanu qawmin an saddookum 'anil Masjidil-Haraami an ta'tadoo; wa ta'aawanoo 'alalbirri wattaqwaa; wa laa ta'aawanoo 'alal ismi wal'udwaan; wattaqul laah; innal laaha shadeedul 'iqaab(QS. al-Māʾidah:2)
English Sahih International:
O you who have believed, do not violate the rites of Allah or [the sanctity of] the sacred month or [neglect the marking of] the sacrificial animals and garlanding [them] or [violate the safety of] those coming to the Sacred House seeking bounty from their Lord and [His] approval. But when you come out of ihram, then [you may] hunt. And do not let the hatred of a people for having obstructed you from al-Masjid al-Haram lead you to transgress. And cooperate in righteousness and piety, but do not cooperate in sin and aggression. And fear Allah; indeed, Allah is severe in penalty. (QS. Al-Ma'idah, Ayah ௨)
Abdul Hameed Baqavi:
நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வின் மார்க்க அடையாளங்களையும் (ரஜப், துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம் ஆகிய) சிறப்புற்ற மாதங்களையும், (ஹஜ்ஜின்) குர்பானிகளையும், (குர்பானிகளுக்காக) அடையாளம் கட்டப்பட்டவைகளையும், தங்கள் இறைவனின் அருளையும், திருப்பொருத்தத்தையும் அடையக்கருதி கண்ணியமான அவனுடைய ஆலயத்தை நாடிச் செல்பவர்களையும் (அவமதிப்பதை) நீங்கள் ஆகுமாக்கிக் கொள்ளாதீர்கள். நீங்கள் உங்கள் இஹ்ராமை நீக்கிவிட்டால் (அனுமதிக்கப்பட்டவைகளை) நீங்கள் வேட்டையாடலாம். கண்ணியமான மஸ்ஜிதுக்குச் செல்லாது உங்களைத் தடுத்துக்கொண்ட வகுப்பார் மீது (உங்களுக்கு)ள்ள துவேஷம் (அவர்கள்மீது) நீங்கள் வரம்பு மீறும்படி உங்களைத் தூண்டாதிருக்கவும். அன்றி, நன்மைக்கும் (அல்லாஹ்வுடைய) இறை அச்சத்திற்கும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருங்கள். பாவத்திற்கும் அத்துமீறுவதற்கும் (அநியாயத்திற்கும்) நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டாம். அல்லாஹ்வுக்கே நீங்கள் பயப்படுங்கள். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ், வேதனை செய்வதில் மிகக் கடுமையானவனாக இருக்கின்றான். (ஸூரத்துல் மாயிதா, வசனம் ௨)
Jan Trust Foundation
முஃமின்களே! (நீங்கள் இஹ்ராம் கட்டியிருக்கும் சமயத்தில் உங்களுக்கு ஏற்படுத்தப்பட்ட) அல்லாஹ்வின மார்க்க அடையாளங்களையும், சிறப்பான மாதங்களையும், குர்பானிகளையும், குர்பானிக்காக அடையாளம் கட்டப்பெற்றவைற்றையும், தங்களுடைய இறைவனின் அருளையும் திருப்பொருத்தத்தையும் நாடி கண்ணியமான (அவனுடைய) ஆலயத்தை நாடிச் செல்வோரையும் (தாக்குவதையோ, அவமதிப்பதையோ) நீங்கள் ஆகுமாக்கிக் கொள்ளாதீர்கள்; நீங்கள் இஹ்ராமைக் களைந்து விட்டால் (அனுமதிக்கப்பட்டவற்றை) நீங்கள் வேட்டையாடலாம்; மேலும் புனித மஸ்ஜிதை (கஃபத்துல்லாஹ்வை) விட்டும் உங்களைத் தடுத்த கூட்டத்தினர் மீதுள்ள வெறுப்பானது, நீங்கள் வரம்பு மீறுமாறு உங்களைத் தூண்டி விட வேண்டாம்; இன்னும் நன்மையிலும்; பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்; பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்; அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வின் அடையாளங்களையும் புனித மாதத்தையும், (மாலையிடப்படாத) குர்பானியையும், மாலையிடப்பட்ட குர்பானிகளையும், தங்கள் இறைவனிடமிருந்து அருளையும், பொருத்தத்தையும் தேடியவர்களாக புனிதமான (கஅபா) ஆலயத்தை நாடுபவர்களையும் (அவமதிப்பதை) ஆகுமாக்காதீர்கள். நீங்கள் இஹ்ராமிலிருந்து நீங்கினால் வேட்டையாடிக் கொள்ளுங்கள். புனிதமான மஸ்ஜிதைவிட்டு அவர்கள் உங்களைத் தடுத்த காரணத்தால் (அந்த) சமுதாயத்தின் (மீது உங்களுக்கு ஏற்பட்ட) துவேஷம் நீங்கள் வரம்பு மீற உங்களைத் தூண்டவேண்டாம். நன்மைக்கும் இறையச்சத்திற்கும் ஒருவருக்கொருவர் உதவுங்கள். பாவத்திற்கும் அநியாயத்திற்கும் ஒருவருக்கொருவர் உதவாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ், தண்டிப்பதில் கடுமையானவன்.