Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௪௮

Qur'an Surah An-Nisa Verse 48

ஸூரத்துன்னிஸாவு [௪]: ௪௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّ اللّٰهَ لَا يَغْفِرُ اَنْ يُّشْرَكَ بِهٖ وَيَغْفِرُ مَا دُوْنَ ذٰلِكَ لِمَنْ يَّشَاۤءُ ۚ وَمَنْ يُّشْرِكْ بِاللّٰهِ فَقَدِ افْتَرٰٓى اِثْمًا عَظِيْمًا (النساء : ٤)

inna l-laha
إِنَّ ٱللَّهَ
Indeed Allah
நிச்சயமாக அல்லாஹ்
lā yaghfiru
لَا يَغْفِرُ
(does) not forgive
மன்னிக்க மாட்டான்
an yush'raka
أَن يُشْرَكَ
that partners be associated
இணை வைக்கப்படுவதை
bihi
بِهِۦ
with Him
அவனுக்கு
wayaghfiru
وَيَغْفِرُ
but He forgives
இன்னும் மன்னிப்பான்
mā dūna
مَا دُونَ
from other than
எது/தவிர
dhālika
ذَٰلِكَ
that
இது
liman
لِمَن
for whom
எவருக்கு
yashāu
يَشَآءُۚ
He wills
நாடுகிறான்
waman
وَمَن
And whoever
எவர்
yush'rik
يُشْرِكْ
associates partners
இணைவைப்பார்
bil-lahi
بِٱللَّهِ
with Allah
அல்லாஹ்விற்கு
faqadi
فَقَدِ
then surely
திட்டமாக
if'tarā
ٱفْتَرَىٰٓ
he has fabricated
புனைந்து விட்டார்
ith'man
إِثْمًا
a sin
பாவத்தை
ʿaẓīman
عَظِيمًا
tremendous
பெரும்

Transliteration:

Innal laaha laa yaghfiru ai yushraka bihee wa yaghfiru maa doona zaalika limai yashaaa'; wa mai yushrik billaahi faqadif taraaa isman 'azeemaa (QS. an-Nisāʾ:48)

English Sahih International:

Indeed, Allah does not forgive association with Him, but He forgives what is less than that for whom He wills. And he who associates others with Allah has certainly fabricated a tremendous sin. (QS. An-Nisa, Ayah ௪௮)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவே மாட்டான். இதனைத் தவிர (மற்ற) எதனையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான். எவர்கள் அல்லாஹ்வுக்கு இணைவைக்கின்றார்களோ அவர்கள் நிச்சயமாக மிகப் பெரும் பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௪௮)

Jan Trust Foundation

நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்க மாட்டான். இதைத் தவிர உள்ளதை தான் நாடியவருக்கு மன்னிப்பான். எவர் அல்லாஹ்விற்கு இணைவைப்பாரோ (அவர்) திட்டமாக பெரும் பாவத்தை புனைந்துவிட்டார்.