குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௬௧
Qur'an Surah An-Nisa Verse 61
ஸூரத்துன்னிஸாவு [௪]: ௬௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاِذَا قِيْلَ لَهُمْ تَعَالَوْا اِلٰى مَآ اَنْزَلَ اللّٰهُ وَاِلَى الرَّسُوْلِ رَاَيْتَ الْمُنٰفِقِيْنَ يَصُدُّوْنَ عَنْكَ صُدُوْدًاۚ (النساء : ٤)
- wa-idhā qīla
- وَإِذَا قِيلَ
- And when it is said
- கூறப்பட்டால்
- lahum
- لَهُمْ
- to them
- அவர்களுக்கு
- taʿālaw
- تَعَالَوْا۟
- "Come
- வாருங்கள்
- ilā
- إِلَىٰ
- to
- பக்கம்
- mā anzala
- مَآ أَنزَلَ
- what (has) revealed
- எதை/இறக்கினான்
- l-lahu
- ٱللَّهُ
- Allah
- அல்லாஹ்
- wa-ilā l-rasūli
- وَإِلَى ٱلرَّسُولِ
- and to the Messenger"
- இன்னும் பக்கம்/தூதர்
- ra-ayta
- رَأَيْتَ
- you see
- காண்பீர்
- l-munāfiqīna
- ٱلْمُنَٰفِقِينَ
- the hypocrites
- நயவஞ்சகர்களை
- yaṣuddūna
- يَصُدُّونَ
- turning away
- புறக்கணிக்கிறார்கள்
- ʿanka
- عَنكَ
- from you
- உம்மை விட்டு
- ṣudūdan
- صُدُودًا
- (in) aversion
- புறக்கணித்தல்
Transliteration:
Wa izaa qeela lahum ta'aalaw ilaa maaa anzalallaahu wa ilar Rasooli ra aital munaafiqeena yasuddoona 'anka sudoodaa(QS. an-Nisāʾ:61)
English Sahih International:
And when it is said to them, "Come to what Allah has revealed and to the Messenger," you see the hypocrites turning away from you in aversion. (QS. An-Nisa, Ayah ௬௧)
Abdul Hameed Baqavi:
"(நியாயம் பெற) அல்லாஹ் இறக்கிய (வேதத்)தின் பக்கம், (அவனது) தூதரின் பக்கம் நீங்கள் வாருங்கள். (அந்த ஷைத்தானிடம் செல்லாதீர்கள்.)" என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் அந் நயவஞ்சகர்கள் உங்களைவிட்டு முற்றிலும் விலகிவிடுவதையே நீங்கள் காண்பீர்கள். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௬௧)
Jan Trust Foundation
மேலும் அவர்களிடம்| “அல்லாஹ் இறக்கிய (வேதத்)தின் பக்கமும், (அவனுடைய) தூதரின் பக்கமும் (தீர்ப்புப் பெற) வாருங்கள்” என்று கூறப்பட்டால், அந்த முனாஃபிக்குகள் (நயவஞ்சகர்கள்) உம்மிடமிருந்து முற்றிலும் நீங்கிக் கொள்வதையே நீர் பார்ப்பீர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
"(நியாயம் பெற) அல்லாஹ் இறக்கிய (வேதத்)தின் பக்கமும், (அவனது) தூதரின் பக்கமும் நீங்கள் வாருங்கள். (அந்த தீயவனிடம் செல்லாதீர்கள்.)" என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் அந்நயவஞ்சகர்களை அவர்கள் உம்மைவிட்டு முற்றிலும் புறக்கணிப்பதையே நீர் காண்பீர்.