Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௯௭

Qur'an Surah An-Nisa Verse 97

ஸூரத்துன்னிஸாவு [௪]: ௯௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّ الَّذِيْنَ تَوَفّٰىهُمُ الْمَلٰۤىِٕكَةُ ظَالِمِيْٓ اَنْفُسِهِمْ قَالُوْا فِيْمَ كُنْتُمْ ۗ قَالُوْا كُنَّا مُسْتَضْعَفِيْنَ فِى الْاَرْضِۗ قَالُوْٓا اَلَمْ تَكُنْ اَرْضُ اللّٰهِ وَاسِعَةً فَتُهَاجِرُوْا فِيْهَا ۗ فَاُولٰۤىِٕكَ مَأْوٰىهُمْ جَهَنَّمُ ۗ وَسَاۤءَتْ مَصِيْرًاۙ (النساء : ٤)

inna alladhīna
إِنَّ ٱلَّذِينَ
Indeed those whom -
நிச்சயமாக எவர்கள்
tawaffāhumu
تَوَفَّىٰهُمُ
take them (in death)
உயிர் வாங்கினார்(கள்)/அவர்களை
l-malāikatu
ٱلْمَلَٰٓئِكَةُ
the Angels
வானவர்கள்
ẓālimī
ظَالِمِىٓ
(while) they (were) wronging
தீங்கிழைத்தவர்களாக
anfusihim
أَنفُسِهِمْ
themselves
தங்களுக்கு
qālū
قَالُوا۟
they say
கூறினர்
fīma kuntum
فِيمَ كُنتُمْۖ
"In what (condition) were you?"
எவ்வாறுஇருந்தீர்கள்?
qālū
قَالُوا۟
They said
கூறினார்கள்
kunnā
كُنَّا
"We were
இருந்தோம்
mus'taḍʿafīna
مُسْتَضْعَفِينَ
oppressed
பலவீனர்களாக
fī l-arḍi
فِى ٱلْأَرْضِۚ
in the earth
இந்த பூமியில்
qālū
قَالُوٓا۟
They said
கூறினார்கள்
alam takun
أَلَمْ تَكُنْ
"Not was
இருக்கவில்லையா?
arḍu
أَرْضُ
(the) earth
பூமி
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வின்
wāsiʿatan
وَٰسِعَةً
spacious (enough)
விசாலமானதாக
fatuhājirū
فَتُهَاجِرُوا۟
so that you (could) emigrate
ஹிஜ்ரா சென்றிருக்க வேண்டாமா?
fīhā fa-ulāika
فِيهَاۚ فَأُو۟لَٰٓئِكَ
in it?" Then those
அதில்/இவர்கள்
mawāhum
مَأْوَىٰهُمْ
(will have) their abode
இவர்களின் ஒதுங்குமிடம்
jahannamu
جَهَنَّمُۖ
(in) Hell -
நரகம்
wasāat
وَسَآءَتْ
and it is an evil
கெட்டுவிட்டது
maṣīran
مَصِيرًا
destination
மீளுமிடத்தால்

Transliteration:

Innal lazeena tawaffaa humul malaaa'ikatu zaalimeee anfusihim qaaloo feema kuntum qaaloo kunnaa mustad'afeena fil-ard; qaalooo alam takun ardul laahi waasi'atan fatuhaajiroo feehaa; fa ulaaa'ika maawaahum Jahannamu wa saaa'at maseeraa (QS. an-Nisāʾ:97)

English Sahih International:

Indeed, those whom the angels take [in death] while wronging themselves – [the angels] will say, "In what [condition] were you?" They will say, "We were oppressed in the land." They [the angels] will say, "Was not the earth of Allah spacious [enough] for you to emigrate therein?" For those, their refuge is Hell – and evil it is as a destination. (QS. An-Nisa, Ayah ௯௭)

Abdul Hameed Baqavi:

எவர்கள் (தங்கள் மார்க்கக் கட்டளையை சரிவர நிறைவேற்ற முடியாமல் நிராகரிப்பவர்களின் நாட்டில் இருந்துகொண்டு) தங்களுக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்கின்றனரோ அவர்களின் உயிரை மலக்குகள் கைப்பற்றும் பொழுது (அவர்களை நோக்கி "மார்க்கக் கட்டளையை நிறைவேற்றாது) நீங்கள் எவ்வாறு இருந்தீர்கள்" என்று கேட்பார்கள். அ(தற்க)வர்கள் "அந்தப் பூமியில் நாங்கள் சிறுபான்மையினர்களாகவே இருந்தோம்" என்று (பதில்) கூறுவார்கள். (அதற்கு மலக்குகள்) அல்லாஹ்வுடைய பூமி விசால மானதல்லவா? நீங்கள் (இருந்த) அவ்விடத்தை விட்டு வெளியேறி இருக்கவேண்டாமா?" என்று கேட்பார்கள். இத்தகையவர்கள் ஒதுங்குமிடம் நரகம்தான். அது ஒதுங்கும் இடங்களில் மிகக் கெட்டது! (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௯௭)

Jan Trust Foundation

(அல்லாஹ்வின்ஆணையை நிறைவேற்றாது) எவர் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டார்களோ அவர்களின் உயிரை மலக்குகள் கைப்பற்றும்போது “நீங்கள் எந்த நிலையில் இருந்தீர்கள்?” என்று கேட்பார்கள். (அதற்கவர்கள்) “நாங்கள் பூமியில் (கொடுமையை எதிர்க்க முடியா) பலஹீனர்களாக இருந்தோம்” என்று கூறுவார்கள். அல்லாஹ்வின் பூமி விசாலமானதாக இல்லையா? அதில் (ஹிஜ்ரத் செய்து) நீங்கள் நாடு கடந்து போயிருக்கக்கூடாதா?” என (மலக்குகள்) கேட்பார்கள்; எனவே இத்தகையோர் ஒதுங்குமிடம் நரகம் தான்; சென்றடையும் இடங்களில் அது மிகக் கெட்டதாகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக தங்களுக்குத் தாமே தீங்கிழைத்தவர்களாக எவர்களை வானவர்கள் உயிர்வாங்கினார்களோ, (அவர்களிடம் “மார்க்கக் கட்டளையை நிறைவேற்றாது) நீங்கள் எவ்வாறு இருந்தீர்கள்?” என்று கூற, (அதற்கவர்கள்) “இந்தப் பூமியில் நாங்கள் பலவீனர்களாக இருந்தோம்“என்று (பதில்) கூறினார்கள். (அதற்கு வானவர்கள்) அல்லாஹ்வின் பூமி விசாலமானதாக இருக்கவில்லையா? நீங்கள் (இருந்த இடத்தை விட்டு) அதில் ஹிஜ்ரா சென்றிருக்க வேண்டாமா?” என்று கூறினார்கள். இவர்களின் ஒதுங்குமிடம் நரகமாகும். அது மீளுமிடத்தால் (மிகக்) கெட்டுவிட்டது!