குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௯
Qur'an Surah An-Nisa Verse 9
ஸூரத்துன்னிஸாவு [௪]: ௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلْيَخْشَ الَّذِيْنَ لَوْ تَرَكُوْا مِنْ خَلْفِهِمْ ذُرِّيَّةً ضِعٰفًا خَافُوْا عَلَيْهِمْۖ فَلْيَتَّقُوا اللّٰهَ وَلْيَقُوْلُوْا قَوْلًا سَدِيْدًا (النساء : ٤)
- walyakhsha
- وَلْيَخْشَ
- And let fear
- பயப்படட்டும்
- alladhīna
- ٱلَّذِينَ
- those who
- எவர்கள்
- law tarakū
- لَوْ تَرَكُوا۟
- if they left
- அவர்கள் விட்டுச் சென்றால்
- min
- مِنْ
- from
- இருந்து
- khalfihim
- خَلْفِهِمْ
- behind
- அவர்களுக்குப் பின்
- dhurriyyatan
- ذُرِّيَّةً
- offspring
- ஒரு சந்ததியை
- ḍiʿāfan
- ضِعَٰفًا
- weak
- பலவீனர்கள்
- khāfū
- خَافُوا۟
- (and) they would have feared
- பயப்படுவார்கள்
- ʿalayhim
- عَلَيْهِمْ
- about them
- அவர்கள் மீது
- falyattaqū
- فَلْيَتَّقُوا۟
- So let them fear
- ஆகவே அவர்கள் அஞ்சட்டும்
- l-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்வை
- walyaqūlū
- وَلْيَقُولُوا۟
- and let them speak
- இன்னும் அவர்கள் சொல்லட்டும்
- qawlan
- قَوْلًا
- words
- சொல்லை
- sadīdan
- سَدِيدًا
- appropriate
- நேர்மையானது
Transliteration:
Walyakhshal lazeena law tarakoo min khalfihim zurriyyatan di'aafan khaafoo 'alaihim falyattaqul laaha walyaqooloo qawlan sadeedaa(QS. an-Nisāʾ:9)
English Sahih International:
And let those [executors and guardians] fear [injustice] as if they [themselves] had left weak offspring behind and feared for them. So let them fear Allah and speak words of appropriate justice. (QS. An-Nisa, Ayah ௯)
Abdul Hameed Baqavi:
எவர்கள் தாங்கள் மரணித்தால் தங்களுக்குப்பின் உள்ள பலவீனமான (தமது) சந்ததிகளுக்கு என்ன நிலைமை ஆகும் என்று பயப்படுகிறார்களோ அதுபோன்று அவர்கள் பிற (உறவினர்களின்) அநாதைகளின் விஷயத்திலும் பயந்து கொள்ளட்டும். அவர்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும். மேலும், நேர்மையான வார்த்தையை சொல்லட்டும். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௯)
Jan Trust Foundation
தங்களுக்கு பின்னால் பலஹீனமான சந்ததிகளை விட்டுச் சென்றால் (அவர்களுடைய நிலை என்னவாகும் என்று) அஞ்சுகிறார்களோ அவர்கள் பயந்து (முன் ஜாக்கிரதை நடவடிக்கைகளை எடுத்துக்) கொள்ளட்டும்; மேலும் அல்லாஹ்வை அஞ்சி, இதமான வார்த்தைகளையே அவர்கள் சொல்லட்டும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
எவர்கள் தங்களுக்குப் பின் பலவீனமான ஒரு சந்ததியை விட்டால் அவர்கள் மீது பயப்படுவார்களோ அ(த்தகைய)வர்கள் (மற்றவர்களின் அநாதை சந்ததிகளையும்) பயந்து கொள்ளட்டும்; அவர்கள் அல்லாஹ்வை அஞ்சட்டும்; நேர்மையான சொல்லைச் சொல்லட்டும்.