Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௭௭

Qur'an Surah An-Nisa Verse 77

ஸூரத்துன்னிஸாவு [௪]: ௭௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَلَمْ تَرَ اِلَى الَّذِيْنَ قِيْلَ لَهُمْ كُفُّوْٓا اَيْدِيَكُمْ وَاَقِيْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَۚ فَلَمَّا كُتِبَ عَلَيْهِمُ الْقِتَالُ اِذَا فَرِيْقٌ مِّنْهُمْ يَخْشَوْنَ النَّاسَ كَخَشْيَةِ اللّٰهِ اَوْ اَشَدَّ خَشْيَةً ۚ وَقَالُوْا رَبَّنَا لِمَ كَتَبْتَ عَلَيْنَا الْقِتَالَۚ لَوْلَآ اَخَّرْتَنَآ اِلٰٓى اَجَلٍ قَرِيْبٍۗ قُلْ مَتَاعُ الدُّنْيَا قَلِيْلٌۚ وَالْاٰخِرَةُ خَيْرٌ لِّمَنِ اتَّقٰىۗ وَلَا تُظْلَمُوْنَ فَتِيْلًا (النساء : ٤)

alam tara
أَلَمْ تَرَ
Have not you seen
நீர் பார்க்கவில்லையா?
ilā alladhīna
إِلَى ٱلَّذِينَ
[towards] those who
எவர்களை
qīla
قِيلَ
(when) it was said
கூறப்பட்டது
lahum
لَهُمْ
to them
அவர்களுக்கு
kuffū
كُفُّوٓا۟
"Restrain
தடுத்துக் கொள்ளுங்கள்
aydiyakum
أَيْدِيَكُمْ
your hands
உங்கள் கரங்களை
wa-aqīmū
وَأَقِيمُوا۟
and establish
இன்னும் நிலைநிறுத்துங்கள்
l-ṣalata
ٱلصَّلَوٰةَ
the prayer
தொழுகையை
waātū
وَءَاتُوا۟
and give
இன்னும் கொடுங்கள்
l-zakata
ٱلزَّكَوٰةَ
the zakah?"
ஸகாத்தை
falammā kutiba
فَلَمَّا كُتِبَ
Then when was ordained
விதிக்கப்பட்ட போது
ʿalayhimu
عَلَيْهِمُ
on them
அவர்கள் மீது/
l-qitālu idhā
ٱلْقِتَالُ إِذَا
the fighting then
போர்/அப்போது
farīqun
فَرِيقٌ
a group
ஒரு பிரிவினர்
min'hum
مِّنْهُمْ
of them
அவர்களில்
yakhshawna
يَخْشَوْنَ
[they] fear
பயப்படுகின்றனர்
l-nāsa
ٱلنَّاسَ
the people
மக்களை
kakhashyati
كَخَشْيَةِ
as (they) fear
பயப்படுவதுபோல்
l-lahi
ٱللَّهِ
Allah
அல்லாஹ்வை
aw
أَوْ
or
அல்லது
ashadda
أَشَدَّ
more intense
மிகக் கடுமையாக
khashyatan
خَشْيَةًۚ
fear
பயத்தால்
waqālū
وَقَالُوا۟
and they said
இன்னும் கூறினார்கள்
rabbanā
رَبَّنَا
"Our Lord
எங்கள் இறைவா
lima katabta
لِمَ كَتَبْتَ
why have You ordained
ஏன் விதித்தாய்
ʿalaynā
عَلَيْنَا
upon us
எங்கள் மீது
l-qitāla
ٱلْقِتَالَ
[the] fighting?
போரை
lawlā akhartanā
لَوْلَآ أَخَّرْتَنَآ
Why not You postpone (it for) us
எங்களை நீ பிற்படுத்த வேண்டாமா?
ilā
إِلَىٰٓ
to
வரை
ajalin
أَجَلٍ
a term"
ஒரு தவணை
qarībin
قَرِيبٍۗ
near"
சமீபமாக
qul
قُلْ
Say
கூறுவீராக
matāʿu
مَتَٰعُ
"Enjoyment
இன்பம்
l-dun'yā
ٱلدُّنْيَا
(of) the world
உலகத்தின்
qalīlun
قَلِيلٌ
(is) little
அற்பமானது
wal-ākhiratu
وَٱلْءَاخِرَةُ
and the Hereafter
மறுமை
khayrun
خَيْرٌ
(is) better
மேலானது
limani
لِّمَنِ
for whoever
எவருக்கு
ittaqā
ٱتَّقَىٰ
fears (Allah)
அஞ்சினார்
walā tuẓ'lamūna
وَلَا تُظْلَمُونَ
and not you will be wronged
அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள்
fatīlan
فَتِيلًا
(even as much as) a hair on a date-seed"
ஒரு நூலும்

Transliteration:

Alam tara ilal lazeena qeela lahum kuffooo aidiyakum wa aqeemus Salaata w aaatuz Zakaata falammaa kutiba 'alaihimul qitaalu izaa fareequm minhum yakhshawnnan naasa kakhashyatil laahi aw ashadda khashyah; wa qaaloo Rabbanaa lima katabta 'alainal qitaala law laaa akhkhartanaa ilaaa ajalin qareeb; qul mataa'ud dunyaa qaleelunw wal Aakhiratu khairul limanit taqaa wa laa tuzlamoona fateelaa (QS. an-Nisāʾ:77)

English Sahih International:

Have you not seen those who were told, "Restrain your hands [from fighting] and establish prayer and give Zakah"? But then when battle was ordained for them, at once a party of them feared men as they fear Allah or with [even] greater fear. They said, "Our Lord, why have You decreed upon us fighting? If only You had postponed [it for] us for a short time." Say, "The enjoyment of this world is little, and the Hereafter is better for he who fears Allah. And injustice will not be done to you, [even] as much as a thread [inside a date seed]." (QS. An-Nisa, Ayah ௭௭)

Abdul Hameed Baqavi:

உங்களுடைய கைகளைத் (தற்சமயம் போர் புரியாது) தடுத்துக் கொண்டும், தொழுகையை உறுதியாகக் கடைப்பிடித்தும், ஜகாத்தைக் கொடுத்தும் வாருங்களென்று எவர்களுக்குக் கூறப்பட்டதோ அவர்களை நீங்கள் பார்க்கவில்லையா? போர்புரிய அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டபொழுது அவர்களில் ஒரு பிரிவினரோ அல்லாஹ்வுக்குப் பயப்படுவதைப்போல் அல்லது அதைவிட அதிகமாகவே மனிதர்களுக்குப் பயந்து "எங்கள் இறைவனே! ஏன் எங்கள் மீது போரைக் கடமையாக்கினாய்? இன்னும் சிறிது காலத்திற்கு இதனைப் பிற்படுத்த வேண்டாமா?" என்று கூற ஆரம்பித்துவிட்டார்கள். (இதற்கு நபியே!) நீங்கள் கூறுங்கள்: "இவ்வுலக வாழ்க்கை வெகு அற்பமானதே! எவன் (அல்லாஹ்வுக்குப்) பயந்து நடக்கின்றானோ அவனுக்கு மறுமை(யின் வாழ்க்கை)தான் மிக மேலானது. (உங்களுடைய நன்மையைக் குறைத்தோ, பாவத்தைக் கூட்டியோ) நீங்கள் ஓர் நூலளவும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௭௭)

Jan Trust Foundation

“உங்களுடைய கைகளை(ப் போர் செய்வதினின்றும்) தடுத்துக் கொண்டும், தொழுகையை நிலைநிறுத்தியும், ஜகாத்தை கொடுத்தும் வருவீர்களாக!” என்று எவர்களுக்குக் கூறப்பட்டதோ அவர்களை (நபியே!) நீங்கள் பார்க்கவில்லையா? பின்னர், போர் செய்ய வேண்டும் என்று அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டபோது, அவர்களில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வுக்குப் பயப்படுபவதைப் போல் அல்லது அதைவிட அதிகமாகவே மனிதர்களுக்குப் பயப்பட்டு; “எங்கள் இறைவனே! எங்கள் மீது ஏன் (இப்) போரை விதியாக்கினாய்? சிறிது காலம் எங்களுக்காக இதைப் பிற்படுத்தியிருக்கக் கூடாதா? என்று கூறலானார்கள். (நபியே!) நீர் கூறுவீராக| “இவ்வுலக இன்பம் அற்பமானது, மறுவுலக(இன்ப)ம், பயபக்தியுடையோருக்கு மிகவும் மேலானது; நீங்கள் எள்ளளவேனும் அநியாயம் செய்யப்படமாட்டீர்கள்.”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உங்கள் கைகளைத் தடுத்துக் கொள்ளுங்கள், தொழுகையை நிலை நிறுத்துங்கள், ஜகாத்தை கொடுங்கள் என்று கூறப்பட்டவர்களை நீர் பார்க்க வில்லையா? போர் அவர்கள் மீது விதிக்கப்பட்டபோது, அப்போது அவர்களில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வை பயப்படுவதைப்போல் அல்லது பயத்தால் (அதைவிட) மிகக் கடுமையாக மக்களைப் பயப்படுகின்றனர். “எங்கள் இறைவா! ஏன் எங்கள் மீது போரை விதித்தாய்? இன்னும் சமீபமான ஒரு தவணை வரை எங்களை நீ பிற்படுத்த வேண்டாமா?” என்று கூறினார்கள். (நபியே!) கூறுவீராக: “உலகத்தின் இன்பம் அற்பமானது! அல்லாஹ்வை அஞ்சியவருக்கு மறுமை மேலானது. (அங்கு நீங்கள்) ஒரு நூலும் (அதன் அளவுகூட) அநீதி இழைக்கப்படமாட்டீர்கள்.