Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௯௮

Qur'an Surah An-Nisa Verse 98

ஸூரத்துன்னிஸாவு [௪]: ௯௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِلَّا الْمُسْتَضْعَفِيْنَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاۤءِ وَالْوِلْدَانِ لَا يَسْتَطِيْعُوْنَ حِيْلَةً وَّلَا يَهْتَدُوْنَ سَبِيْلًاۙ (النساء : ٤)

illā
إِلَّا
Except
தவிர
l-mus'taḍʿafīna
ٱلْمُسْتَضْعَفِينَ
the oppressed
பலவீனர்கள்
mina
مِنَ
among
இருந்து
l-rijāli
ٱلرِّجَالِ
the men
ஆண்கள்
wal-nisāi
وَٱلنِّسَآءِ
and the women
இன்னும் பெண்கள்
wal-wil'dāni
وَٱلْوِلْدَٰنِ
and the children
இன்னும் சிறுவர்கள்
lā yastaṭīʿūna
لَا يَسْتَطِيعُونَ
(who) not are able to
இயலமாட்டார்கள்
ḥīlatan
حِيلَةً
plan
ஓர் ஆற்றலை
walā yahtadūna
وَلَا يَهْتَدُونَ
and not they are directed
இன்னும் வழி காணமாட்டார்கள்
sabīlan
سَبِيلًا
(to) a way
ஒரு வழியையும்

Transliteration:

Illal mustad 'afeena minar rijaali wannisaaa'i walwildaani laa yastatee'oona heelatanw wa laa yahtadoona sabeela (QS. an-Nisāʾ:98)

English Sahih International:

Except for the oppressed among men, women, and children who cannot devise a plan nor are they directed to a way – (QS. An-Nisa, Ayah ௯௮)

Abdul Hameed Baqavi:

எனினும் ஆண், பெண், சிறியோர், பெரியோர் ஆகியோர்களில் (உண்மையில்) பலவீனமானவர்கள் யாதொரு பரிகாரமும் தேடிக்கொள்ள சக்தியற்று (அதைவிட்டு வெளியேற) வழி காணாதிருந்தால் அத்தகையவர்களை அல்லாஹ் மன்னித்து விடக்கூடும். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௯௮)

Jan Trust Foundation

(ஆனால்) ஆண்களிலும், பெண்களிலும், சிறுவர்களிலும் பலஹீனமானவர்களைத் தவிர - ஏனெனில் இவர்கள் எவ்வித உபாயமும் தெரியாதவர்கள்; (வெளியேறிச் செல்ல) வழியும் அறியாதவர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் ஆகியோரில் பலவீனர்களைத் தவிர. (இவர்கள் நரகவாசிகள் அல்லர்) இவர்கள் (ஹிஜ்ரா புறப்படுவதற்கு தேவையான) ஓர் ஆற்றலை(யும் பெற) இயலமாட்டார்கள். இன்னும் இவர்கள், (தப்பித்துச் செல்ல) ஒரு வழியையும் காணமாட்டார்கள். அல்லாஹ் இவர்களை மன்னிக்கக்கூடும். அல்லாஹ் மன்னிப்பாளனாக பாவங்களை மறைப்பவனாக இருக்கிறான்.