குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௩௩
Qur'an Surah An-Nisa Verse 33
ஸூரத்துன்னிஸாவு [௪]: ௩௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلِكُلٍّ جَعَلْنَا مَوَالِيَ مِمَّا تَرَكَ الْوَالِدٰنِ وَالْاَقْرَبُوْنَ ۗ وَالَّذِيْنَ عَقَدَتْ اَيْمَانُكُمْ فَاٰتُوْهُمْ نَصِيْبَهُمْ ۗ اِنَّ اللّٰهَ كَانَ عَلٰى كُلِّ شَيْءٍ شَهِيْدًا ࣖ (النساء : ٤)
- walikullin
- وَلِكُلٍّ
- And for all
- ஒவ்வொருவருக்கும்
- jaʿalnā
- جَعَلْنَا
- We (have) made
- ஆக்கினோம்
- mawāliya
- مَوَٰلِىَ
- heirs
- வாரிசுகளை
- mimmā taraka
- مِمَّا تَرَكَ
- of what (is) left
- எதில்/விட்டுச்சென்றார்
- l-wālidāni
- ٱلْوَٰلِدَانِ
- (by) the parents
- தாய், தந்தை
- wal-aqrabūna
- وَٱلْأَقْرَبُونَۚ
- and the relatives
- இன்னும் நெருங்கிய உறவினர்கள்
- wa-alladhīna
- وَٱلَّذِينَ
- And those whom
- எவர்கள்
- ʿaqadat
- عَقَدَتْ
- pledged
- ஒப்பந்தம் செய்தன
- aymānukum
- أَيْمَٰنُكُمْ
- your right hands -
- உங்கள் சத்தியங்கள்
- faātūhum
- فَـَٔاتُوهُمْ
- then give them
- கொடுத்து விடுங்கள்/அவர்களுக்கு
- naṣībahum
- نَصِيبَهُمْۚ
- their share
- பங்கை/அவர்களின்
- inna l-laha
- إِنَّ ٱللَّهَ
- Indeed Allah
- நிச்சயமாக அல்லாஹ்
- kāna ʿalā
- كَانَ عَلَىٰ
- is over
- இருக்கிறான்/மீது
- kulli shayin
- كُلِّ شَىْءٍ
- every thing
- எல்லாம்/பொருள்
- shahīdan
- شَهِيدًا
- a Witness
- சாட்சியாளனாக
Transliteration:
Wa likullin ja'alnaa ma waaliya mimmaa tarakal waalidaani wal aqraboon; wallazeena 'aqadat aimaanukum fa aatoohum naseebahum; innal laaha kaana 'alaa kulli shai'in Shaheedaa(QS. an-Nisāʾ:33)
English Sahih International:
And for all, We have made heirs to what is left by parents and relatives. And to those whom your oaths have bound [to you] – give them their share. Indeed Allah is ever, over all things, a Witness. (QS. An-Nisa, Ayah ௩௩)
Abdul Hameed Baqavi:
தாய், தந்தை, உறவினர்கள் அல்லது நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்டவர்கள் விட்டுச் செல்லும் ஒவ்வொரு பொருளுக்கும் (விகிதப்படி அவர்களுடைய சொத்தை அடையக்கூடிய) வாரிசுகளை நாம் குறிப்பிட்டே இருக்கின்றோம். ஆகவே, அவர்களுடைய பாகத்தை அவர்களுக்குக் கொடுத்து விடவும். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்து கொள்ளக் கூடியவனாகவே இருக்கின்றான். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௩௩)
Jan Trust Foundation
இன்னும், தாய் தந்தையரும், நெருங்கிய பந்துக்களும் விட்டுச் செல்கின்ற செல்வத்திலிருந்து (விகிதப்படி அதையடையும்) வாரிசுகளை நாம் குறிப்பாக்கியுள்ளோம்; அவ்வாறே நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்டோருக்கும் அவர்களுடைய பாகத்தை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாளனாக இருக்கிறான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
தாய், தந்தை, நெருங்கிய உறவினர்கள் விட்டுச் சென்ற (சொத்)தில் (அவர்களில்) ஒவ்வொருவருக்கும் வாரிசுகளை ஆக்கினோம். உங்கள் சத்தியங்கள் (மூலம் நீங்கள்) ஒப்பந்தம் செய்தவர்கள், அவர்களுக்கு அவர்களின் பங்கை கொடுத்து விடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள் மீதும் சாட்சியாளனாக இருக்கிறான்.