Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௯௪

Qur'an Surah An-Nisa Verse 94

ஸூரத்துன்னிஸாவு [௪]: ௯௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْٓا اِذَا ضَرَبْتُمْ فِيْ سَبِيْلِ اللّٰهِ فَتَبَيَّنُوْا وَلَا تَقُوْلُوْا لِمَنْ اَلْقٰىٓ اِلَيْكُمُ السَّلٰمَ لَسْتَ مُؤْمِنًاۚ تَبْتَغُوْنَ عَرَضَ الْحَيٰوةِ الدُّنْيَا ۖفَعِنْدَ اللّٰهِ مَغَانِمُ كَثِيْرَةٌ ۗ كَذٰلِكَ كُنْتُمْ مِّنْ قَبْلُ فَمَنَّ اللّٰهُ عَلَيْكُمْ فَتَبَيَّنُوْاۗ اِنَّ اللّٰهَ كَانَ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرًا (النساء : ٤)

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟
O you who believe[d]!
நம்பிக்கையாளர்களே
idhā ḍarabtum
إِذَا ضَرَبْتُمْ
When you go forth
நீங்கள் பயணித்தால்
fī sabīli
فِى سَبِيلِ
in (the) way
பாதையில்
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வின்
fatabayyanū
فَتَبَيَّنُوا۟
then investigate
தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்
walā taqūlū
وَلَا تَقُولُوا۟
and (do) not say
இன்னும் கூறாதீர்கள்
liman alqā
لِمَنْ أَلْقَىٰٓ
to (the one) who offers
எவருக்கு/கூறினார்
ilaykumu
إِلَيْكُمُ
to you
உங்கள் முன்
l-salāma
ٱلسَّلَٰمَ
(a greeting of) peace
ஸலாம்
lasta
لَسْتَ
"You are not"
நீர் இல்லை
mu'minan
مُؤْمِنًا
"a believer"
நம்பிக்கையாளராக
tabtaghūna
تَبْتَغُونَ
seeking
தேடுகிறீர்கள்
ʿaraḍa
عَرَضَ
transitory gains
பொருளை
l-ḥayati
ٱلْحَيَوٰةِ
(of) the life
வாழ்க்கையின்
l-dun'yā
ٱلدُّنْيَا
(of) the world
இவ்வுலகம்
faʿinda l-lahi
فَعِندَ ٱللَّهِ
for with Allah
அல்லாஹ்விடம்
maghānimu
مَغَانِمُ
(are) booties
செல்வங்கள்
kathīratun
كَثِيرَةٌۚ
abundant
ஏராளமான
kadhālika
كَذَٰلِكَ
Like that
இவ்வாறே
kuntum
كُنتُم
you were
இருந்தீர்கள்
min qablu
مِّن قَبْلُ
from before
(இதற்கு) முன்னர்
famanna
فَمَنَّ
then conferred favor
அருள் புரிந்தான்
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
ʿalaykum
عَلَيْكُمْ
upon you
உங்கள் மீது
fatabayyanū
فَتَبَيَّنُوٓا۟ۚ
so investigate
ஆகவே தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்
inna l-laha
إِنَّ ٱللَّهَ
Indeed Allah
நிச்சயமாக அல்லாஹ்
kāna
كَانَ
is
இருக்கிறான்
bimā
بِمَا
of what
எதை
taʿmalūna
تَعْمَلُونَ
you do
செய்கிறீர்கள்
khabīran
خَبِيرًا
All-Aware
ஆழ்ந்தறிந்தவனாக

Transliteration:

Yaaa aiyuhal lazeena aamanoo izaa darabtum fee sabeelil laahi fatabaiyanoo wa laa taqooloo liman alqaaa ilaikumus salaama lasta mu'minan tabtaghoona 'aradal hayaatid dunyaa fa'indal laahi maghaanimu kaseerah; kazaalika kuntum min qablu famannnal laahu 'alaikum fatabaiyanoo; innallaaha kaana bimaa ta'maloona Khabeeraa (QS. an-Nisāʾ:94)

English Sahih International:

O you who have believed, when you go forth [to fight] in the cause of Allah, investigate; and do not say to one who gives you [a greeting of] peace, "You are not a believer," aspiring for the goods of worldly life; for with Allah are many acquisitions. You [yourselves] were like that before; then Allah conferred His favor [i.e., guidance] upon you, so investigate. Indeed Allah is ever, of what you do, Aware. (QS. An-Nisa, Ayah ௯௪)

Abdul Hameed Baqavi:

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுடைய பாதையில் (போருக்காக) நீங்கள் சென்றால் (போர்முனையில் எதிர்படுபவர்கள் நம்பிக்கையாளர்களா? நிராகரிப்பவர்களா? என்பதைத்) தெளிவாக அறிந்து கொள்ளுங்கள். (அவர்களில் எவரேனும் தம்மை நம்பிக்கையாளர் என்று உங்களுக்கு அறிவிப்பதற்காக) உங்களுக்கு ஸலாம் கூறினால் (அவர்களிடமிருந்து) இவ்வுலக வாழ்க்கைக்குரிய (அற்பப்) பொருளை நீங்கள் அடையக்கருதி "நீ நம்பிக்கையாளரல்ல" என்று அவரைக் கூறி (வெட்டி) விடாதீர்கள். அல்லாஹ்விடத்தில் ஏராளமான பொருள்கள் இருக்கின்றன. (அவற்றை நீங்கள் அடையலாம்.) இதற்கு முன்னர் நீங்களும் இவ்வாறே (பயந்து பயந்து இஸ்லாமை வெளியிட்டுக்கொண்டு) இருந்தீர்கள். அல்லாஹ் உங்கள் மீது அருள்புரிந்தான். (அதன் பின்னரே நீங்கள் உண்மை நம்பிக்கையாளர் ஆனீர்கள். ஆகவே, போர்புரிவதற்கு முன்னதாகவே உங்கள் முன் இருப்பவர்கள் நம்பிக்கையாளர்களா? அல்லவா? என்பதைத் தீர விசாரித்துத் தெரிந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவனாக இருக்கின்றான். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௯௪)

Jan Trust Foundation

முஃமின்களே! அல்லாஹ்வுடைய பாதையில் (போருக்கு) நீங்கள் சென்றால், (போர் முனையில் உங்களை எதிர்த்துச் சண்டை செய்வோர் முஃமின்களா அல்லது மற்றவர்களா என்பதைத்) தெளிவாக அறிந்து கொள்ளுங்கள். (அவர்களில்) எவரேனும் (தாம் முஃமின் என்பதை அறிவிக்கும் பொருட்டு) உங்களுக்கு “ஸலாம்” சொன்னால், இவ்வுலக வாழ்க்கையின் அற்பமான அழியக் கூடிய பொருட்களை அடையும் பொருட்டு “நீ முஃமினல்ல” என்று கூறி (அவரைக் கொன்று) விடாதீர்கள்; அல்லாஹ்விடம் ஏராளமான பொருட்கள் இருக்கின்றன; இதற்கு முன்னர் நீங்களும் (பயந்து பயந்து) இவ்வாறே இருந்தீர்கள் - அல்லாஹ் உங்கள் மீது அருள் புரிந்தான்; எனவே (மேலே கூறியாவாறு போர் முனையில்) நீங்கள் தெளிவு படுத்திக் கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் பயணித்தால் (எதிர்வருபவர்களைத்) தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு சலாம் கூறியவரை உலக வாழ்க்கையின் பொருளை நீங்கள் தேடியவர்களாக “நீ நம்பிக்கையாளர் இல்லை” என்று கூறாதீர்கள். அல்லாஹ்விடம் ஏராளமான செல்வங்கள் உள்ளன. (இதற்கு) முன்னர் நீங்களும் இவ்வாறே இருந்தீர்கள். அல்லாஹ் உங்கள் மீது அருள்புரிந்தான். ஆகவே (சந்திப்பவரை) தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை ஆழ்ந்தறிந்தவனாக இருக்கிறான்.