Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௪௧

Qur'an Surah An-Nisa Verse 41

ஸூரத்துன்னிஸாவு [௪]: ௪௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَكَيْفَ اِذَا جِئْنَا مِنْ كُلِّ اُمَّةٍۢ بِشَهِيْدٍ وَّجِئْنَا بِكَ عَلٰى هٰٓؤُلَاۤءِ شَهِيْدًاۗ (النساء : ٤)

fakayfa
فَكَيْفَ
So how (will it be)
எவ்வாறிருக்கும்?
idhā ji'nā
إِذَا جِئْنَا
when We bring
நாம் வந்தால்
min
مِن
from
இருந்து
kulli
كُلِّ
every
ஒவ்வொரு
ummatin
أُمَّةٍۭ
nation
சமுதாயம்
bishahīdin
بِشَهِيدٍ
a witness
ஒரு சாட்சியைக் கொண்டு
waji'nā
وَجِئْنَا
and We bring
இன்னும் நாம் வந்தோம்
bika
بِكَ
you
உம்மை கொண்டு
ʿalā
عَلَىٰ
against
மீது
hāulāi
هَٰٓؤُلَآءِ
these (people)
இவர்கள்
shahīdan
شَهِيدًا
(as) a witness
சாட்சியாக

Transliteration:

Fakaifa izaa ji'naa min kulli ummatim bishaheedinw wa ji'naabika 'alaa haaa'ulaaa 'i Shaheedan (QS. an-Nisāʾ:41)

English Sahih International:

So how [will it be] when We bring from every nation a witness and We bring you, [O Muhammad], against these [people] as a witness? (QS. An-Nisa, Ayah ௪௧)

Abdul Hameed Baqavi:

(நபியே!) ஒவ்வொரு சமூகத்தினரும் (தங்கள்) சாட்சி(களாகிய தங்கள் நபிமார்)களுடன் நம்மிடம் வரும் சமயத்தில் உங்களை இவர்கள் அனைவருக்கும் சாட்சியாக நாம் கொண்டு வந்தால் (உங்களை நிராகரித்த இவர்களுடைய நிலைமை) எவ்வாறிருக்கும்? (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௪௧)

Jan Trust Foundation

எனவே (நபியே!) ஒவ்வொரு கூட்டத்தினரையும் (அவர்களுடைய) சாட்சியுடன் நாம் கொண்டுவரும்போது, நாம் இவர்கள் மீது சாட்சியாக உம்மையும் கொண்டு வந்தால் (உம்மை நிராகரிக்கும் இவர்களின் நிலைமை) எப்படி இருக்கும்?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் ஒரு சாட்சியை நாம் கொண்டு வந்தால் இன்னும் உம்மை இவர்கள் மீது சாட்சியாக நாம் கொண்டு வந்தால் (உம்மை நிராகரித்த இவர்களின் நிலைமை) எவ்வாறிருக்கும்?