குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௫௮
Qur'an Surah An-Nisa Verse 58
ஸூரத்துன்னிஸாவு [௪]: ௫௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
۞ اِنَّ اللّٰهَ يَأْمُرُكُمْ اَنْ تُؤَدُّوا الْاَمٰنٰتِ اِلٰٓى اَهْلِهَاۙ وَاِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ اَنْ تَحْكُمُوْا بِالْعَدْلِ ۗ اِنَّ اللّٰهَ نِعِمَّا يَعِظُكُمْ بِهٖ ۗ اِنَّ اللّٰهَ كَانَ سَمِيْعًاۢ بَصِيْرًا (النساء : ٤)
- inna l-laha
- إِنَّ ٱللَّهَ
- Indeed Allah
- நிச்சயமாக அல்லாஹ்
- yamurukum
- يَأْمُرُكُمْ
- orders you
- உங்களுக்குக் கட்டளையிடுகிறான்
- an tu-addū
- أَن تُؤَدُّوا۟
- to render
- நீங்கள் ஒப்படைத்து விடுவது
- l-amānāti
- ٱلْأَمَٰنَٰتِ
- the trusts
- அமானிதங்களை
- ilā
- إِلَىٰٓ
- to
- இடம்
- ahlihā
- أَهْلِهَا
- their owners
- அதன் சொந்தக்காரர்
- wa-idhā ḥakamtum
- وَإِذَا حَكَمْتُم
- and when you judge
- இன்னும் நீங்கள் தீர்ப்பளித்தால்
- bayna l-nāsi
- بَيْنَ ٱلنَّاسِ
- between the people
- இடையில்/மக்கள்
- an taḥkumū
- أَن تَحْكُمُوا۟
- to judge
- நீங்கள் தீர்ப்பளிப்பது
- bil-ʿadli
- بِٱلْعَدْلِۚ
- with justice
- நீதமாக
- inna l-laha
- إِنَّ ٱللَّهَ
- Indeed Allah
- நிச்சயமாக அல்லாஹ்
- niʿimmā
- نِعِمَّا
- excellently
- எது மிக சிறந்தது?
- yaʿiẓukum
- يَعِظُكُم
- advises you
- உங்களுக்கு உபதேசிக்கிறான்
- bihi
- بِهِۦٓۗ
- with it
- அதை
- inna l-laha
- إِنَّ ٱللَّهَ
- Indeed Allah
- நிச்சயமாக அல்லாஹ்
- kāna
- كَانَ
- is
- இருக்கிறான்
- samīʿan
- سَمِيعًۢا
- All-Hearing
- செவியுறுபவனாக
- baṣīran
- بَصِيرًا
- All-Seeing
- உற்று நோக்குபவனாக
Transliteration:
Innal laaha yaamurukum an tu'addul amaanaati ilaaa ahlihaa wa izaa hakamtum bainan naasi an tahkumoo bil 'adl; innal laaha yaamurukum an tu'addul amaanaati ilaaa ahlihaa wa izaa hakamtum bainan naasi an tahkumoo bil 'adl; innal laaha ni'immaa ya'izukum bih; innal laaha kaana Samee'am Baseera(QS. an-Nisāʾ:58)
English Sahih International:
Indeed, Allah commands you to render trusts to whom they are due and when you judge between people to judge with justice. Excellent is that which Allah instructs you. Indeed, Allah is ever Hearing and Seeing. (QS. An-Nisa, Ayah ௫௮)
Abdul Hameed Baqavi:
(நம்பிக்கையாளர்களே! உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட) அமானிதப் பொருள்களை அதன் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்படைத்து விடும்படியும், மனிதர்களுக்கிடையில் நீங்கள் தீர்ப்புக் கூறினால் (பாரபட்சமின்றி) நீதமாகவே தீர்ப்பளிக்குமாறும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். உங்களுக்கு அல்லாஹ் செய்யும் இவ்வுபதேசம் மெய்யாகவே எவ்வளவு சிறந்தது? நிச்சயமாக அல்லாஹ் செவியுறுபவனாகவும், உற்று நோக்கினவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௫௮)
Jan Trust Foundation
நம்பி உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்புவித்து விடவேண்டுமென்றும், மனிதர்களிடையே தீர்ப்பு கூறினால் நியாயமாகவே தீர்ப்புக் கூறுதல் வேண்டும் என்றும் உங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் கட்டளையிடுகிறான்; நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு (இதில்) மிகவும் சிறந்த உபதேசம் செய்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நம்பிக்கையாளர்களே! உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட) அமானிதங்களை அதன் சொந்தக்காரரிடம் நீங்கள் ஒப்படைத்து விடுவதற்கும், மக்களுக்கிடையில் நீங்கள் தீர்ப்பளித்தால் (பாரபட்சமின்றி) நீதமாக தீர்ப்பளிப்பதற்கும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். உங்களுக்கு அல்லாஹ் உபதேசிப்பது மிக சிறந்ததாகும்! நிச்சயமாக அல்லாஹ் செவியுறுபவனாக, உற்று நோக்குபவனாக இருக்கிறான்.