குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாயிதா வசனம் ௧௧௭
Qur'an Surah Al-Ma'idah Verse 117
ஸூரத்துல் மாயிதா [௫]: ௧௧௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
مَا قُلْتُ لَهُمْ اِلَّا مَآ اَمَرْتَنِيْ بِهٖٓ اَنِ اعْبُدُوا اللّٰهَ رَبِّيْ وَرَبَّكُمْ ۚوَكُنْتُ عَلَيْهِمْ شَهِيْدًا مَّا دُمْتُ فِيْهِمْ ۚ فَلَمَّا تَوَفَّيْتَنِيْ كُنْتَ اَنْتَ الرَّقِيْبَ عَلَيْهِمْ ۗوَاَنْتَ عَلٰى كُلِّ شَيْءٍ شَهِيْدٌ (المائدة : ٥)
- mā qul'tu
- مَا قُلْتُ
- Not I said
- நான் கூறவில்லை
- lahum
- لَهُمْ
- to them
- அவர்களுக்கு
- illā mā amartanī
- إِلَّا مَآ أَمَرْتَنِى
- except what You commanded me
- தவிர/எதை/நீ ஏவினாய்/எனக்கு
- bihi ani uʿ'budū
- بِهِۦٓ أَنِ ٱعْبُدُوا۟
- [with it] that "You worship
- அதை/என்பதை/வணங்குங்கள்
- l-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்வை
- rabbī
- رَبِّى
- my Lord
- என் இறைவன்
- warabbakum
- وَرَبَّكُمْۚ
- and your Lord"
- இன்னும் உங்கள் இறைவன்
- wakuntu
- وَكُنتُ
- And I was
- இருந்தேன்
- ʿalayhim
- عَلَيْهِمْ
- over them
- அவர்கள் மீது
- shahīdan
- شَهِيدًا
- a witness
- சாட்சியாளனாக
- mā dum'tu
- مَّا دُمْتُ
- that as long as I
- நான் இருந்தவரை
- fīhim
- فِيهِمْۖ
- (was) among them
- அவர்களுடன்
- falammā tawaffaytanī
- فَلَمَّا تَوَفَّيْتَنِى
- then when You raised me
- நீ கைப்பற்றிய போது/என்னை
- kunta
- كُنتَ
- You were
- இருந்தாய்
- anta
- أَنتَ
- [You]
- நீ
- l-raqība
- ٱلرَّقِيبَ
- the Watcher
- கண்கானிப்பவனாக
- ʿalayhim
- عَلَيْهِمْۚ
- over them
- அவர்கள் மீது
- wa-anta
- وَأَنتَ
- and You
- நீ
- ʿalā
- عَلَىٰ
- (are) on
- மீது
- kulli shayin
- كُلِّ شَىْءٍ
- every thing
- எல்லாவற்றின்
- shahīdun
- شَهِيدٌ
- a Witness
- சாட்சியாளன்
Transliteration:
Maa qultu lahum illaa maaa amartanee bihee ani'budul laaha Rabbeee wa Rabbakum; wa kuntu 'alaihim shaheedam maa dumtu feehim falammaa tawaffaitanee kunta Antar Raqeeba 'alaihim; wa Anta 'alaa kulli shai'in Shaheed(QS. al-Māʾidah:117)
English Sahih International:
I said not to them except what You commanded me – to worship Allah, my Lord and your Lord. And I was a witness over them as long as I was among them; but when You took me up, You were the Observer over them, and You are, over all things, Witness. (QS. Al-Ma'idah, Ayah ௧௧௭)
Abdul Hameed Baqavi:
(அன்றி) நீ எனக்கு ஏவியபடியே நான் (அவர்களை நோக்கி) "நீங்கள் எனக்கும் உங்களுக்கும் இறைவனாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்" என்று கூறினேனேயன்றி வேறொன்றையும் (ஒருபோதும்) நான் கூறவில்லை. நான் அவர்களுடன் இருந்த வரையில் அவர்களின் செயலை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீதான் அவர்களைக் கவனித்தவனாக இருந்தாய். அனைத்திற்கும் நீயே சாட்சி. (ஸூரத்துல் மாயிதா, வசனம் ௧௧௭)
Jan Trust Foundation
“நீ எனக்குக் கட்டளையிட்டபடி (மனிதர்களை நோக்கி), “என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்” என்பதைத் தவிர வேறு எதையும் அவர்களுக்கு நான் கூறவில்லை; மேலும், நான் அவர்களுடன் (உலகில்) இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன்; அப்பால் நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீயே அவர்கள் மீது கண்காணிப்பவனாக இருந்தாய். நீயே எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாக இருக்கிறாய்” (என்றும்);
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நீ எனக்கு ஏவிய, “என் இறைவனும் உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்” என்பதைத் தவிர (வேறு எதையும்) அவர்களுக்கு நான் கூறவில்லை. நான் அவர்களுடன் இருந்தவரை அவர்கள் மீது சாட்சியாளனாக இருந்தேன். நீ என்னைக் கைப்பற்றியபோது நீதான் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய். நீயே எல்லாவற்றின் மீதும் சாட்சியாளன்.