Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௭௯

Qur'an Surah An-Nisa Verse 79

ஸூரத்துன்னிஸாவு [௪]: ௭௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

مَآ اَصَابَكَ مِنْ حَسَنَةٍ فَمِنَ اللّٰهِ ۖ وَمَآ اَصَابَكَ مِنْ سَيِّئَةٍ فَمِنْ نَّفْسِكَ ۗ وَاَرْسَلْنٰكَ لِلنَّاسِ رَسُوْلًا ۗ وَكَفٰى بِاللّٰهِ شَهِيْدًا (النساء : ٤)

مَّآ
What(ever)
எது
aṣābaka
أَصَابَكَ
befalls you
அடைந்தது/உம்மை
min ḥasanatin
مِنْ حَسَنَةٍ
of (the) good
இருந்து/நன்மை
famina
فَمِنَ
(is) from
இருந்து
l-lahi
ٱللَّهِۖ
Allah
அல்லாஹ்
wamā
وَمَآ
and whatever
இன்னும் எது
aṣābaka
أَصَابَكَ
befalls you
அடைந்தது/உம்மை
min sayyi-atin
مِن سَيِّئَةٍ
of (the) evil
இருந்து/தீமை
famin nafsika
فَمِن نَّفْسِكَۚ
(is) from yourself
உன்னிலிருந்து
wa-arsalnāka
وَأَرْسَلْنَٰكَ
And We have sent you
அனுப்பினோம்/உம்மை
lilnnāsi
لِلنَّاسِ
for the people
மக்களுக்கு
rasūlan
رَسُولًاۚ
(as) a Messenger
தூதராக
wakafā
وَكَفَىٰ
and is sufficient
போதுமானவன்
bil-lahi
بِٱللَّهِ
Allah
அல்லாஹ்
shahīdan
شَهِيدًا
(as) a Witness
சாட்சியாளனாக

Transliteration:

Maaa asaabaka min hasanatin faminal laahi wa maaa asaaabaka min saiyi'atin famin nafsik; wa arsalnaaka linnaasi Rasoolaa; wa kafaa billaahi Shaheedaa (QS. an-Nisāʾ:79)

English Sahih International:

What comes to you of good is from Allah, but what comes to you of evil, [O man], is from yourself. And We have sent you, [O Muhammad], to the people as a messenger, and sufficient is Allah as Witness. (QS. An-Nisa, Ayah ௭௯)

Abdul Hameed Baqavi:

அன்றி, (இவ்வாறு கூறுகின்றவனை நோக்கி) "உனக்கு யாதொரு நன்மை ஏற்பட்டால் அது அல்லாஹ்வினால் ஏற்பட்டது" என்றும் "உனக்கு யாதொரு தீங்கேற்பட்டால் அது (நீ இழைத்த குற்றத்தின் காரணமாக) உன்னால்தான் வந்தது" என்றும் (கூறுங்கள். நபியே!) நாம் உங்களை ஒரு தூதராகவே மனிதர்களுக்கு அனுப்பியிருக்கின்றோம். (இதற்கு) அல்லாஹ்வே போதுமான சாட்சியாக இருக்கின்றான். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௭௯)

Jan Trust Foundation

உனக்குக் கிடைக்கும் எந்த நன்மையும் அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கிறது; இன்னும், உனக்கு ஏதாவது ஒரு தீங்கு ஏற்பட்டால் அது உன்னால் தான் வந்தது; (நபியே!) நாம் உம்மை மனிதர்களுக்கு (இவற்றை எடுத்துக் கூறுவதற்காகத்) தூதராகவே அனுப்பியுள்ளோம் - (இதற்கு) அல்லாஹ்வே போதுமான சாட்சியாக இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“நன்மையில் எது உம்மை அடைந்ததோ (அது) அல்லாஹ்வின் புறத்திலிருந்து (அடைந்தது).” “தீமையில் எது உம்மை அடைந்ததோ (அது) உன் (தவறி)னால் அடைந்தது.” (நபியே!) உம்மை மக்களுக்கு ஒரு தூதராகவே அனுப்பினோம். சாட்சியால் அல்லாஹ்வே போதுமானவன்.