குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாயிதா வசனம் ௧௧௨
Qur'an Surah Al-Ma'idah Verse 112
ஸூரத்துல் மாயிதா [௫]: ௧௧௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِذْ قَالَ الْحَوَارِيُّوْنَ يٰعِيْسَى ابْنَ مَرْيَمَ هَلْ يَسْتَطِيْعُ رَبُّكَ اَنْ يُّنَزِّلَ عَلَيْنَا مَاۤىِٕدَةً مِّنَ السَّمَاۤءِ ۗقَالَ اتَّقُوا اللّٰهَ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ (المائدة : ٥)
- idh qāla
- إِذْ قَالَ
- When said
- கூறிய சமயம்
- l-ḥawāriyūna
- ٱلْحَوَارِيُّونَ
- the disciples
- சிஷ்யர்கள்
- yāʿīsā
- يَٰعِيسَى
- "O Isa
- ஈஸாவே
- ib'na
- ٱبْنَ
- son
- மகன்
- maryama
- مَرْيَمَ
- (of) Maryam!
- மர்யமுடைய
- hal yastaṭīʿu
- هَلْ يَسْتَطِيعُ
- Is able
- இயலுவானா?
- rabbuka
- رَبُّكَ
- your Lord
- உம் இறைவன்
- an yunazzila
- أَن يُنَزِّلَ
- to send down
- அவன் இறக்குவதற்கு
- ʿalaynā
- عَلَيْنَا
- to us
- எங்கள் மீது
- māidatan
- مَآئِدَةً
- a table spread
- ஓர் உணவுத் தட்டை
- mina l-samāi
- مِّنَ ٱلسَّمَآءِۖ
- from the heaven?"
- வானத்திலிருந்து
- qāla
- قَالَ
- He said
- கூறினார்
- ittaqū
- ٱتَّقُوا۟
- "Fear
- அஞ்சுங்கள்
- l-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்வை
- in kuntum
- إِن كُنتُم
- if you are
- நீங்கள் இருந்தால்
- mu'minīna
- مُّؤْمِنِينَ
- believers"
- நம்பிக்கையாளர்களாக
Transliteration:
Iz qaalal hawaariyyoona yaa 'Eesab na Maryama hal yastatee'u Rabbuka ai yunaz zila 'alinaa maaa'idatam minas samaaa'i qaalat taqul laaha in kuntum mu'mineen(QS. al-Māʾidah:112)
English Sahih International:
[And remember] when the disciples said, "O Jesus, Son of Mary, can your Lord send down to us a table [spread with food] from the heaven?" [Jesus] said, "Fear Allah, if you should be believers." (QS. Al-Ma'idah, Ayah ௧௧௨)
Abdul Hameed Baqavi:
தவிர (நபியே! நீங்கள் அவர்களுக்கு ஞாபகமூட்டுங்கள்:) அந்த சிஷ்யர்கள் (ஈஸாவை நோக்கி) "மர்யமுடைய மகன் ஈஸாவே! உங்களுடைய இறைவன், வானத்திலிருந்து எங்களுக்காக ஓர் உணவு(ப் பொருள்கள் நிரம்பிய) தட்டை இறக்கி வைக்க முடியுமா?" என்று கேட்டதற்கு (ஈஸா, அவர்களை நோக்கி) "மெய்யாகவே நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் (இத்தகைய கேள்வி கேட்பதைப் பற்றி) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து கொள்ளுங்கள்" என்று கூறினார். (ஸூரத்துல் மாயிதா, வசனம் ௧௧௨)
Jan Trust Foundation
“மர்யமுடைய மகன் ஈஸாவே! உங்கள் இறைவன் வானத்திலிருந்து எங்களுக்காக உணவு மரவையை (ஆகாரத் தட்டை) இறக்கி வைக்க முடியுமா?” என்று ஹவாரிய்யூன் (சீடர்)கள் கேட்டபோது அவர், “நீங்கள் முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்” என்று கூறினார்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
சிஷ்யர்கள் “மர்யமுடைய மகன் ஈஸாவே! உம் இறைவன், வானத்திலிருந்து எங்கள் மீது ஓர் உணவுத் தட்டை இறக்குவதற்கு இயலுவானா?” என்று கூறிய சமயத்தை நினைவு கூறுவீராக! (அதற்கு ஈஸா) “நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வை அஞ்சுங்கள்” என்று கூறினார்.