Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௩௬

Qur'an Surah An-Nisa Verse 36

ஸூரத்துன்னிஸாவு [௪]: ௩௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

۞ وَاعْبُدُوا اللّٰهَ وَلَا تُشْرِكُوْا بِهٖ شَيْـًٔا وَّبِالْوَالِدَيْنِ اِحْسَانًا وَّبِذِى الْقُرْبٰى وَالْيَتٰمٰى وَالْمَسٰكِيْنِ وَالْجَارِ ذِى الْقُرْبٰى وَالْجَارِ الْجُنُبِ وَالصَّاحِبِ بِالْجَنْۢبِ وَابْنِ السَّبِيْلِۙ وَمَا مَلَكَتْ اَيْمَانُكُمْ ۗ اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ مَنْ كَانَ مُخْتَالًا فَخُوْرًاۙ (النساء : ٤)

wa-uʿ'budū
وَٱعْبُدُوا۟
And worship
வணங்குங்கள்
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்வை
walā tush'rikū
وَلَا تُشْرِكُوا۟
And (do) not associate
இன்னும் இணையாக்காதீர்கள்
bihi
بِهِۦ
with Him
அவனுக்கு
shayan
شَيْـًٔاۖ
anything
எதையும்
wabil-wālidayni
وَبِٱلْوَٰلِدَيْنِ
and to the parents
இன்னும் தாய் தந்தைக்கு
iḥ'sānan
إِحْسَٰنًا
(do) good
நன்மை செய்யுங்கள்
wabidhī l-qur'bā
وَبِذِى ٱلْقُرْبَىٰ
and with the relatives
இன்னும் உறவினருக்கு
wal-yatāmā
وَٱلْيَتَٰمَىٰ
and the orphans
இன்னும் அநாதைகள்
wal-masākīni
وَٱلْمَسَٰكِينِ
and the needy
இன்னும் ஏழைகள்
wal-jāri
وَٱلْجَارِ
and the neighbor
இன்னும் அண்டைவீட்டார்
dhī l-qur'bā
ذِى ٱلْقُرْبَىٰ
(who is) near
உறவினர்
wal-jāri
وَٱلْجَارِ
and the neighbor
இன்னும் அண்டைவீட்டார்
l-junubi
ٱلْجُنُبِ
(who is) farther away
அந்நியர்
wal-ṣāḥibi
وَٱلصَّاحِبِ
and the companion
இன்னும் நண்பர்
bil-janbi
بِٱلْجَنۢبِ
by your side
அருகில் இருக்கும்
wa-ib'ni l-sabīli
وَٱبْنِ ٱلسَّبِيلِ
and the traveler
இன்னும் பயணி(கள்)
wamā malakat
وَمَا مَلَكَتْ
and what possess[ed]
இன்னும் எவர்/ சொந்தமாக்கின
aymānukum
أَيْمَٰنُكُمْۗ
your right hands
உங்கள் வலக்கரங்கள்
inna l-laha
إِنَّ ٱللَّهَ
Indeed Allah
நிச்சயமாக அல்லாஹ்
lā yuḥibbu
لَا يُحِبُّ
(does) not love
நேசிக்க மாட்டான்
man kāna
مَن كَانَ
(the one) who is
எவன்/இருக்கிறான்
mukh'tālan
مُخْتَالًا
[a] proud
கர்வமுடையவனாக
fakhūran
فَخُورًا
(and) [a] boastful
பெருமையுடையவனாக

Transliteration:

Wa'budul laaha wa laa tushrikoo bihee shai'anw wa bilwaalidaini ihsaananw wa bizil qurbaa walyataamaa walmasaakeeni waljaari zilqurbaa waljaaril junubi wassaahibi biljambi wabnis sabeeli wa maa malakat aimaanukum; innal laaha laa yuhibbu man kaana mukhtaalan fakhooraa (QS. an-Nisāʾ:36)

English Sahih International:

Worship Allah and associate nothing with Him, and to parents do good, and to relatives, orphans, the needy, the near neighbor, the neighbor farther away, the companion at your side, the traveler, and those whom your right hands possess. Indeed, Allah does not like those who are self-deluding and boastful, (QS. An-Nisa, Ayah ௩௬)

Abdul Hameed Baqavi:

அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனுக்கு யாதொன்றையும் இணையாக்காதீர்கள். தாய், தந்தைக்கு நன்றி செய்யுங்கள். (அவ்வாறே) உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அந்நிய அண்டை வீட்டாருக்கும், (எப்பொழுதும்) உங்களுடன் இருக்கக் கூடிய நண்பர்களுக்கும், பயணிகளுக்கும், உங்களிடம் உள்ள அடிமைகளுக்கும், (அன்புடன் நன்றி செய்யுங்கள்.) எவன் கர்வம் கொண்டு பெருமையாக நடக்கின்றானோ அவனை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை. (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௩௬)

Jan Trust Foundation

மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ்வை வணங்குங்கள். அவனுக்கு எதையும் இணையாக்காதீர்கள். தாய், தந்தைக்கும், உறவினருக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், உறவினரான அண்டைவீட்டாருக்கும், அந்நியரான அண்டை வீட்டாருக்கும், அருகில் இருக்கும் நண்பருக்கும், பயணிக்கும், உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கியவர்களுக்கும் நன்மை செய்யுங்கள். கர்வமுடையவனாக, பெருமையுடையவனாக இருப்பவனை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கமாட்டான்.