Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௪

Qur'an Surah An-Nisa Verse 4

ஸூரத்துன்னிஸாவு [௪]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاٰتُوا النِّسَاۤءَ صَدُقٰتِهِنَّ نِحْلَةً ۗ فَاِنْ طِبْنَ لَكُمْ عَنْ شَيْءٍ مِّنْهُ نَفْسًا فَكُلُوْهُ هَنِيْۤـًٔا مَّرِيْۤـًٔا (النساء : ٤)

waātū
وَءَاتُوا۟
And give
கொடுங்கள்
l-nisāa
ٱلنِّسَآءَ
the women
பெண்களுக்கு
ṣaduqātihinna
صَدُقَٰتِهِنَّ
their dower
மணக்கொடைகளை /அவர்களுடைய
niḥ'latan
نِحْلَةًۚ
graciously
கடமையாக
fa-in ṭib'na
فَإِن طِبْنَ
But if they remit
அவர்கள் விரும்பினால்
lakum
لَكُمْ
to you
உங்களுக்கு
ʿan shayin
عَن شَىْءٍ
of anything
ஒரு சிறிதை
min'hu
مِّنْهُ
of it
அதிலிருந்து
nafsan
نَفْسًا
(on their) own
மனதால்
fakulūhu
فَكُلُوهُ
then eat it
அதைப் புசியுங்கள்
hanīan
هَنِيٓـًٔا
(in) satisfaction
இன்பமாக
marīan
مَّرِيٓـًٔا
(and) ease
மகிழ்ச்சியாக

Transliteration:

Wa aatun nisaaa'a sadu qaatihinna nihlah; fa in tibna lakum 'an shai'im minhu nafsan fakuloohu hanee'am mareee'aa (QS. an-Nisāʾ:4)

English Sahih International:

And give the women [upon marriage] their [bridal] gifts graciously. But if they give up willingly to you anything of it, then take it in satisfaction and ease. (QS. An-Nisa, Ayah ௪)

Abdul Hameed Baqavi:

நீங்கள் (திருமணம் செய்துகொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய "மஹரை" (திருமணக் கட்டணத்தை)க் கண்ணியமான முறையில் கொடுத்து விடுங்கள். அதிலிருந்து ஒரு சிறிதை அவர்கள் (தங்கள்) மனமாற உங்களுக்கு விட்டுக் கொடுத்தால் அதனை நீங்கள் மகிழ்ச்சியுடன் புசிக்கலாம். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௪)

Jan Trust Foundation

நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை)களை மகிழ்வோடு (கொடையாக) கொடுத்துவிடுங்கள் - அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக, மகிழ்வுடன் புசியுங்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பெண்களுக்கு அவர்களுடைய மணக்கொடைகளைக் கடமையாக (மகிழ்வுடன்) கொடுங்கள். அதிலிருந்து ஒரு சிறிதை அவர்கள் உங்களுக்கு (விட்டுக் கொடுக்க) மனதால் விரும்பினால் மகிழ்ச்சியாக, இன்பமாக அதை புசியுங்கள்.