Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௫

Qur'an Surah An-Nisa Verse 5

ஸூரத்துன்னிஸாவு [௪]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَا تُؤْتُوا السُّفَهَاۤءَ اَمْوَالَكُمُ الَّتِيْ جَعَلَ اللّٰهُ لَكُمْ قِيٰمًا وَّارْزُقُوْهُمْ فِيْهَا وَاكْسُوْهُمْ وَقُوْلُوْا لَهُمْ قَوْلًا مَّعْرُوْفًا (النساء : ٤)

walā tu'tū
وَلَا تُؤْتُوا۟
And (do) not give
கொடுக்காதீர்கள்
l-sufahāa
ٱلسُّفَهَآءَ
the foolish
புத்திக் குறைவானவர்களுக்கு
amwālakumu
أَمْوَٰلَكُمُ
your wealth
செல்வங்களை/உங்கள்
allatī
ٱلَّتِى
which
எது
jaʿala
جَعَلَ
(was) made
ஆக்கினான்
l-lahu
ٱللَّهُ
(by) Allah
அல்லாஹ்
lakum
لَكُمْ
for you
உங்களுக்கு
qiyāman
قِيَٰمًا
a means of support
வாழ்வாதாரமாக
wa-ur'zuqūhum
وَٱرْزُقُوهُمْ
(but) provide (for) them
உணவளியுங்கள்
fīhā
فِيهَا
with it
அதில்/அவர்களுக்கு
wa-ik'sūhum
وَٱكْسُوهُمْ
and clothe them
இன்னும் ஆடை அணிவியுங்கள்/அவர்களுக்கு
waqūlū
وَقُولُوا۟
and speak
கூறுங்கள்
lahum
لَهُمْ
to them
அவர்களுக்கு
qawlan
قَوْلًا
words
சொல்லை
maʿrūfan
مَّعْرُوفًا
(of) kindness
நல்லது

Transliteration:

Wa laa tu'tus sufahaaa'a amwaalakumul latee ja'alal laahu lakum qiyaamanw-warzuqoohum feehaa waksoohum wa qooloo lahum qawlam ma'roofaa (QS. an-Nisāʾ:5)

English Sahih International:

And do not give the weak-minded your property, which Allah has made a means of sustenance for you, but provide for them with it and clothe them and speak to them words of appropriate kindness. (QS. An-Nisa, Ayah ௫)

Abdul Hameed Baqavi:

(அநாதைகளின் பொருளுக்குக் பொறுப்பாளரான நீங்கள் அந்த அனாதைகள்) புத்திக் குறைவானவர்களாயிருந்தால் வாழ்க்கைக்கே ஆதாரமாக அல்லாஹ் அமைத்திருக்கும் உங்களிடமுள்ள (அவர்களின்) பொருள்களை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். எனினும், (அவர்களுக்குப் போதுமான) உணவையும், அவர்களுக்கு (வேண்டிய) ஆடைகளையும், அதிலிருந்து கொடுத்து அவர்களுக்கு அன்பான வார்த்தைகளைக் கூறி (நல்லறிவைப் புகட்டி) வருவீர்களாக! (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௫)

Jan Trust Foundation

(அநாதைகளின் பொருளுக்கு நீங்கள் மேலாளராக ஏற்பட்டால்) அவர்கள் புத்தி குறைவானவர்களாகயிருப்பின் (வாழ்க்கைக்கு) ஆதாரமாக அல்லாஹ் உங்களிடம் ஆக்கித் தந்த செல்வத்தை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம் - எனினும், அவர்களுக்கு அதிலிருந்து உணவளியுங்கள்; ஆடையும் அளியுங்கள்; இன்னும் அவர்களிடம் கனிவான வார்த்தைகள் கொண்டே பேசுங்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அநாதைகளின் பொறுப்பாளர்களே!) உங்களுக்கு வாழ்வாதாரமாக அல்லாஹ் ஆக்கிய உங்கள் செல்வங்களை புத்திக் குறைவானவர்களுக்கு கொடுக்காதீர்கள். அவற்றில் அவர்களுக்கு உணவளியுங்கள், அவர்களுக்கு ஆடை அணிவியுங்கள், அவர்களுக்கு (அன்பான) நல்ல சொல்லைக் கூறுங்கள்!